பிக்பாஸ் டைட்டிலை விட இதுதான் எனக்கு சந்தோஷம்.. முகென் ராவ்..

பிக்பாஸ் டைட்டிலை விட இதுதான் எனக்கு சந்தோஷம்.. முகென் ராவ்..

கடந்த 105 நாட்களாக நடந்து முடிந்த Bigg boss  நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் எவ்வளவோ அதிர்ச்சிகள் நடந்து முடிந்துள்ளது 

அதில் ஆனந்த அதிர்ச்சியாக ஒரே ஒரு விஷயம் நடந்தது என்றால் அது நேர்மையாகவும் அதே சமயம் சக போட்டியாளர்கள் உடன் அன்பாகவும் சலனம் இல்லாத ஒரே காதல் அது sparkle உடன் மட்டுமே என்று இறுதி வரை உறுதியாக இருந்தவர் முகேன். அவருக்கே வின்னர் பட்டம் கிடைத்தது அனைவருக்குமே ஆறுதலாக இருந்தது 

ஏனெனில் ஓட்டுக்கள் தான் கணக்கு என்பதால் எங்கே கவின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து தர்ஷனை வெளியேற்றியது போல லாஸ்லியா விற்கு வின்னர் பட்டம் கொடுப்பர்களோ என்கிற பதட்டம் இறுதி வரை இருந்தது.

நல்லவேளையாக முகேன் ராவ்  , 23 வயது நேர்மையும் உண்மையான போட்டியாளர் எல்லோர் மனதையும் வென்றதை போலவே போட்டியிலும் வென்றிருக்கிறார் 

 

 

 

twitter

பட்டம் வென்ற உடன் முதல் வேலையாக டிவிட்டரில் தன்னை ஜெயிக்க வைத்த உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து முகேன் டிவீட் செய்திருக்கிறார்.

இந்நிலையில் முகென் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், " என் மீது உண்மையான அன்பு வைத்து, எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. கமல் சார், விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த டைட்டிலை வென்றதை விட, உங்கள் அனைவரின் இதயத்தையும் வென்றதில் தான் எனக்கு பெருமை", என முகேன் தெரிவித்துள்ளார்.

எந்த தலைக்கனமும் இல்லாமல் முகேன் இப்போது இருப்பதை போலவே எப்போதும் இருக்க வேண்டும் என்பதே மக்களின் ஆசை 

100 நாட்களில் கடைசி 50 நாட்களில் மக்கள் மனதில் இடம் பிடித்த முகெனை நிறையவே மிஸ் செய்கிறோம் ..

எப்போதும் எங்களுக்கு பிடித்த உங்கள் தூய்மையான புன்னகையுடன் எங்களுடன் இருங்கள் முகென் ராவ்.

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!