logo
ADVERTISEMENT
home / ஆரோக்கியம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவுகளை விட கர்ப்ப காலத்தில் பெண்கள் சற்று அதிக கவனத்தோடே உணவுகளை(pregnant food)  எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அந்த உணவுகளில் போதிய சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும். இந்த உணவு தாய்க்கு மட்டுமல்லாது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தேவையான போஷாக்கைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும்.நீங்கள் தற்போது கர்ப்ப காலத்தில் இருகின்றீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். உங்களுக்கு உதவ, இங்கே நீங்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவை பற்றிய ஒரு பயனுள்ள தொகுப்பு. இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

கர்ப்பிணி பெண்களுக்கு குறிப்புகள்(General Tips for Pregnant Woman)

சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, ஒரு சில பொதுவான விடயங்களையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அப்படி என்ன அந்த குறிப்புகள்? இங்கே உங்களுக்காக

காலை உணவை மறக்காதீர்கள்

இன்று பல பெண்கள் அலுவலகத்திற்கு செல்கின்றனர். பொதுவாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் காலை உணவை தவிர்த்தோ விடுகின்றனர். அல்லது சரியாக சாபிடுவது இல்லை. அதிலும், கர்பமாக இருந்தாலும், பெண்கள் இன்று அதிகம் வேலைக்கு செல்லத் தான் முயற்சி செய்கின்றனர். அதனால், வழக்கம் போல, காலை உணவை தவிர்க்க முயற்சிகின்றனர். இப்படி ஒரு பக்கம் இருக்க, வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் காலை நீரத்தில் அவர்களுக்கு ஏற்படும் சோர்வு மற்றும் சில உடல் உபாதை காரணங்களால், காலை உணவை தவிர்க்க முயற்சிக்கின்றனர். அனால், எதுவாக இருந்தாலும், எந்த காரணம் கொண்டும் காலை உணவை தவிர்க்கக் கூடாது என்பதில் உறுதியோடு இருக்க வேண்டும். சிறிதளவாயினும் கட்டாயம் காலையில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

நார் சத்து நிறைந்த உணவு

கர்ப்பிணி பெண்கள் நலல் நார் சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நார் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு, பீன்ஸ், காரட், அவரைக்காய், என்று மேலும் பல உள்ளன. இவை மலசிக்கலை போக்கி, நல்ல ஜீரணத்தை உண்டாக்கி, உடலுக்குத் தேவையான சத்துக்களை பெற உதவும்.

ADVERTISEMENT

ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்வு செய்ய வேண்டும்

தினமும், மாலை நேரங்களில், அல்லது பகல் நேரங்களில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று கரிபிணி பெண்களுக்குத் தோன்றும். அப்படி தோன்றும் போது, சில சிற்றுண்டிகளை சாப்பிட எண்ணுவார்கள். ஆனால், ஏதோ கடைகளில் கிடைக்கின்ற எண்ணை பொருட்கள் மற்றும் பதப்படுத்தில் பொருட்களை வாங்கி சாப்பிடாமல், வீட்டில் தயார் செய்யப்பட்ட மற்றும் பாரம்பரிய சிற்றுண்டிகளை சாப்பிடுவது நல்ல சத்தையும், உடலுக்குத் தேவையான சத்தையும் பெற உதவும். குறிப்பாக கடலை மிட்டாய், ஊற வைத்து அவித்த பயிர் வகைகள், தேங்காய் பர்பி என்று பல. மேலும் பழச்சாறுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

மது மற்றும் புகையிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

பெரும்பாலும் பெண்கள் இந்த பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தாலும், இன்று மாறி வரும் கலாசார நிலையில், சில பெண்கள் மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அப்படி ஏதாவது பழக்கங்கள் இருந்தாலும், நீங்கள் கர்ப்ப காலத்தில் முற்றிலும் அவற்றை தவிர்த்து விட வேண்டும். இது தாய் மற்றும் சேய் இருவருக்கும் பாதுகாப்பான கர்ப்ப காலத்தை உண்டாக்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும்.

மீன் எடுத்துக் கொள்ளலாம்

 முடிந்த வரை வாரம் இரு முறையாவது மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலுக்குத் தேவையான ஒமேக 3 அமிலம் மற்றும் பிற சத்துகளை பெற உதவும். மேலும் மீனில் இருக்கும் கொழுப்பு சத்து உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.

இறைச்சி மற்றும் சீஸ் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளவும்

ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சீஸ் அதிகம் கலந்த உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.

ADVERTISEMENT

காபீயை குறைத்துக் கொள்ளவும்

காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் சோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.

ShutterStock

அதிக நீர் அருந்தவும்

 கர்ப்ப காலத்தில் உடலில் நீர் சத்து வெகுவாக குறைந்து விடும். அதனால், முடிந்த வரை போதுமான நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் மயக்கம், சோர்வு போன்ற உபாதைகள் நீங்கும். புத்துணர்ச்சியோடும் இருக்கலாம்.

ADVERTISEMENT

கர்ப்ப காலத்தில் வேண்டிய உணவுகள்(Fast facts on food during pregnancy)

  • வழக்கமாக சாப்பிடுவதை விட, கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இயல்பாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கலோரிகளின் தேவைகள் அதிகரிக்கும்
  • கர்ப்பிணி பெண்கள் சீரான உடல் எடை அதிகரிப்பை கவனிக்க வேண்டும். தாய் மற்றும் சேய் மிக குறைவான உடல் எடையோடு இருக்கக் கூடாது. இது சில பிரச்சனைகளை பிரசவ காலத்தில் உண்டாக்கி விடக் கூடும்
  • கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் அதிக இரும்பு சத்து உறிஞ்சப்படும். அதனால் அதிக இரும்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • பழச்சாறு, அல்லது அப்படியே சாப்பிடும் வகையில் தினமும் ஏதாவது ஒரு பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் எந்த கட்டுப்பாடும் இருக்கக் கூடாது
  • வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • முடிந்த வரை பழச்சாறுகளில் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல், அதன் இயற்கை இனிப்போடு எடுத்துக் கொள்வது நல்லது. அப்படி பிடிக்கவில்லை என்றால், பழங்களை அப்படியே சாப்பிடலாம்
  • மாவு சத்து மற்றும் கார்போஹைட்ரெட் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அரிசி, உருளைக்கிழங்கு, போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது

கர்ப்ப கால சத்துக்களின் உள்ளடக்கம்(Supplement content in pregnancy diet)

இயல்பாக உண்ணும் உணவை விட, கர்ப்ப காலத்தில் நீங்கள் சற்று அதிக கவனத்தோடே உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உணவில் போதுமான சத்துக்கள் நிறைந்துள்ளதா என்று நீங்கள் கவனிக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே, தாய் மற்றும் சேய், இருவருக்கும் போதிய ஊட்டசத்து கிடைத்து ஆரோக்கியமான கர்ப்ப காலத்தில் இருக்கலாம். மேலும் பிரசவ காலமும் வெற்றியாக அமையும். நீங்கள் தெரிந்து கொள்ள, உங்கள் உணவில் இருக்க வேண்டிய சத்துக்களின் விவரங்கள் இங்கே

புரதம்

இது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று. மேலும் தாயின் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளவும் இது உதவும். இரத்தம், எலும்புகள் தசைகள், சதைகள் மற்றும் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக குழந்தைக்கு உருவாகவும், வளர்ச்சி பெறவும் புரதம் உதவுகின்றது. முதல் கர்ப்ப காலத்தில் ௦.5கிராம் புரதம், 6.9 கிராம் இரண்டாம் கர்ப்ப காலத்தில் மற்றும் 22.7 கிராம் மூன்றாவது கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாலிக் அமிலம்

இது நரம்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவுகின்றது. குறிப்பாக மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது. குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவும், ஹெமொக்ளோபின் அளவு சீராக இருக்கவும் இது உதவும்.

இரும்பு

இரும்பு ஹெமொக்ளோபின் வாயிலாக ரத்தத்திற்கு பிராணவாயுவை எடுத்து செல்ல உதவும். கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து நிறைந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, குழந்தையின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, தாய்க்கும் இரத்த சோகை ஏற்படாமல் தவிர்க்கலாம்.  கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 35 மில்லி கிராம் இரும்பு சத்தை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ShutterStock

கால்சியம்

கால்சியம் ஆரோக்கியமான மற்றும் திடமான எலும்புகளையும், பற்களையும் உருவாக்க தேவைப்படுகின்றது. குழந்தை பிறந்த பின் தாய்பாலில் போதிய கால்சியம் குழந்தைக்கு கிடைத்தாலும், கர்ப்ப காலத்திலும் தாய் மற்றும் சேய் இருவருக்கும் இது போதிய அளவு கிடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 12௦௦ மில்லி கிராம் கால்சியத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் A

வைட்டமின் A ஆரோக்கியமான கண் பார்வை பெறுவதற்கும், குழந்தை கர்ப்ப காலத்தில் நன்கு வளர்ச்சி பெறவும் உதவுகின்றது. இந்த வைட்டமின் A குறைபாடு இருக்கும் கர்ப்பிணி பெண்கள், முடிந்த வரை அதிக சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின் A நிறைந்துள்ள பால், வெண்ணை, நட்டு கோழி முட்டை, மீன் ஆகிய உணவை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

போலேட்

கர்ப்ப காலத்தில் நரம்பியல் குழாய் குறைபாடு ஏற்படுவது இயல்பே. ஆனால், போதிய சத்துக்கள், அதிலும் குறிப்பாக போலேட் நிறைந்த சத்துக்களை தினமும் குறைந்தது 6௦௦ மில்லி கிராம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது அதிகம் சாத்துக்குடி, கீரை, பயிர் வகைகள், அரிசி, ப்ரொகொலி போன்ற உணவுகளில் உள்ளது.

நார் சத்து

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு மல சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இது அவர்களுக்கு பல அசௌகரியத்தை உண்டாக்கக் கூடும். ஆனால், நார் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும் போது, அத்தகைய பிரச்சனைகளை முடிந்த வரை தவிர்க்கலாம். தினமும் 3 கிராம் நார் சத்து உணவில் இருக்க வேண்டும். பருப்பு வகைகள், கமலா பழம், உருளைக் கிழங்கு, காரட், தக்காளி, போன்ற காய் மற்றும் பழங்களில் இந்த சத்து நிறைந்துள்ளது.

கொழுப்பு சத்து

 கொழுப்பு, குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக உருவாக மிகவும் தேவைப்படுகின்றது. மேலும் இது போதிய சத்தை உடலுக்குத் தருகின்றது. மீன், ஆலிவ் எண்ணை, சூரியகாந்தி எண்ணை, தேங்காய் எண்ணை, பருப்பு வகைகள் போன்றவற்றில் இந்த கொழுப்பு சத்து நிறைந்துள்ளது.

வைட்டமின் C

 வைட்டமின் C பற்கள், ஈர்கள், மற்றும் எலும்புகள் நன்கு வளரத் தேவைப்படுகின்றது, மேலும் இரும்பு சத்து உடலில் சாரவும் இது உதவுகிண்ட்ரகுடு. கமலா பழம், சாத்துக்குடி, எழுமிச்சிப் பழம், தக்காளி, நவப்பழம், போன்ற பழங்களை எடுத்துக் கொள்வதால் இந்த சத்து கிடைக்கும். கர்ப்ப காலத்தில் தினமும் 85 மில்லி கிராம் வைட்டமின் C சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

வைட்டமின் D

 இந்த சத்து உடலில் கால்சியம் சாரவும், பற்கள் மற்றும் எலும்புகள் திடமுடன் வளர்ச்சி பெறவும் உதவுகின்றது. காலை நேரத்து இளம் சூரிய கதிர், பால், மற்றும் மீன் உடலுக்குத் தேவையான வைட்டமின் D சத்தைப் பெற உதவும்.

வைட்டமின் B6

இது உடல் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரெட் போன்ற சத்துக்களை சிவப்பு இரத்த அணுக்கள் சீராக எடுத்துக் கொள்ள உதவும். வாழைப்பழம், சிவப்பு இறைச்சி மற்றும் பயிர் வகைகளில் இந்த சத்து நிறைந்துள்ளது. கர்ப்ப காலத்தில் தினமும் 1.9 மில்லி கிராம் வைட்டமின் B6 சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் B12

இது சிவப்பு இரத்த அணுக்கள் உருவாகவும், நரம்பு மண்டலத்தை சீராக அமைத்து, வளர்ச்சி அடைய செய்யவும் உதவும். எனினும் இந்த வைட்டமின் மாமிசத்தில் மட்டுமே கிடைகின்றது. குறிப்பாக பால், மீன், மற்றும் இறைச்சியில் இந்த வைட்டமின் அதிக அளவு கிடைக்கும்.

ஜின்க்

கர்ப்ப காலத்தில் ஜின்க் தேவையான அளவு உடலில் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், தாய் மற்றும் சேய் இருவரையும் அது பாதிக்கக் கூடும். உடல் சீரான வளர்ச்சியைப் பெற ஜின்க் பெரிதும் உதவுகின்றது. நாட்டு கோழி, வான்கோழி, நண்டு, மீன், பால், பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகள், சூரியகாந்தி விதை, வெங்காயம், இஞ்சி, அரிசி, முட்டை போன்ற உணவுகளில் ஜின்க் சத்து நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

ShutterStock

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்(Food to eat during pregnancy)

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உணவுக்கு சற்று அதிக முக்கியத்தவம் கொடுக்க வேண்டும். எப்போதும் போல ஏதோ ஒரு உணவை அல்லது கிடைக்கும் உணவை சாப்பிடுவது மட்டுமல்லாது, சற்று அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, மேலும் தேவையான கூடுதல் உணவுகளையும் எடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இந்த வகையில், நீங்கள் அறிந்து கொள்ளவும், பயனடையவும், இங்கே சில உணவுகள்

பால் பொருட்கள்

பாலில் அதிக கால்சியம், வைட்டமின் D, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, மற்றும் போலிக் அமிலம் உள்ளது. மேலும் தயிர் மற்றும் மோரிலும் இந்த சத்துக்கள் உள்ளது. கர்ப்ப காலத்தில் இந்த சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.

ADVERTISEMENT

போலேட் நிறைந்த உணவு

 போலிக் அமிலம் குழந்தையின் நரம்பு மண்டலம் நல்ல வளர்ச்சி பெறவும், முதுகு தண்டு மற்றும் மூளை வளர்ச்சி அடையவும் பெரிதும் உதவுகின்றது. கீரை வகைகள், பீன்ஸ், பட்டாணி, அவோகாடோ, முளைகட்டிய பயிர்கள் மற்றும் சாத்துக்குடி போன்ற உணவுகளில் இந்த சத்து நிறைந்துள்ளது.

முழு தானியங்கள்

இதில் அதிகம் நார் சத்து, கார்போஹைட்ரெட், வைட்டமின் B, இரும்பு, செலெனியம் மற்றும் மக்னேசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு வளர பெரிதும் உதவுகின்றது.

நாட்டு கோழி முட்டை

முட்டையில் அதிக புரதம், வைட்டமின் A, B2, B5, B6, B12, D,  மற்றும் K உள்ளது. மேலும் இதில் கால்சியம், செலெனியம், ஜின்க் போன்ற தாது பொருட்களும் நிறைந்துள்ளது. இவை முதல் மாதத்தில் இருந்தே குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

பழங்கள்

மாதுளை, வாழைப்பழம், கமலாப் பழம், சாத்துக்குடி, பேரிக்காய், தர்பூசணி போன்ற பழங்களில் அதிக ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் வைட்டமின்கள், தாது பொருட்கள் மற்றும் பிற சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை குழந்தை நல்ல வளர்ச்சியைப் பெற மிகவும் உதவுகின்றது.

ADVERTISEMENT

காய் வகைகள்

காரட், பூசணிக்காய், உருளைக்கிழங்கு, மிளகு, முருங்கைக்காய், முட்டைகோஸ், தக்காளி, கீரை வகைகள் போன்ற உணவுகளில் போதிய போஷாக்கும், ஊட்ட சத்தும் நிறைந்துள்ளது. இவை தாய் மற்றும் சேய் ஆரோக்கியமாக கர்ப்ப காலத்தில் இருக்க உதவும்.

கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகள்

குறிப்பாக முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் அதிக புரதம், தாது பொருட்கள், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது. இவற்றை கர்ப்ப காலத்தின் முதல் மாதத்தில் இருந்து எடுத்துக் கொள்ளும் போது குழந்தை ஆரோக்கியமாக வளரத் தொடங்குகின்றது.

மீன்

மீனில் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும் உள்ளது. இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலமும், வைட்டமின் B2, D, E மற்றும் தேவையான தாது பொருட்களான ஜின்க், கால்சியம், ஐயோடின், மக்னேசியம், பொஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை உள்ளன. இவை கண்களின் வளர்ச்சி, மற்றும் பிற உள்ளுருபுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

இறைச்சி

இறைச்சியில் அதிகம் வைட்டமின் B, புரதம், ஜின்க், இரும்பு, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்ப காலத்தின் முதல் மாதத்தில் இருந்தே இந்த சத்துக்கள் பெரிதும் தேவைப்படுகின்றது. எனினும், சரியாக சமைக்காத இறைச்சியையும், பன்றி இறைச்சியையும் தவிர்ப்பது நல்லது.

ADVERTISEMENT

காட் லிவர் எண்ணை

இந்த எண்ணையில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை மற்றும் கண்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. மேலும் இதில் வைட்டமின் D நிறைந்துள்ளது. இந்த எண்ணையை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளும் போது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைகின்றன.

உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்களான அத்திப்பழம், பேரிச்சை பழம், உலர்ந்த திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின்கள், தாது போருட்கள், இரும்பு, பொட்டாசியம், மற்றும் போலேட் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் ஆரோகிதிற்கும் பேரிடம் உதகின்றது. மேலும் இதில் இயற்கை சாராரை நிறைந்துள்ளது.

ShutterStock

ADVERTISEMENT

அயோடைஸ் உப்பு

இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது குழந்தையின் நரம்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாகும்.

இனிப்பு உருளைக்கிழங்கு

இதில் பீட்டா கரோடின் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் A சத்தும் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று. இது உயிர் அணுக்கள் மற்றும் தசைகள் நல்ல வளர்ச்சிப் பெற உதவுகின்றது.

சாலமன் – நன்னீர் மீன்

இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக் கொள்ளும் போது, தாய், சேய் ஆகிய இருவருக்கும் தேவையான சத்துக்கள் கிடைகின்றன. இந்த சத்து மூளை வளர்ச்சி, கண்களின் வளர்ச்சி மற்றும் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

ப்ரோகோலி மற்றும் கீரை வகைகள்

இவற்றில் வைட்டமின் C, வைட்டமின் K, வைட்டமின் A, கால்சியம், இரும்பு, போலேட், பொட்டாசியம் மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது. மேலும் பச்சை கீரைகளில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஜீரனத்தையும் சீர் செய்கின்றது.

ADVERTISEMENT

பருப்பு வகைகள்

பட்டாணி, பீன்ஸ், சோயபீன்ஸ், வேர்கடலை போன்ற வகைகளில் அதிகம் நார், புரதம், போலேட், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை கர்ப்ப காலத்தில் குழந்தை மற்றும் தாய் ஆரோக்கியமாக இருக்க உதவும். நரம்புகளின் வளர்ச்சிக்கும், குழந்தை சீரான எடையோடு பிறக்கவும் இந்த சத்துக்கள் மிகவும் உதவுகின்றன.

மீன் கல்லீரல் எண்ணை

இந்த எண்ணையில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது குழந்தையின் மூளை மற்றும் கண்களின் வளர்சிக்கு உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் D தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. குழந்தை சீரான உடல் எடையைப் பெறவும் இது உதவுகின்றது.

பெர்ரி – கொட்டை இல்லாத பழங்கள்

இந்த பழத்தில் நீர் சத்து நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரெட், வைட்டமின் C நார் மற்றும் ஆக்சிஜனேற்றம் அதிகம் நிறைந்துள்ளது. வைட்டமின் C சத்து உடலில் இரும்பு சார உதவும். மேலும் நோய் எதிருப்பு சக்தியை அதிகப்படுத்தி, சரும ஆரோகியத்தையும் அதிகரிக்கும்.

அவோகாடோ

இந்த பழத்தில் வைட்டமின் B, நார் சத்து, வைட்டமின் K, பொட்டாசியம், செம்பு, வைட்டமின் E மற்றும் வைட்டமின் C சத்துக்கள் நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

தண்ணீர்

தண்ணீர் உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும். மேலும் உடல் எப்போதும் ஈரத்தன்மையோடும், நீர் சத்தோடும் இருக்க உதவும். இதனால், மயக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

ShutterStock

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்(Food not to eat during pregnancy)

கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் என்று பார்த்தோம், அது போன்றே சில உணவுகளையும் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியது அவசியம். இந்த வகையில், நீங்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி சில குறிப்புகள்

ADVERTISEMENT

மென்மையான சீஸ்

இதை கலப்படமற்ற பாலில் செய்கின்றார்கள். இதில் பக்டீரியா அதிகம் இருக்கும். மேலும் இந்த பக்டீரியா உணவை நஞ்சாக்கும் தன்மையையும் கொண்டிருக்கும். அதனால் உணவு விஷத் தன்மையைப் பெறக் கூடும். இதன் காரணமாக இந்த மென்மையான சீஸை தவிர்ப்பது நல்லது.

பதபடுத்திய டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள்

இத்தகைய உணவுகளில் அதிக அளவு ரசாயனங்கள் உணவு வெகு நாட்கள் வர வேண்டும் என்பதற்காகவும். கெட்டுப் போகக் கூடாது என்பதற்காகவும், கலக்கப்படுகின்றது. இவை உடலுக்கு நிச்சயம் தீங்கு விளைவிக்கும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்வதால், குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

கடல் உணவுகள்

கடல் உணவுகளில் அதிக அளவு மெர்குரி இருக்கும். இது குழந்தையில் மூளையை பாதித்து, வளர்ச்சியை தாமதப்படுத்தக் கூடும். அதனால் கர்ப்ப காலத்தில் கடல் உணவை தவிர்த்து, நன்னீர் மீன்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

பப்பாளி

பழுக்காத மற்றும் முழுமையாக பழுக்காத பப்பாளிப் பழத்தில் லேடெக்ஸ் அதிகம் உள்ளது. இது சிசு வளர்ச்சியை பாதிக்கக் கூடும். எனினும், நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தில் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரும்.

ADVERTISEMENT

அன்னாசிபழம்

அன்னாசிப்பழத்தில் கர்ப்பப்பை மென்மையாக்கக்கூடிய ப்ரோமைலின் என்ற பொருள் உள்ளது. இது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடும். மேலும் பிரசவ காலத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். அதனால் கர்ப்ப காலத்தில் அன்னாசிபழத்தை தவிர்ப்பது நல்லது.

பச்சை / முழுமையாக சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி

சமைக்கப்படாத மற்றும், முழுமையாக வேகாத முட்டை மற்றும் இறைச்சியில் பக்டீரியா, லிஸ்டேரியா மற்றும் சல்மோனெல்ல உள்ளது. இவை வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கக் கூடும். மேலும் தாய்க்கும் கடுமையான உடல் நல பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.

நொறுக்குத் தீனி

நெகிழிப் பையில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் சேய் இருவருக்கும் அதிக உடல் நல பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். மன அழுத்தம், கவலை, கவனச் சிதறல் போன்ற பிரச்சனைகளை இது உண்டாக்கக் கூடும்.

காபி

காபி நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு, தூக்கமின்மையை உண்டாக்கும். இதனால் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகளும் ஏற்படக் கூடும். இதனால் கரு சிதைவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் முடிந்த வரை காபி, தேநீர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ADVERTISEMENT

மது பானங்கள்

மது பானங்கள் எந்த வித சந்தேகமும் இல்லாமல் கருவில் இருக்கும் குழந்தையையும், தாயையும் அதிக அளவு பாதிக்கும். இதனால் கர்ப்ப காலத்திலும், பிரசவ காலத்திலும் அதிக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வெள்ளை சர்க்கரை

கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவு கலோரிகள் தேவை தான். ஆனால், அதற்காக இனிப்பு பலகாரங்கள் எடுத்துக் கொள்ளும் போது, அதில் அதிக அளவு வெள்ளை செர்க்கரை இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பாரம்பரிய இனிப்புகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

ShutterStock

ADVERTISEMENT

கர்ப்ப கால உணவுகள்(Food guide during all trimester)

உங்கள் கர்ப்ப காலத்தை மூன்றாக வகுத்துக் கொண்டால், அந்த மூன்று காலகட்டத்திற்கும் ஏற்ற உணவை மற்றும் தேவைப்படும் உணவை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் உடல் ஆரோகியத்தையும், குழந்தையின் வளர்ச்சியையும் அதிகப்படுத்தும். உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்

முதல் கர்ப்ப காலம் 

  • முதல் சில மாதங்கள் உங்கள் உணவில் போலிக் அமிலம் அல்லது போலேட் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது சிசுவின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்
  • கமலாப்பழம், இனிப்பு உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் கால்சியம் நிறைந்துள்ளது
  • கீரை வகைகள், ப்ரொகொலி போன்ற உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • முதல் மூன்று மாதங்கள் காலை வேளையில் சோர்வு அதிகமாக இருக்கும். அதனால் உங்கள் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் கர்போஹைட்ரெட், மற்றும் புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
  • கரும்பு சாறு எடுத்துக் கொள்வது நல்லது. இதில் அதிக அளவு மக்னேசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் A நிறைந்துள்ளது. இது உடனடி சக்தியை உடலுக்குத் தரும்

 இரண்டாம் கர்ப்ப காலம்  

  • இந்த காலகட்டத்தில் முன்பு எடுத்துக் கொண்டதை விட 3௦௦ முதல் 5௦௦ கலோரிகள் அதிகமாக உங்கள் தினசரி உணவில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்
  • அவோகாடோ, நன்னீர் மீன், மீன் கல்லீரல் எண்ணை போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த எண்ணை சேர்ந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • உங்கள உணவில் இரும்பு சத்து நிறைந்து இருக்க வேண்டும்
  • ஐந்தாம் மாதத்தில் உங்கள் குழந்தை மேலும் நல்ல வளர்ச்சி அடைய வைட்டமின் C தேவைப்படுகின்றது. அதனால் தக்காளி மற்றும் கமலாப்பழம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்
  • ஆறாம் மாதத்தில் குழந்தை ஒரு நல்ல வடிவம் பெரும் காலம். இந்த காலகட்டத்தில் புரதம் மற்றும் கார்போஹைட்ரெட் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இனிப்பு சோளம், கொட்டை வகைகள், பருப்பு வகைகள். இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • கர்ப்பிணி பெண்கள் வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது

 மூன்றாம் கர்ப்ப காலம்

ADVERTISEMENT
  • இது மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் கால்சியம், வைட்டமின் C, மக்னேசியம், ஒமேக 3 கொழுப்பு அமிலம், கோளின் போன்ற சத்துக்கள் அதிகம் தேவை.
  • வாழைப்பழம், பெர்ரி, தர்பூசணிப்பழம், போன்ற பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • கீரை வகைகள், தக்காளி, பீன்ஸ், முள்ளங்கி, பட்டாணி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவை(Dos and don’t during pregnancy)

கர்ப்ப காலத்தில் சில விடயங்களை நீங்கள் செய்யலாம், சில விடயங்களை நீங்கள் செய்யக்கூடாது. இதை பற்றிய விழிப்புணர்வு மிக முக்கியமான ஒன்றாகும். இந்த வகையில், நீங்கள் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சில தொகுப்பு

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய சில விடயங்கள்

  • ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு புது பழ வகை மற்றும் காய் வகைகளை உங்கள் உணவில் அறிமுகப்படுத்திக் கொண்டே வாருந்தால். இதனால் கூடுதலான மற்றும் புதிய சத்துக்கள் உடலுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டாகும்
  • கலோரிகள் நிறைந்த உணவுகள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
  • தினமும் கண்டிப்பாக சில மணி நேர ஓய்வு தேவை. இது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்
  • இரவு நேரங்களில் வைட்டமின் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதால், இரும்பு சத்து உடலில் சார நல்ல வாய்ப்பு உண்டாகும்
  • பாதுகாப்பான உணவை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். குறிப்பாக நன்கு வேக வைத்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம்

கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாதவை

  • உடல் எடை அதிகரிக்கும் என்பதற்காக உணவில் கட்டுப்பாடு செய்யக் கூடாது
  • தேவைக்கு அதிகமாக உண்ண வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே கர்ப்பகாலத்தில் தவறான புரிதலை வைத்துக் கொள்ளாதீர்கள்
  • மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்
  • உங்கள் மருத்துவர் அல்லது வீட்டில் இருக்கும் மூத்தவர்களின் ஆலோசனை இல்லாமல் புதிதாக, வழக்கத்தில் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள்
  • அதிக உப்பு உள்ள உணவை தவிர்ப்பது நல்லது. இது கால்சியம் உடலில் சாருவதை தவிர்ப்பதோடு, நீர் சத்தும் உடலில் அதிகரிக்க காரணமாகி விடக் கூடும்

ADVERTISEMENT

ShutterStock

கர்ப்ப காலத்தில் கொமட்டளை எப்படி கையாளுவது(Manage nausea)

  1. உணவை அதிக அளவு ஒரே வேளையில் எடுத்துக் கொள்ளாமல், கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து இடைவேளைக்கு பிறகு சாப்பிட வேண்டும்
  2. இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் புரதம் மற்றும் கொழுப்பு சத்து உடலுக்கு கிடைக்க உதவியாக இருக்கும்
  3. உப்பு, துவர்ப்பு நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
  4. குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
  5. உங்கள் அருகில் எப்போதும் நொறுக்குத் தீனி என்று எதையாவது வைத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக காலை வேளையில் இது முக்கியம்
  6. இஞ்சியை அதிக அளவு எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
  7. வைட்டமின் B6, மற்றும் மக்னேசியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்

கர்ப்ப காலத்தில் நீரழிவு நோய் ஏற்படாமல் தவிர்ப்பது(diabetes during pregnancy)

கர்ப்ப கலாத்தில் அதிக உணவை சாப்பிட வேண்டிய தேவை உண்டாவதாலும், போதிய உடல் உழைப்பு இல்லாததாலும், நீரழிவு நோய் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இருப்பினும், இதனை நீங்கள் கட்டுபடுத்தி, ஆரோக்கியமாக கர்ப்ப காலத்தில் இருக்க முடியும். இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்:

  • உங்கள் உணவு மற்றும் நொறுக்குத் தீனியை மூன்று முதல் ஐந்து வேளைக்கு பிரித்து சிறிது சிறிதாக உண்ண வேண்டும்
  • அதிக நார் சத்து உணவில் இருக்கும் படியாக உறுதி செய்துக் கொள்ளுங்கள்
  • காய் மற்றும் பழ வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்
  • வெள்ளை சர்க்கரை மற்றும் பாக்கட் பால், ஆகிய இரண்டையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள்
  • முடிந்த வரை நாட்டு மாட்டு பாலை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்
  • ஒரே சமயத்தில் ஒரு நாளைக்குத் தேவையான அனைத்து பழங்களையும் சாப்பிடாமல், பிரித்து, சிறிது நேர இடைவேளைக்கு ஒரு முறை என்று நாள் முழுவதும் சாப்பிட வேண்டும்
  • காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது. இது மிக முக்கியமான ஒன்று. இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும்
  • வெள்ளை சர்க்கரை கலந்த பழச்சாறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை பழச்சாறுகளை அப்படியே எந்த இனிப்பும் கலக்காமல் எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். இது ஆரோக்கியமானதும் கூட
  • கடைகளில் வாங்கும் இனிப்பு வகைகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது நல்லது
  • செயற்கை இனிப்பூட்டானை தவிர்ப்பது நல்லது
  • மது பானங்களை தவிர்க்க வேண்டும்

கேள்வி பதில்கள்(FAQ)

­நான்கு மாத கர்ப்ப காலத்திற்கு ஏற்ற உணவு எது?

நான்காம் மாதத்தில் கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் D சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது குழந்தையின் பற்கள் மற்றும் எலும்புகள் பலமாக வளர உதவும்.

ADVERTISEMENT

கர்ப்பிணி பெண்கள் காலை உணவாக எதை எடுத்துக் கொள்ள வேண்டும்?

காலை உணவு புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படுகின்றது. தயிர், முட்டை, பட்டாணி போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் தினமும் முட்டை எடுத்துக் கொள்ளலாமா?

கர்ப்பிணி பெண்களுக்கு தினமும் 75 கிராம் புரதம் தேவைப்படுகின்றது. ஒரு முட்டையில் 7 கிராம் புரதம் உள்ளது. எனினும் ஒரு நாளைக்கு அவித்த ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

ShutterStock

ADVERTISEMENT

கர்ப்பிணி பெண்கள் காலை உணவை தவிர்க்கலாமா?

கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் இரண்டு நேரம் சிற்றுண்டிகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று மணி நேர இடைவேளைக்கு ஒரு முறை ஏதாவது உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் காலை உணவை தவிர்ப்பது என்பது உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் ஒரு விடயமாகி விடக் கூடும்.

கர்ப்ப காலத்தில் பால் அருந்த வேண்டுமா?

கர்ப்ப காலத்தில் போதுமான கால்சியம் தேவைப்படுகின்றது. அதனால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் நாட்டு மாட்டுப் பாலை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மேலும் கமலாப்பழம் அல்லது இந்த பழத்தின் சாறையும் எடுத்துக் கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் இரவு உணவை தவிர்க்கலாமா?

இரவு நேரம் முதல் காலை வரை நீண்ட நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். இது கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைக்கும் நல்லதல்ல. அதனால் எந்த காரணம் கொண்டும் இரவு உணவை தவிர்ப்பது நல்லதல்ல.

கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் போனால் என்னவாகும்?

நீங்கள் போதுமான உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சத்துக் குறைவு ஏற்படும். இதனால் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான போஷாக்கு மற்றும் கலோரிகள் கிடைக்காமல் போகலாம். இதனால் உடல் எடை குறைந்து, மேலும் சில ஆபத்தான உபாதைகளை உண்டாக்கி விடக் கூடும்.

ADVERTISEMENT

கர்ப்ப காலத்தில் குளிர்ந்த நீரை அருந்துவது நலத்தா?

கர்ப்ப காலத்தில் நீங்கள் எந்த தண்ணீர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ந்த நீரையோ எடுத்துக் கொள்ளக் கூடாது. இது உங்களுக்கு வயிற்று வலியை உண்டாக்கி விடக் கூடும். அல்லது வேறு சில உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.

கமலாப்பழச் சாறு எடுத்துக் கொள்வது கர்ப்ப காலத்தில் நல்லதா?

கமலாப்பழத்தில் அதிக வைட்டமின் C சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் போலிக் அமிலம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் இந்த பழத்தில் பொட்டசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதனால் கர்ப்ப காலத்தில் கமலாப் பழம் மிக நல்லது.

கர்ப்ப காலத்தில் தயிர் உடலுக்கு நல்லதா?

பால் பொருட்களில் தயிர் அல்லது மோர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களைப் பெற உதவும். அதனால் தினமும் உங்கள் உணவில் தயிர் அல்லது மோரை சேர்த்துக் கொள்வது நல்லது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

21 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT