கடுகு எண்ணை – உடல் மற்றும் சரும நலத்திற்கு ஏற்ற ஒரு நல்ல தீர்வு!

 கடுகு எண்ணை – உடல் மற்றும் சரும நலத்திற்கு ஏற்ற ஒரு நல்ல தீர்வு!

கடுகு எண்ணை. இதை பற்றி பெரிதாக பலருக்கும் விழிப்புணர்வு இல்லை என்றாலும், இதன் நற்பலன்கள் ஏராளம் என்றே கூறலாம். இது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது, சரும நலனுக்கும் உதவுகின்றது. இதன் நற்பலன்கள் ஏராளம் என்றே கூறலாம். இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், பல நன்மைகளை நீங்கள் பெறலாம்.

இந்த கடுகு எண்ணையை பற்றி நீங்கள் மேலும் பல பலனுள்ள தகவல்களை (mustard oil benefits) பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த தொகுப்பை தொடர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

Table of Contents

  கடுகு எண்ணையை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்(few facts about mustard oil)

  • கடுகு எண்ணை தனித்துவமான சுவை உடையது
  • இது கடுகில் இருந்து தயாரிக்கப்படுகின்றது
  • இது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது
  • சருமத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றை குணப்படுத்த உதவும்
  • இதில் இருந்து வரும் ஒரு விதமான வாசனையால் கொசு போன்ற சிறு பூச்சிகள் வீட்டிற்குள் வராது
  • தலைமுடிக்கு நல்ல ஊட்டசத்தை தரும்
  • இது உடல் மசாஜ் செய்ய ஏற்ற ஒரு எண்ணையாக பயன்படுத்தப்படுகின்றது
  • இது சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளியை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது
  • உடலில் இருக்கும் நச்சை வெளியேற்ற இது மிகவும் உதவியாக உள்ளது
  • வீட்டில் தயாரிக்கும் பேஸ் பாக்கில் இதனை சேர்த்துக் கொள்ளலாம். நல்ல பலனைத் தரும்
  • இதை ஊறுகாய் செய்ய அதிகம் பயன்படுத்துவார்கள். நல்ல சுவையையும், நறுமணத்தையும் தரும்

  கடுகு எண்ணையில் நிறைந்திருக்கும் சத்துக்களின் விவரம்(nutritional values mustard oil)

  Shutterstock

  கடுகு எண்ணையில் ஒமேக 3 மற்றும் ஒமேக 6 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. 1௦௦ கிராம் கடுகு எண்ணையில் நிறைந்திருக்கும் சத்துக்களின் விவரத்தை பற்றி இங்கே காணலாம்;

  • கலோரிகள் 884
  • மொத்த கொழுப்பு 100 கிராம் 153%
  • நிறைவுற்ற கொழுப்பு 12 கிராம் 60%
  • பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 21 கிராம்
  • மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு 59 கிராம்

  கடுகு எண்ணையாள் கிடைக்கும் உடல் நல பலன்கள் (health benefits mustard oil)

  கடுகு எண்ணையில் அதிக வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது. இது உடல் நலத்தை அதிகரிக்கும் பெரிதும் உதவியாக உள்ளது. கடுகு எண்ணையால் கிடைக்கும் பல உடல் நல பலன்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்:

  1. புற்றுநோய் அறிகுறியை தடுக்கும்

  இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், எந்த விதமான புற்றுநோயாக இருந்தாலும், அதனை வரவிடாமல், அல்லது அதன் தாக்கத்தை குறைக்க உதவும்.

  2. சுவாச பிரச்சனையை போக்கும்

  குறிப்பாக சைனஸ் போன்ற பிரச்சனைகளை போக்க கடுகு எண்ணை உதவும். இதனால் எளிதாக சுவாசிக்க இது உதவியாக இருக்கும். சிறிது கடுகு எண்ணையை, தேனுடன் கலந்து எடுத்துக் கொண்டால், சுவாச பிரச்சனைகளை போக்கி விடும்.

  3. இருமல் மற்றும் சளியை போக்கும்

  Pexels

  கடுகு எண்ணை சளியை போக்கி, இருமலை குணப்படுத்த உதவும். இதை தையலம் போல பயன்படுத்தினாலோ அலல்து கொதிக்கும் நீரில் சிறிது கலந்து ஆவி பிடித்தாலோ, விரைவாக இருமல் மற்றும் சளி பிரச்சனை நீங்கும். மேலும் எளிதாக சுவாசிக்கவும் உதவும்.

  4. இருதய அமைப்பிற்கு உதவும்

  கடுகு எண்ணையில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. மேலும் இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் இருகின்றது. இது தேவையற்ற கெட்ட கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகின்றது. இதனால் இருதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்,

  5. அழற்சி எதிர்ப்பு பண்புகள்

  எரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறி மற்றும் இது சார்ந்த நோய்களை கடுகு எண்ணை போக்க உதவுகின்றது. மேலும் இதனை பிரச்சனை இருக்கும் பகுதியில் சருமத்தின் மீது தடவி மசாஜ் செய்தாலே போதும். உட்கொள்ளவில்லை என்றாலும் நல்ல பலனைத் தரும்.

  6. உடலுக்கு ஊக்கமளிக்கும்

  Pexels

  கடுகு எண்ணை ஒரு நல்ல ஊக்கமூட்டியாக செயல்படுகின்றது. இது இரத்த ஓட்டத்தை சீர் செய்து, சுறுசுறுப்பாக இருக்க உதவுகின்றது. சோர்வை போக்க உதவும்.

  7. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு

  கடுகு எண்ணை தேவையற்ற பக்டீரியா உடலில் உருவாவதை தடுக்கும். குறிப்பாக நோய் தொற்றை உண்டாக்கும் பக்டீரியா உற்பத்தியை தடுக்க உதவும். இது பூஞ்சை உற்பத்தியையும் தடுத்து சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.

  8. பற்களை வெண்மையாக்கும்

  உங்கள் பற்களில் அதிகம் அழுக்கு சேர்ந்திருந்தாலோ அல்லது மஞ்சள் நிறத்தில், பார்க்க நன்றாக இல்லைஎன்றாலோ, கடுகு எண்ணையை பயன்படுத்தலாம். இதனை சரியான முறையில் பயன்படுத்தும் போது, பற்களில் இருக்கும் அழுக்கு நீங்கி பற்கள் நல்ல வெண்மை நிறத்தைப் பெற உதவுகின்றது.

  9. பூச்சிகளை விரட்டும்

  Pexels

  கடுகு எண்ணையின் நறுமணம் கொசு, ஈ மற்றும் வண்டுகள் போன்ற பூச்சிகளை வீட்டிற்குள் வர விடாமல் விரட்டும். இதனால் மலேரியா போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

  10. ஆஸ்த்மாவை குணப்படுத்தும்

  கடுகு எண்ணை ஆஸ்த்மாவை நிரந்தரமாக குணப்படுத்த உதவும். இது ஆஸ்த்மா அறிகுறிகளை குறைத்துக் கொண்டே வரும். எனினும், இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், மேலும் பல பலன்களைப் பெறலாம். இந்த கடுகு எண்ணையை லேசாக சூடு செடிஹு நெஞ்சில் தடவ வேண்டும். அல்லது கொதிக்கும் நீரில் சிறிது சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்தால் சுவாச பிரச்சனை மற்றும் ஆஸ்த்மா போன்ற பிரச்சனைகள் குறையும்.

  11. மூட்டு வலியை போக்கும்

  கடுகு எண்ணை மூட்டு வலியை குணப்படுத்த மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால், நல்ல பலன்களை மூட்டு வலி மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த உதவியாக உள்ளது. இந்த எண்ணையை பயன்படுத்தி தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் மூட்டு வலி குணமாகும்.

  12. மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்

  Pexels

  இதில் அதிக அளவு இருக்கும் கொழுப்பு அமிலம் மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் இதனை தினமும் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டாவதோடு, நல்ல சிந்திக்கும் திறனும் ஏற்படுகின்றது.

  13. இயற்கை ஊக்கி

  உடம்பில் மரத்துப் போன உணர்வு, அல்லது சோர்வு போன்ற உபாதைகள் தோன்றினால், அவற்றை குணப்படுத்த கடுகு எண்ணை பெரிதும் உதவியாக உள்ளது. இதனை பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்தால், உடனடியாக நல்ல தீர்வைப் பெறலாம்.

  14. உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

  கடுகு எண்ணை உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவியாக உள்ளது. இதில் இருக்கும் வைட்டமின்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றது, தினமும் கடுகு எண்ணையை சமையலில் பயன்படுத்தி வரும் போது நல்ல பலனை எதிர் பார்க்கலாம்.

  15. இயற்கை தசை தளர்த்தி

  Pexels

  கடுகு எண்ணை தசைகளில் ஏற்படும் வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றை போக்கி, தளர செய்கின்றது. இதனால் விரைவாக குணமடைய உதவுகின்றது. குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை, கடுகு எண்ணையை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்,

  16. அஜீரணத்தை போக்கும்

  கடுகு எண்ணை குடல் ஆரோக்கியமாக இயங்க உதவுகின்றது. இதனால் அஜீரண பிரச்சனைகள் ஏதாவது உண்டானால், அதனை உடனடியாக சரி செய்ய இது ஒரு நல்ல தீர்வாக உள்ளது. மேலும் கடுகு எண்ணை ஜீரண நொதிகளை உற்பத்தி செய்தும், இரத்த ஓட்டத்தை அதிகரித்தும், நல்ல ஜீரணம் ஏற்பட உதவுகின்றது.

  கடுகு எண்ணையும் சரும ஆரோக்கியமும் ( skin health and mustard oil)

  கடுகு எண்ணை சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளை போக்க உதவியாக உள்ளது. இது எப்படி சருமத்திற்கு பலன் தருகின்றது என்று இங்கே பார்க்கலாம்;

  1. சரும தடிப்பை போக்கும்

  கடுகு எண்ணை சருமத்தில் ஏற்படும் தடிப்பை போக்க உதவியாக இருகின்றது. இந்த எண்ணையை தினமும் தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, சருமத்தில் இருக்கும் தடிப்பு மற்றும் பிற பிரச்சனைகள் குறையும். இதில் அழற்சி ஈதிர்பு பண்புகள் அதிகம் இருப்பதால், கூடுதல் பலனை தரும்.

  2. கரும் வளையம் மற்றும் தழும்புகளை போக்கும்

  கடுகு எண்ணையில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மற்றும் அழற்சி பண்புகள் கரும் வளையம், மற்றும் தழும்புகளை சருமத்தில் இருந்து நிரந்தரமாக போக்க உதவும். இது நல்ல ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவியாக உள்ளது. சிறிது கடுகு எண்ணையை, தயிர், எழுமிச்சைபழ சாறு மற்றும் பச்சை அரிசி மாவுடன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, கழுவி விட வேண்டும். இப்படி பயன்படுத்தினால், நல்ல பலனை விரைவாகப் பெறலாம்.

  3. உதடுகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

  Pexels

  உதடுகளில் ஏற்படும் வெடிப்பு, வறட்சி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை போக்க கடுகு எண்ணை உதவியாக உள்ளது. சிறிது கடுகு எண்ணையை, தேங்காய் எண்ணையோடு கலந்து உதட்டில் தடவி வந்தால், இத்தகைய பிரச்சனைகள் விரைவாக குணமடையும்.

  4. முதிர்ந்த தோற்றத்தை போக்கும்

  கடுகு எண்ணையில் வைட்டமின் E சத்து நிறைந்துள்ளது. இது சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க உதவும். கடுகு எண்ணையை சிறிது திருடன் கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், நல்ல இளமையான தோற்றத்தைப் பெறலாம். மேலும் இது சருமம் நல்ல பொலிவோடும், அழகோடும் இருக்க உதவும்.

  5. தெளிவான மற்றும் மிருதுவான சருமம்

  கடுகு எண்ணையை, கடலை மாவுடன் கலந்து பயன்படுத்தி வந்தால், நல்ல மிருதுவான மற்றும் தெளிவான சருமத்தைப் பெறலாம். மேலும் இது சருமத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் பிற பிரச்சனைகளை போக்க உதவியாகவும் இருக்கும்.

  கடுகு எண்ணையை பயன்படுத்தும் முறைகள் (skin care with mustard oil)

  சரும ஆரோக்கியம் பெற கடுகு எண்ணையை கீழ் கண்ட முறைகளில் வாரம் ஒரு முறை அல்லது அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.

  1. இளமை தோற்றம் பெற

  • தேவையான அளவு கடுகு எண்ணையை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது நல்லெண்ணையை சேர்த்துக் கொள்ளவும்
  • இரண்டையும் நன்கு கலந்து, சருமத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்யவும்
  • பின்னர் ஒரு பருத்தி துணியை எடுத்து, சுடு தண்ணீரில் நனைத்து, பிழிந்து பின்னர் முகத்தில் மெதுவாக வைத்து எடுக்கவும், அல்லது சிறிது நேரம் அப்படியே முகத்தில் விட்டு விடவும்
  • இப்படி செய்து வந்தால், சருமம் நல்ல இளமையான தோற்றத்தைப் பெரும்

  2. வறண்ட சருமத்தைப் போக்க

  • தேவையான அளவு தயிர் சிறிது எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் கடுகு எண்ணையை சிறிது கலந்து கொள்ளவும்
  • மேலும் இதனுடன் சிறிது கடலை மாவை கலந்து நன்கு பசை போல கலக்கிக் கொள்ளவும்
  • இந்த கலவையை முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்யவும்
  • சிறிது நேரம் கழித்து மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  3. கரும் வளையத்தை போக்க

  Pexels

  • சிறிது கடுகு எண்ணையை எடுத்து தேங்காய் எண்ணையுடன் கலந்து கொள்ளவும்
  • இந்த இரண்டு எண்ணையையும் முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்
  • சிறிது நேரம் அப்படியே விட்டு விடவேண்டும்
  • பின்னர் சுடு தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து, பிழிந்து முகத்தை துடைத்து விட வேண்டும்
  • இப்படி செய்து வந்தால் நல்ல நிறமும் கிடைக்கும்

  4. சருமத்தில் இருக்கும் தடிப்பை போக்க

  • சிறிது கடுகு எண்ணையை எடுத்து முகத்தில் தடவி 1௦ நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும்
  • இப்படி செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மேலும் தடிப்பு இருக்கும் இடம் விரைவாக குனமடையும்
  • மசாஜ் செய்த பின் முகத்தை மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் கழுவி விட வேண்டும்
  • இப்படி வாரம் இரண்டு முறையாவது செய்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்

  தலைமுடி வளர்ச்சிக்கு கடுகு எண்ணை (hair health and mustard oil)

  கடுகு எண்ணையை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும். கடுகு எண்ணையில் அதிக வைட்டமின் E சத்துக்கள் உள்ளது. இது தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதை வேரில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சி அதிகமாகும்.

  கடுகு எண்ணை எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்;

  1. தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்

  கடுகு எண்ணையில் புரதம் மற்றும் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இதை தலைமுடி வேரில் நன்கு தேய்த்து வரும் போது, வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் நல்ல அடர்ந்த கூந்தலையும் நீங்கள் பெறலாம்.

  2. முடி நரையை குறைக்கும்

  Shutterstock

  கடுகு எண்ணையில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அதிக அளவு உள்ளது. இது இளம் நரை பிரச்சனைகளை போக்க பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் தலைமுடி நல்ல ஆரோக்கியமாக வளரவும் இது உதவியாக உள்ளது.

  3. பொடுகு தொல்லை நீங்க

  தலையில் அரிப்பு மற்றும் பொடுகு தொல்லை நீங்கள் கடுகு எண்ணையை பயன்படுத்தலாம். இதில் பக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், பொடுகு மற்றும் அரிப்பை உண்டாக்கும் பூஞ்சை மற்றும் பக்டீரியாவை போக்க உதவுகின்றது. இதனால் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிகின்றது.

  தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் முறை ( Hair care with mustard oil)

  தலை முடி வளர்ச்சி பெற கடுகு எண்ணெய்யை கீழ் கண்ட முறைகளில் தினமும் பயன்படுத்தி வந்தால் நலமாக இருக்கும். கடுகு எண்ணையை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும்.

  1. தலைமுடி வளார்ச்சி பெற

  • தேவையான அளவு கடுகு எண்ணையை எடுத்து மிதமாக சூடு செய்து கொள்ள வேண்டும்
  • இதை தலையின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
  • பின்னர் அப்படியே இரவு முழுவதும் விட்டு விடலாம் அல்லது 5 மணி நேரமாவது அப்படியே விட்டு விடலாம்
  • பின்னர் தரமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலைமுடியை அலசி விட வேண்டும்

  2. இளம் நரை நீங்க

  Shutterstock

  • தினமும் தூங்க செல்லும் முன் கடுகு எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
  • இப்படி செய்தால் தலை பகுதிக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கும் மேலும் நல்ல தூக்கமும் கிடைக்கும்
  • காலையில் எழுந்து தலைமுடியை நன்கு அலசி விட வேண்டும்
  • இப்படி தொடர்ந்து செய்து வந்தால், விரைவாக இளம் நரை குறையும்

  3. தலையில் அரிப்பை போக்க

  • சிறிது கடுகு எண்ணையை எடுத்து, மிதமாக சூடு செய்து கொள்ள வேண்டும்
  • இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து தலையில் நன்கு தேய்த்து விட வேண்டும்
  • சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசி விட வேண்டும்
  • இப்படி செய்து வந்தால், தலையில் அரிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்

  கடுகு எண்ணையால் ஏற்படும் உபாதைகள் (side effects of mustard oil)

  கடுகு எண்ணையால் பல நன்மைகள் கிடைத்தாலும், இதை சரியான முறையில் பயன்படுத்தாமல் போனால், சில உபாதைகளை உண்டாக்கக் கூடும். அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்

  • கடுகு எண்ணையை அதிக அளவு பயன்படுத்தும் போது நச்சுத் தன்மையை உண்டாக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது. அதனால் கர்ப்பிணி பெண்கள் இதனை அதிக அளவு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
  • அதிக உணர்ச்சி உடைய சருமம் இருப்பவர்கள், இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இது ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்,. மேலும் எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடும்  
  • இதை உணவில் அதிக அளவு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இது அஜீரண பிரச்சனை அல்லது வேறு சில பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்

  கேள்வி பதில்கள் (FAQs)

  1. கடுகு எண்ணை சருமத்தை கருமையாக்குமா?

  இல்லை. கடுகு எண்ணை அத்தகைய விளைவுகளை உண்டாக்காது. மாறாக இது சருமம் நல்ல பொலிவைப் பெற உதவும்.

  2. சருமத்திற்கு கடுகு எண்ணை எப்படி பயன்படுகின்றது?

  இது ஒரு இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படுகின்றது. கடுகு எண்ணையில் அதிக வைட்டமின் E நிறைந்துள்ளது, இது சருமதிற்கு நல்ல போஷாக்கு கிடைக்க உதவும். மேலும் கடுகு எண்ணையை சருமத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கரும் வளையம் போன்றவை மறையும்.

  3. கடுகு எண்ணை உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

  கடுகு எண்ணையை சமையலில் பயன்படுத்துவதை பல நாடுகள் தடை செய்துள்ளது. இதில் இருக்கும் இருசிக் அமிலம், பல சில உடல் நல பிரச்சனைகளை உண்டாக்குவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதால், இதை சமையலில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என்று பரிந்துரைகின்றனர். எனினும், இது முழுமையாக நம்பப்படவில்லை.

  4. கடுகு எண்ணை தலைமுடி மீண்டும் வளர உதவுமா?

  கடுகு எண்ணையை மக்கள் 4000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் நிறைந்திருக்கும் கொழுப்பு அமிலம், தலைமுடி நல்ல போஷாக்கைப் பெற உதவுகின்றது. இதனால் தலைமுடி அதிகம் உதிர்ந்து இருந்தாலும், மீண்டும் நன்கு வளர இது உதவியாக உள்ளது.

  5. கடுகு எண்ணையை அதிக அளவு பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?

  கடுகு எண்ணை ஒரு சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் உடலுக்கு இது ஏற்றது இல்லை என்று தெரிந்தால், இதனை தவிர்த்து விடுவது நல்லது. இது சிலருக்கு இருதய நோய், வயிற்று போக்கு, சுவாச பிரச்சனை மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது உண்டாக்குகின்றது.

  6. கடுகு எண்ணை தலைமுடி நரையை போக்க உதவுமா?

  அனேகமானவர்கள், கடுகு எண்ணை தலைமுடி நரையை குறைத்து நல்ல கருமையான முடி பெற உதவியாக இருப்பதாக கூறுகின்றனர். தினமும் கடுகு எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், இளம் நரை நீங்கி நல்ல கருமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி வளரும். மேலும் இது தலைமுடி உதிர்வதையும் தடுத்து, நல்ல அடர்ந்த கூந்தலைப் பெற உதவியாக இருக்கும்.

  மேலும் படிக்க - ஆளி விதையின் நற்பண்புகள், சரும மற்றும் தலைமுடி ஆரோக்கிய பலன்கள்!

  பட ஆதாரம்  -Shutterstock

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!