சருமத்திற்கு இளமையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்: வீட்டிலேயே தயாரிக்கலாம்!

சருமத்திற்கு இளமையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்: வீட்டிலேயே தயாரிக்கலாம்!

ரோஸ் வாட்டர் சருமத்தின் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. ரோஸ் வாட்டர் பல அருமையான பலன்களை நம் சருமத்திற்கு தருகிறது. சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சுருக்கங்களை போக்கும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி தரும். 

ரோஸ் வாட்டரை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். ரோஸ் வாட்டரை நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் அது தரமானதா என்ற சந்தேகம் இருக்கும். இதனை தவிர்க்க வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நாம் வீட்டிலேயே எப்படி ரோஸ் வாட்டர் (rose water) செய்வது என்பதை பார்க்கலாம்.

youtube

தேவையானவை : 

ரோஜா பூக்கள் - 50,
தண்ணீர் - 2 லிட்டர்.  

செய்முறை : 

ரோஸ் வாட்டர் செய்ய தேர்ந்தெடுக்கும் ரோஜாப்பூ நாட்டு ரோஜாப்பூவாகவும், பிங்க் நிறப்பூவாகவும் இருக்க வேண்டியது அவசியம். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 

பின்னர் அதில் ரோஜா இதழ்களை போட்டு 20 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து, தேவைப்பட்டால் பாதாம்  எண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு விட்டு பிறகு எடுத்து வடிகட்டி ஆற வைக்க வேண்டும். ஆறியவுடன் அந்த நீரை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

pixabay

 • ரோஸ் வாட்டர் சருமத்துக்கு அதிக நன்மையை கொடுக்கிறது. ரோஸ் வாட்டரை கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை முறை  வேண்டுமானாலும் முகத்தை சுத்தப்படுத்தலாம்.
 •  ரோஸ் வாட்டரில் சிறிது கற்பூரத்தை போட்டு அதனைக் கொண்டு நாள் முழுவதும் பலமுறை சருமத்தை துடைத்து எடுத்தால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும். 
 • மென்மையான சருமம் தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
 • வறட்சியான சருமம் உள்ளவர்கள் ரோஸ் வாட்டரை (rose water) சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமம் வறட்சியின்றி அழகாக இருக்கும்.
pixabay

 • ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். மேலும் ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. 
 • ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். பின் முல்தானி மிட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பிரகாசிக்கும்.
 • இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்துவிடும்.
 • முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால் சந்தனப் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தின் அழகைக் கெடுக்கும் பருக்கள் நீங்கிவிடும்.
pixabay

 • தினமும் ரோஸ் வாட்டரைக் (rose water) கொண்டு உதட்டை துடைத்து எடுத்தால் உதட்டில் உள்ள கருமை போய்விடும்.  உதடு ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் மாறிவிடும். 
 • ரோஸ் வாட்டர் உடன் சம அளவு கிளிசரினை எடுத்துக்கொண்டு அதனை பஞ்சில் நனைத்து முடியின் வேர்கால்களுக்கு போட்டு மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசினால் முடி மிருதுவாகவும், அரிப்புகள் இல்லாமலும் இருக்கும்.
 • ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசிய பிறகு ஒரு கப் ரோஸ் வாட்டரால் கூந்தலை மேலும் ஒரு முறை அலசலாம். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால் கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!