பெண்களின் கர்ப்பப்பை நோய்களுக்கு தீர்வாகும் அதிமதுரம்..

பெண்களின் கர்ப்பப்பை நோய்களுக்கு தீர்வாகும் அதிமதுரம்..

சித்த மருத்துவம் என்பது பக்க விளைவுகள் அற்றது. நம் பூமியில் விளையும் மூலிகைகளே நமக்கு மருந்தாக மாறும் ரசவாதத்தை செய்வது சித்த மருத்துவம். ரசாயனங்களின் கலப்புகள் இல்லாமல் அந்தக் காலத்தில் போகர் போன்ற சித்தர்கள் நம் போன்ற மக்களுக்காக தந்து போன ரகசியக் குறிப்புகள்தான் இப்போது வைத்தியமாக மாற்றப்பட்டு இருக்கிறது.                      

அதில் அதிமதுரம் (Glycyrrhiza glabra) எனும் மருந்து மிக முக்கியமான மருந்தாகும். பெரும்பாலும் சளி இருமலுக்கு இதனைப் பயன்படுத்துவார்கள். அதனையும் தாண்டி பல்வேறு மருத்துவ பலன்களை கொண்டது அதிமதுரம்.                          

 

Youtube

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சமமாக எடுத்து 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

சிறுநீரக்கல்லினை நீக்கும் மருந்தாக அதிமதுரம் திகழ்கிறது. இது சிறுநீர் இரத்தப்போக்கை நிறுத்த, சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க, சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும் உதவும்.                       

அதிமதுரத்தில் (Glycyrrhiza glabra) இருக்கும் பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் சிறப்பான முறையில் செயல்படுகிறது.                                       
 

Youtube

அதிமதுரத்தினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் குணமாகும்.பெண்களின் மலட்டுத்த்ன்மை நீங்கும். மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணம் தரும்.                              

தாய்ப்பால் இல்லாதவர்கள் 1 கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து கொஞ்சம் இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து கிடைக்கும்.


Youtube

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும்.

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்.தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!