கற்றாழை : எண்ணிலடங்கா பலனைத் தரும் அற்புத மூலிகை!

கற்றாழை : எண்ணிலடங்கா பலனைத் தரும் அற்புத மூலிகை!

கற்றாளையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இது வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் விளைகிண்ட்ரகுடு. எளிதாக அனைவரும் வீட்டில் குறைந்த பராமரிப்போடு இதனை வளர்த்து விடலாம். கற்றாழை பல வகையில் உள்ளது. எனினும், சோற்றுக் கற்றாழை அதிக அளவு வளர்க்கபப்ட்டு, பயன்படுத்தப்படுகின்றது.

கற்றாழை (aloe vera) உடல் நலம், சரும நலம் மற்றும் தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. இது மருத்துவ குணங்கள் அடங்கிய ஒரு நல்ல மூலிகை. இதனை பல வகையில் பயன்படுத்தலாம் (benefit).

நீங்கள் இந்த அற்புத மூலிகையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் என்றால், இந்த தொகுப்பு உங்களுக்கானது. தொடர்ந்து படியுங்கள்!

Table of Contents

  கற்றாழை பற்றிய சுவாரசியமான தகவல்கள்(few facts of aloe vera)

  • கற்றாழை சிறிய தண்டுகள் கொண்ட தாவரம்
  • இது 5௦௦க்கும் மேற்பட்ட வகைகளில் உலகின் பல இடங்களில் வளர்கின்றது
  • இதன் இலைகள் அதிக சதைபற்றுள்ளதாக இருக்கும்
  • இதை உள் அருந்தவும், மருத்துவத்திலும், சரும அழகிற்காகவும் அதிகம் பயன்படுத்துவார்கள்
  • இதில் பல அற்புத மருத்துவ குணங்கள் உள்ளது. பல நோய்களை குணப்படுத்தும் பண்புகள் இதற்கு உண்டு
  • இதில் வைட்டமின் எ, பி, சி மற்றும் இ நிறைந்துள்ளது
  • இதன் பயன்பாடு பல ஆயிரம் ஆண்டு காலமாகவே மக்களிடையே இருந்து வருகின்றது

  கற்றாழையில் நிறைந்துள்ள சத்துக்களின் விவரம்(Nutritional values of aloe vera)

  Pixabay

  கற்றாழையில் உள்ள ஆக்சிஜனேற்றம் பாலிபினால்களாகும். அவை தொற்றுநோய்யை எதிர்த்து செயல்படுவதில் சக்திவாய்ந்ததாக உள்ளது. மேலும் இதில் வைட்டமின் எ, பி1, பி6, சி, மற்றும் இ நிறைந்துள்ளது. இது மட்டுமல்லாது இதில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் 18 வகையான அமினோ அமிலமும் நிறைந்துள்ளது.

  ஒரு கப் கற்றாழையில் நிறைந்திருக்கும் சத்துக்களின் விவரம்;

  • 131   கலோரிகள்
  • 0.3 கிராம் மொத்த கொழுப்பு
  • 5 மி.கி.சோடியம்
  • 322   மிகி பொட்டாசியம்
  • 31.92 கிராம் மொத்த கார்போஹைட்ரேட்
  • 0.89   கிராம் புரதம்

  கற்றாழையில் கிடைக்கும் உடல் நல பலன்கள்(Health Benefits of Aloe Vera)

  கற்றாழையை சாறாகவோ, அல்லது வேறு பல விதத்திலோ உட்கொண்டு வந்தால் பல அற்புத உடல் நல பலன்களைத் தரும். இந்த வகையில், கற்றாழை எப்படி உதவுகின்றது என்பதை பற்றி இங்கே ஒரு தொகுப்பு;

  1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

  கற்றாழை சாறில் அதிக நச்சுத்தன்மையை போக்கும் பண்புகள் நிறைந்துள்ளது. இது ஜீரண அமைப்பை சுத்தம் செய்து, இரத்த ஓட்டத்தை சீர் செய்யும். மேலும் இதில் நிறைந்திருக்கும் சத்துக்கள் எளிதாக இரத்த அமைப்பில் சாரும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

  2. தோலழற்சியை போக்கும்

  சருமத்தில் தோன்றுகின்ற பல பிரச்சனைகளை, குறிப்பாக அரிப்பு, வெடிப்பு, ஒவ்வாமை, இளம் வயதில் முதிர்வு போன்ற பல பிரச்சனைகளை இது போக்க உதவும். இது சருமத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தருவதோடு, அழகான தோற்றம் பெறவும் உதவுகின்றது.

  3. புண்களை குணப்படுத்தும்

  உடலில் எந்த விதமான புண் ஏற்பட்டாலும், அதனை விரைவில் குணப்படுத்தும் பண்பு கற்றாழையில் உள்ளது. இது புண் இருக்கும் இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைவாக குணமடைய உதவுகின்றது. எனினும், சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம்.

  4. புற்றுநோயை தடுக்கும்

  Pixabay

  கற்றாழையில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்கள் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவும். இதனால், இதனை முறையாக தினமும் எடுத்தக் கொள்ளும் போது, புற்றுநோய்க்கான அறிகுறிகள் குறைவதை காணலாம். மேலும் அனைவரும் இதை எடுத்துக்கொள்ளும் போது, இத்தகைய நோயின் தாக்கம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

  5. மூட்டு வலியை போக்கும்

  கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது மூட்டு வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்த உதவும். குறிப்பாக எலும்பு பகுதிகளில் இருக்கும் வீக்காம் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி இவை இரண்டையும் கற்றாழையை உட்கொண்டும், உடலின் புற பகுதியில் மருத்துவம் செய்தும் குணப்படுத்தி விடலாம்.

  6. மயக்கத்தை போக்கும்

  மயக்கம் மற்றும் குமட்டல் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். மேலும் இத்தகைய உபாதைகள் உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கக் கூடும். ஆனால் கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் எந்த விதமான சோர்வு மற்றும் மயக்கம், அலல்து குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் போக்கி விடும் தன்மை கொண்டது.

  7. அமில எதுகுதல் அறிகுறியை குறைக்கும்

  இதை பலரும் நோய் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் இது உடலில் சில அசௌகரியமான அமில செயல்பாட்டால் ஏற்படும் உபாதை. இது வயிற்றில் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும். எனினும், கற்றாழையை சரியான முறையில் உட்கொள்ளும் போது, இந்த பிரச்சனையை குணப்படுத்தி விடலாம்.

  8. கொழுப்பை குறைக்க உதவும்

  Pixabay

  உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்ற கற்றாழை பெரிதும் உதவுகின்றது. மேலும் இது க்ளுகோஸ் அளவையும் சீர் செய்ய உதவுகின்றது. இது ஒரு கொழுப்பை குறைக்கும் முகவராக செயல்படுகின்றது.

  9. இருதயத்தின் செயல்திறனை அதிகரிக்கும்

  கற்றாளை உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்கும் போதிய பிராணவாயு கிடைக்க உதவும். மேலும் இது இரத்தத்தை சுத்தம் செய்யவும் உதவும். இந்த இரண்டு குறிப்பிடத்தக்க பண்புகள், இருதயத்தின் செயல்திறனை அதிகரிக்க பெரிதும் உதவியாக உள்ளது.

  10. ஈர்களை குணப்படுத்தும்

  பற்கள் மற்றும் ஈர்களில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்த கற்றாழை உதவுகின்றது. கற்றாழை சாறை வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், ஈர்களில் ஏற்பட்டிருக்கும் வீக்கம், புண், வாய் துர்நாற்றம், போன்ற பிரச்சனைகள் குறையும். மேலும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

  11. மல சிக்கல்

  மல சிக்கல் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். எனினும், கற்றாழையில் இருக்கும் ஜீரணம் செய்யக்கூடிய பண்பினால், வயிற்றில் மற்றும் குடலில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, எளிதாக மல சிக்கலை போக்க உதவுகின்றது. இது ஒரு நல்ல மலமிலக்கியாக செயல்படுகின்றது.

  12. நீரழிவு நோயினால் ஏற்படும் பாத பிரச்சனைகள்

  Pixabay

  நீரழிவு நோய் வந்தால், நாளடைவில் பாதத்தில் எரிச்சல் மற்றும் வலி போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். எனினும், கற்றாழை இத்தகைய பிரச்சனைகளை எளிதில் போக்க, மற்றும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகின்றது.

  13. ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள்

  கற்றாழையில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. இது பக்டீரியாக்களால் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகின்றது. இதனால் உடலின் ஆரோக்கியமும் அதிகரிகின்றது.

  14. ஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும்

  ஊதா கதிர்வீச்சால் உடல் மற்றும் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து  கற்றாழை பாதுகாகின்றது. இதுமட்டுமல்லாது, சூரிய கதிரின் தாக்கத்தில் இருந்தும் சருமத்தை பாதுகாக்க இது உதவுகின்றது.

  15. மன அழுத்தத்தை குறைக்க உதவும்

  கற்றாழை மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் இது நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றது. இதனால் நல்ல அமைதியான மனம் பெறவும், நல்ல சிந்தனைத் திறனைப் பெறவும் கற்றாழை உதவியாக உள்ளது.

  16. தீக் காயங்களை குணப்படுத்தும்

  Pixabay

  கற்றாழை தீயினால் ஏற்படும் காயங்களை குணப்படுத்த உதவியாக உள்ளது. இது காயம் ஏற்பட்ட பகுதிக்கு குளிர்ச்சியைத் தந்து, எரிச்சலை போக்கும். இதனால் விரைவாக புண் குணமாகும்.

  17. எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி

  இது வயிற்று போக்கு மற்றும் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனையை உண்டாக்கக் கூடும். எனினும், கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் மற்றும் நோய் எதிர்க்கும் பண்புகள், இத்தகைய குடலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவாக குணப்படுத்த உதவும்.

  18. ஜீரணத்தை சீர் செய்யும்

   கற்றாழையில் இருக்கும் ஆலோயன், மலமிளக்கி பண்புகளை உண்டாக்கும். மேலும் இதில் இருக்கும் பிற சத்துக்களும் உணவை விரைவாக ஜீரணம் செய்ய உதவும். இதனால் உணவு எளிதாக ஜீரணமாகும்.

  19. நெஞ்செரிச்சல்

  வாயு போன்ற பிரச்சனைகளால், நெஞ்செரிச்சல் பெற்படுவது இயல்பு. எனினும், இது அதிக அளவு அசௌகரியத்தை தரக் கூடும். ஆனால், கற்றாழையில் இருக்கும் குளிர்ச்சி ஊட்டும் பண்புகள் மற்றும் விரைவாக குணப்படுத்தக்கூடிய பண்புகள், நெஞ்செரிச்சலை விரைவாக குணமடைய செய்யும்.

  20. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்

  Shutterstock

  கற்றாழை இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீர் செய்ய பெரிதும் உதவுகின்றது. இதன் காரணமாக நீரழிவு நோயும் குணமடைகின்றது. மேலும் இத்தகைய குணப்படுத்தும் பண்பால், இருதய நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் குனமாகின்றது.

  கற்றாழையை எப்படி பயன்படுத்துவது(How to use aloe vera)

  கற்றாழையில் நிறைந்திருக்கும் நற்பண்புகளை பற்றி பார்த்தும். இப்போது எப்படி கற்றாழையை உட்கொள்ள பயன்படுத்துவது என்று இங்கே பார்க்கலாம்;

  1. கற்றாளை சாறு

  • கற்றாழையின் சதைப்பகுதியை தோல் நீக்கி விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனை மிக்கிசியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் சிறிது இஞ்சி மற்றும் தயிர் / மோர் சேர்த்துக் கொள்ளலாம்
  • நன்கு அரைத்ததும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அருந்தலாம்.

  2. கற்றாழை சாலட்

  • கற்றாழையை தோல் நீக்கி, சதைப் பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இந்த சதையை சிறு துண்டுகளாக நறுக்கி, குறைந்தது 3 முறையாவது, வழுவழுப்பு போகும் வரை கழுவிக் கொள்ள வேண்டும்
  • பின்னர், ஒரு கிண்ணத்தில் உங்களுக்கு விருப்பம் உள்ள காய் வகைகள் சிறு துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்த்து கிளறவும்
  • அப்படி இல்லையென்றால், இந்த நறுக்கி சுத்தம் செய்த கற்றாழையை மட்டுமே வைத்து நீங்கள் சாலட் செய்யலாம்
  • இப்போது சிறிது புதினா இலைகளை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும்
  • சிறிது மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
  • தேவைப்பட்டால், எழுமிச்சைபழ சாறு சேர்த்துக் கொள்ளலாம்
  • இப்போது கற்றாழை சாலட் தயார்

  கற்றாழையில் இருந்து கிடைக்கும் சரும நலன்கள்(Aloe vera for skin)

  Shutterstock

  கற்றாழை என்றாலே, அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது, சரும அழகு. கற்றாழையை பெரும் அளவு சரும ஆரோகியதிர்காகவும், அழகிற்காகவும் பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம், கற்றாழை பல நன்மைகளை சருமத்திற்கு தருகின்றது. மேலும் இது அதிக செலவு இல்லாமல், எளிமையாக அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாகவும் இருகின்றது. கற்றாழை எப்படி உங்கள் சரும நலனுக்கு பயன்படுகின்றது என்று இங்கே பார்க்கலாம்;

  1. எரிச்சல்

  கற்றாழை ஜெல்லை எரிச்சல் அல்லது தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவாக குணமடைந்து, சருமமும் நல்ல தோற்றத்தோடு இருக்கும்.

  2. வேனிற்கட்டி

  இது குறிப்பாக அதிகம் வெயிலில் இருப்பவர்களுக்கு ஏற்படும். சூரிய கதிர்களால் ஏற்படும் கட்டி மற்றும் சருமத்தில் எரிச்சல் போன்றவற்றை போக்க, கற்றாழை பெரிதும் உதவுகின்றது.

  3. சிறிய சிராய்ப்புகள்

  உடலில் எந்த பகுதியிலும், சிறிய சிராய்ப்புகள் ஏற்பட்டால் அதனை எளிதாக போக்கி விட கற்றாழை உதவுகின்றது. ஒரு நாளைக்கு மூன்று முறை கற்றாழை ஜெல்லை தடவி வந்தால், விரைவான பலனை எதிர்பார்க்கலாம்.

  4. வெட்டு காயம்

  கத்தி அல்லது வேறு ஏதாவது கூர்மையான பொருட்களால் சமைக்கும் போதோ அல்லது வேறு வேலை பார்க்கும் போதோ ஏற்பட்டால், அதனை விரைவாக குணப்படுத்த கற்றாழை ஜெல் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இது வெட்டு காயம் ஏற்பட்ட இடத்தில் தழும்புகள் ஏற்படாமலும் இருக்க உதவும்.

  5. வறண்ட சர்மம்

  வறண்ட சருமம் பல அசௌகரியத்தை கொடுக்கும். எனினு, கற்றாழை ஜெல்லை தினமும் பயன்படுத்தி வரும் போது, சருமத்திற்கு நல்ல ஈரத்தன்மை கிடைக்கும். இதனால் சருமம் நல்ல பொலிவோடும் இருக்கும்.

  6. பனிக்கடி

  இது அதிக அசௌகரியத்தையும், வலியையும் தரக்கூடிய பிரச்சனை. இது குணமாகும் வரை பல இன்னல்களை ஒருவர் சந்திக்க நேரிடும். எனினும், கற்றாழை ஜெல்லை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விரைவாக குணமடையலாம்.

  7. குளிர்புண்கள்

  இது வாயின் வெளிப்பகுதியில் ஏற்படும். இதனால் சரியாக சாப்பிட முடியாமலும், பேச முடியாமல் இருக்கும். இது வைரஸ்சால் ஏற்படுகின்றது. எனினும், இதனை கற்றாழை ஜெல்லைக் கொண்டு விரைவாக குணப்படுத்தி விடலாம்.

  8. சிரங்கு

  சிரங்கு அதிக வறண்ட சருமத்தை ஏற்படுத்தும். மேலும் இது சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் அதிக அரிப்பை உண்டாக்கும். இது அதிக சிரமத்தை ஏற்படுத்தும் பிரச்சனையாக இருக்கும். எனினும், கற்றாழை ஜெல் இந்த சிரங்கு மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளை எளிதாக போக்கி விட உதவும்.

  9. சோரியாசிஸ்

  இது அரிப்பு மற்றும் வறண்ட சருமத்தை பாதிக்கப்பட்ட இடத்தில் உண்டாக்கும். எனினும், இது குணமடைய வெகு நாட்கள் எடுத்துக் கொண்டாலும், சரியான முறையில், இந்த கற்றாழையை பயன்படுத்தும் போது விரைவான பலனை எதிர் பார்க்கலாம். தினமும் இரண்டு வேளை கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் நல்ல பலனை விரைவாக எதிர்பார்க்கலாம்.

  10. முகப்பரு

  கற்றாழை முகத்தில் இருக்கும் பருக்களை போக்கவும், மீண்டும் அது வராமல் தடுக்கவும் உதவுகின்றது. கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், விரைவான பலனை எதிர்பார்க்கலாம்.

  சரும ஆரோக்கியத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்துவது(How to use aloe vera for skin)

  Pixabay

  1. வறண்ட சருமத்தை போக்க

  • சிறிது கற்றாழை சதையை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து கொள்ளவும்
  • சிறிது பால் மற்றும் பன்னீரையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
  • அனைத்தையும் நன்கு பசை போல செய்து கொள்ளவும்
  • இந்த பசையை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்
  • சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்

  2. கற்றாழை ஸ்க்ரப்

  • சிறிது கற்றாழை சதையை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் இரண்டு தேக்கரண்டு வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்
  • மேலும் தேவையான அளவு எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துக் கொள்ளவும்
  • அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்
  • இந்த கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்
  • பின்னர் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்
  • இப்படி செய்தால் தழும்புகள், மற்றும் பருக்கள் போன்றவை அகலும்

  3. பருக்களை போக்க

  • தேவையான அளவு கற்றாழை சதையை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் வாதுமை கொட்டையை பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும்
  • சிறிது தேன் சேர்த்துக் கொள்ளவும்
  • அனைத்தையும் நன்கு பசை போல அரைத்து, முகத்தில் தேக்க வேண்டும்
  • மிதமான மசாஜ் செய்து சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்
  • பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்

  4. சர்மம் பொலிவு பெற

  • சிறிது கற்றாழை சதையை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் தயிர் கலந்து நன்கு பசை போல அரைத்துக் கொள்ளவும்
  • தேவைபப்ட்டால் சிறிது தேங்காய் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்
  • இந்த கலவையை முகத்தில் தடவி அப்படியே சிறிது நேரம் விட்டு விடவும்
  • பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  5. சுருக்கங்களை குறைக்க

  • சிறிது கற்றாழை சதையை எடுத்து அரைத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது பால், கடலை மாவு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  • இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்
  • பின்னர் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்

  தலைமுடி வளர்ச்சிக்கு கற்றாழை(Aloe vera for hair growth)

  Pixabay

  • கற்றாழை தலைமுடி நன்கு வளர உதவும். இது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்
  • இது வறண்ட தலைமுடிகளை ஆரோகியமாக்கி நல்ல ஈரத்தன்மைப் பெற உதவும்
  • முடி உதிர்வை குறைக்க உதவும்
  • தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பை போக்க உதவும்
  • அடர்த்தியான கூந்தல் பெற கற்றாழை உதவியாக இருக்கும்
  • இது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி நல்ல வளர்ச்சியைப் பெற உதவும்
  • இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள், தலைமுடி பலமாக வேர் பகுதியில் பற்றிக் கொள்ள உதவுவதால், முடி உதிர்வு நாளடைவில் முற்றிலும் நின்று விடும்

  தலைமுடி வளார்ச்சிக்கு எப்படி கற்றாழையை பயன்படுத்துவது (How to use aloe vera for hair)

  கற்றாழை சருமத்திற்கு மட்டுமின்றி தலைமுடி வளர்ச்சிக்கும் நல்ல பலனை தரும். ஆனால் இதனை தினமும் பயன்படுத்தக்கூடாது. எந்தெந்த முறையில் எப்படி பயன்படுத்தலாம் என்பதை கீழே பார்க்கலாம்.

  செய்முறை 1

  • கற்றாழை சதையை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்
  • இதை நன்கு பசை போல அரைத்துக் கொள்ளவும்
  • இதனுடன் தேங்காய் எண்ணை கலந்து தலையில் வேர் முதல் நுணி வரை தடவி, மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
  • அப்படியே 2 மணி நேரம் வரை விட்டு விட வேண்டும்
  • பின்னர் சியக்காய் பயன்படுத்தி தலைமுடியை குளிர்ந்த நீரில் அலசி விட வேண்டும்

  செய்முறை 2

  • கற்றாழை சதையை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் சிறிது எலுமிச்சபழச்சாறு மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ளவும்
  • அனைத்தையும் நன்கு கலந்து தலையில் தேய்த்க்கவும்
  • வேர் முதல் நுணி வரை நன்கு தேக்க வேண்டும்
  • பின்னர் சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு, அப்படியே 2 மணி நேரம் வரை விட்டு விட வேண்டும்
  • பின்னர் குளிர்ந்த நீரில், சியக்காய் பயன்படுத்தி தலைமுடியை நன்கு அலசி விட வேண்டும்

  உடல் எடையை குறைக்க கற்றாழை(Aloe vera for weight loss)

  Pixabay

  உடல் எடையை குறைக்க கற்றாழை பெரிதும் உதவியாக உள்ளது. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், உடல் எடை குறைவதோடு, வேறு பல நற்பலன்களையும் பெறலாம்.

  1. உடலில் உள்ள நச்சை நீக்கும்

  கற்றாழை உடலில் இருக்கும் நச்சு கழிவுகளை நீக்க உதவியாக இருக்கும். இதனால் குறிப்பாக ஜீரணம் செரியாக நடந்து, கழிவுகள் வெளியேறி விடும். இது உடல் எடை குறைந்து சீரான அளவு இருக்க உதவும்

  2. வளர்சிதை மாற்றத்தை அதிகரிகின்றது

  கற்றாழை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றது. இது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு விரைவாக எரிக்கவும் உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் பி, உடலில் தேவையின்றி சேர்ந்திருக்கும் கொழுப்பை, சக்தியாக மாற்றி, உடல் எடை குறைய உதவுகின்றது.

  3. அழற்சி எதிர்ப்பு பண்புகள்

  கற்றாழையில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது உடலில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகப்படுத்தி உடல் எடை சீரான அளவு இருக்க உதவுகின்றது. இதனால் தேவையற்ற உடல் எடை நாளடைவில் குறைகின்றது.

  4. நல்ல ஜீரணத்தை உண்டாக்குகின்றது

  கற்றாழை ஒரு நல்ல மலமிலக்கியாக செயல்படுகின்றது. கற்றாழை ஜீரண அமைப்பை சிறப்பாக செயல்பட செய்கின்றது. இதனால் உணவு முழுவதுமாக ஜீரணமாகி, தேவையற்ற கழிவுகளும் எந்த சிக்கலும் இன்றி வெளியேறி விடுகின்றது. இது உடல் எடை நல்ல சீரான அளவு இருக்க பெரிதும் உதவியாக உள்ளது. 

  5. தேவையற்ற நீர் சத்தை வெளியேற்றுகிறது

  கற்றாழை உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்ற உதவியாக இருகின்றது. இந்த தேவையற்ற நீரினால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், இதை வெளியேற்றி விட்டால், உடல் எடை நல்ல சீரான அளவிற்கு வந்து விடுகின்றது.

  உடல் எடையை குறைக்க கற்றாழையை எப்படி பயன்படுத்துவது(How to use aloe vera for weight reduction)

  Pixabay

  செய்முறை 1

  • கற்றாழை சதையை சிறிது எடுத்து தேவையான அளவு தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்
  • நன்கு கொதித்த பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி, வடிகட்டி இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாரை சேர்த்து கலக்கவும்
  • இந்த கற்றாழை தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்
  • இப்படி செய்து வந்தால், நாளடைவில் உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.

  செய்முறை 2

  • தேவையான கற்றாழை சதையை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனை சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு 5 முதல் 7 முறை தண்ணீரில்  கழுவ வேண்டும்
  • பின்னர் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அப்படி சாப்பிடலாம்
  • இப்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

  கற்றாழையால் ஏற்படும் உபாதைகள் ( Aloe vera side effects)

  Pixabay

  1. கற்றாழையை அதிக அளவு பயன்படுத்தும் போது சருமத்தில் தோல் உரிதல், அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கக் கூடும்
  2. இதனை அதிக அளவு உட்கொள்ளும் போது, வயிற்று போக்கு, ஏற்படக் கூடும்
  3. சிலருக்கு, கற்றாழையை அதிக அளவு பயன்படுத்தும் போது, குமட்டல் மற்றும் அசௌகரியமான உணர்வு ஏற்படலாம்
  4. கர்ப்பிணி பெண்கள் கற்றாழையை அதிக அளவு எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. இது அவர்களுக்கு வாந்தி, குமட்டல் போன்ற உபாதைகளை அதிகமாக்கக் கூடும்
  5. ஒரு சிலருக்கு, கற்றாழை வயிற்று வலியை ஏற்படுத்தக் கூடும்
  6. சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழையை தவிர்ப்பது நல்லது. இது பிரச்சனையை மேலும் அதிகமாக்கக் கூடும். குறிப்பாக சிறுநீரில் இரத்தம் கலந்து வரும் அளவிற்கும் பிரச்சனைகள் ஏற்படலாம்  
  7. கற்றாழை உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்றாலும், அதிக அளவு இதனை எடுத்துக் கொள்ளும் போது, அதுவே உடல் எடை அதிகம் குறைந்து, உடல் தளர்ச்சி மற்றும் பலமின்மையை உண்டாக்கக் கூடும்
  8. 12 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள் இதனை தவிர்ப்பது நல்லது. சில குழந்தைகளுக்கு வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்
  9. கற்றாழை இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவில் அதிக மாற்றத்தை உண்டாக்கக் கூடும் என்பதால், குறிப்பாக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் குணமாகும் வரை இதனை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது 

  கேள்வி பதில்கள்(FAQ)

  1. தினமும் கற்றாழை சாறு அருந்துவது நல்லதா?

  கற்றாழை சாறை தினமும் எடுத்துக் கொள்வதால் குடல் சுத்தமாகும். மேலும் மல சிக்கலை இது குணப்படுத்தும். மேலும் குடலில் இருக்கும் பக்டீரியா தாக்கத்தை குறைக்க உதவும். உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்க தினமும் கற்றாழை சாறை எடுத்துக் கொள்ளலாம்.

  2. கற்றாழை சருமத்திற்கு என்ன செய்யும்?

  கற்றாழையில் ஆக்சிஜனேற்றம், என்ஜைம்ஸ், வைட்டமின் எ, சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதால், சருமத்தில் தோன்றும் பருக்கள், வறட்சி மற்றும் பிற பிரச்சனைகளை போக்க இது உதவியாக உள்ளது.

  3. கற்றாழையை அப்படியே பச்சையாக சாப்பிடலாமா?

  சாப்பிடலாம். கற்றாழை சதையை சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி பின்னர் அப்படியே சாப்பிடலாம். இது உடலுக்கு பல நன்மைகளைத் தரும்.

  4. முகத்தில் கற்றாழையை தடவுவதால் ஏதாவது உபாதைகள் உண்டாகுமா?

  இல்லை. நீங்கள் சரியான முறையில் கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்தினால், எந்த உபாதைகளும் ஏற்படாது. மேலும் இது நன்மைகளையே தரும்.

  5. சிறுநீரக ஆரோக்கியத்திற்கு கற்றாழை நல்லதா?

  கற்றாழை சாறை தினமும் அருந்தி வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தி விடலாம். எனினும், கடுமையான பிரச்சனைகள் இருந்தால், அதற்கு மருத்துவ உதவி தேவைப் படும்.

  6. அதிக அளவு கற்றாழை தீங்கு விளைவிக்குமா?

  ஆம். கற்றாழையை குறிப்பிட்ட அளவிற்கு மேல் உட்கொள்ளும் போதோ அல்லது சரும அழகிற்கு பயன்படுத்தும் போது, எதிர்மறை விளைவுகளை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் இதனை நீங்கள் தினமும் பரிந்துரைக்கப்பட்ட அளவு பயன்படுத்துவதே நல்லது.

  7. கற்றாழை மல சிக்கலை உண்டாக்குமா?

  கற்றாழையை சாறாக எடுத்துக் கொள்ளும் போது, இது ஒரு நல்ல மலமிலக்கியாக செயல்படுகின்றது. அதனால் இது மல சிக்கலை உண்டாக்காது. எனினும், அதிக அளவு எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

  8. வாயு பிரச்சனையை போக்க கற்றாழை உதவுமா?

  கற்றாழை வாயுவால் ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் வலி போன்ற பிரச்சனைகளை போக்க உதவும். இது ஒரு நல்ல வலி நிவாரணியாகவும் செயல்படுகின்றது. 

   

  மேலும் படிக்க - பல நன்மைகளைத் தரும் துளசி – உங்களுக்காக சில சுவாரசியமான தகவல்கள்!

  பட ஆதாரம்  - Shutterstock

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!