இன்று திங்கள் கிழமை ஸ்வாதி நட்சத்திரம் பிரதமை திதி ஐப்பசி மாதம் பதினோராம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாள். பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். உறவினர்கள் மகிழ்வு தருவார்கள். உத்யோகத்தில் உபத்திரவங்கள் இருக்காது. நேரத்திற்கு உணவு சாப்பிடுவது அவசியம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு செழிப்பான தினமாக இருக்கும். பணவரவுகள் உறுதியாக வந்தடையும். உறவினர்கள் உபத்திரவம் குறையும். ஆத்திரம் கோபம் இவற்றால் அழிவு நிச்சயம். மனிதர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படலாம். அனுபவஸ்தர்கள் அறிவுரை பின்பற்றவும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாள். ஆனாலும் அடுத்தவர்களை அதிகாரம் செய்து எல்லாம் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள். அது சமயங்களில் உறவு நிலையை கேள்விக்குறியாக்கி விடலாம். பேசுவதை விட கேட்பது நல்லது.
கடக ராசி
கடக ராசிக்காரர்கள் நினைத்தது நிறைவேறும். மிகவும் சுயநலம் கருதாமல் மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள். வாழ்க்கைத் துணை சொல்வதை கேளுங்கள். உண்மையாக இருங்கள். இறைவன் உங்கள் பக்கம் நிற்பார்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுமாரான நாள். வேலை பரபரப்பாக போகும். அதில் பல ஆச்சர்யங்கள் நடக்கலாம். குடும்பத்தினர் மற்றும் சுகமாக இருந்தால் போதும் என்பதே உங்கள் லட்சியம். அதற்காக மற்றவர்களை காயப்படுத்தாமல் இருங்கள்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல நாள். நண்பர்கள் உடன் இருப்பார்கள். யோசிக்காத உங்கள் செயல்கள் எல்லாம் தீமையை திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். எல்லோருக்கும் நன்மையை செய்வதே உங்கள் லட்சியமாக மாறினால் வாழ்க்கை சிறக்கும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் விலகும் நாள். இனி எல்லாம் சுகமே. மனிதர்களை நம்புவதை விட மனிதர்களை சார்ந்திருப்பதை விட இறைவனை நம்புங்கள். அவரை சார்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை சுகமாகும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தெளிவான நாள். குடும்பத்தில் சிலர் குழப்பங்களை ஏற்படுத்தினாலும் தெளிவாக அதனை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உங்கள் மீது பழி வராமல் பக்குவமாக சூழ்நிலையை கையாளுங்கள்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்கள் சொகுசுக்காக ஏங்குபவர்கள். கேட்டது எல்லாம் கிடைத்தாலும் இன்னும் இன்னும் என்றும் ஓடாமல் கிடைத்ததை கொண்டு மகிழுங்கள். நாக்கு துப்பாக்கியை விட கூர்மையான கொலை ஆயுதம் என்பதை மறவாதீர்கள். காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்வான நாள். கடந்த கால கசப்புகளுக்கு காரணம் நீங்களேதான் என்பதை உணருங்கள். உங்களால் வாழ்விழந்த நபர்களை சந்தித்து மன்னிப்பு கோருங்கள். மனதார சரியாகும் போது மகிழ்ச்சி என்பதே வாழ்வு.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு நிறைவான நாள். மற்றவரை நம்பாமல் நீங்கள் தன்னிச்சையாக செய்யும் செயல்கள் உங்களை எப்போதும் பாதிக்கலாம். உங்களை நேசிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை தராதிருக்க பழகுங்கள். பாதுகாப்பின்மையால் பயப்படாமல் இருக்கவும்.
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு சோதனையான நாள். சுற்றி உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வருந்தாமல் மனதில் பட்டதை செய்யுங்கள். மனசாட்சி பேசுவதை செவிமடுங்கள். உங்களால் வாழ்விழந்து தவிப்பவர்களுக்கு உதவிகள் செய்வதால் சாபங்கள் தீரலாம்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!