பணவரவும் காரிய வெற்றியும் கிடைக்கப் போகும் அந்த ஐந்து அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

பணவரவும் காரிய வெற்றியும் கிடைக்கப் போகும் அந்த ஐந்து அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

இன்று வியாழக்கிழமை சதுர்த்தி திதி கார்த்திகை நட்சத்திரம் புரட்டாசி மாதம் 30ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள். சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். : நண்பரின் உதவியால் பெருமை கொள்வீர்கள். செயலில் புதிய பரிமளிப்பும் உருவாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

எதிர்பார்த்த பணம் ஓரளவு கிடைக்கும். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

மிதுனம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.தாராள பணவரவு உண்டு.

கடகம்

பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.

சிம்மம்

பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

கன்னி

எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும்.

 

 

 

 

துலாம்

இன்று நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும்.உண்மை, நேர்மைக்கு முக்கியத்துவம் தருவீர்கள்

விருச்சிகம்

நிகழ்வுகளை உணர்ந்து செயல்படுவீர்கள். அவமதித்தவர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். கருணை மனம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கலாம். விருந்தினர் வருகை இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது

மகரம்

உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும்.: சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வர். சமயோசித செயல் நன்மை தரும்.

கும்பம்

வீண் செலவை உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். கூடுதல் முயற்சியினால் நிலுவை பணம் வசூலாகும்

மீனம்

எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். உங்களிடம் உதவி பெற்று நன்றி மறந்தவரை மன்னிப்பீர்கள்.மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும்.

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!