எதிர்கால திட்டங்கள் நிறைவேறுவதால் உற்சாகமடையும் மூன்று ராசிக்காரர்கள்? : சரி பாருங்கள்!

எதிர்கால திட்டங்கள் நிறைவேறுவதால் உற்சாகமடையும் மூன்று ராசிக்காரர்கள்? : சரி பாருங்கள்!

இன்று வியாழக் கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம். புரட்டாசி மாதம் 16ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்.

மேஷம்

அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவதால் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.  

ரிஷபம்

இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.  உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சமூக வாழக்கையில் கவனம் செல்ல இயலாது. 

மிதுனம்

நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். உடனிருப்பவர்களால் அலைச்சல் உண்டாகும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் சமாளித்துவிடுவீர்கள். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.  

கடகம்

அலுவலகத்தில் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். காகித வேலைகளை இன்று முடிக்க வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். எனினும் தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும் என்பதால் கவனம் தேவை. மாலை நேரத்தை நண்பர்களுடன் செலவழியுங்கள். 

சிம்மம்

மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். அலுவலகத்தில் மூத்த அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இதனால் அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும். 

கன்னி

இன்று புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அலைச்சலும், சோர்வும் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சமூக வாழ்க்கை பின் இருக்கையில் இருக்கும்.

yotube

துலாம்

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்பதால் கவனம் தேவை. குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் இன்று உங்களை தேடி வருவார். இதனால் உற்சாகமாக இருப்பீர்கள். 

விருச்சிகம்

இன்று குழப்பமாக காணப்படுவீர்கள்.  உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ள வேண்டாம். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். ஆனால் நாள் இறுதிக்குள் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். 

தனுசு

புதிய முயற்சி சாதகமாக முடியும். அலுவலகப் பணியின் காரணமாகப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படக் கூடும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. 

மகரம்

இன்று அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உடன் பணிபுரியும் நபர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணிகள் குறித்த தெளிவு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அதன் மூலம் தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும். 

கும்பம்

இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இன்று புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திடுவீர்கள். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். நண்பர்களைச் சந்திக்கவும், அவர்கள் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு ஏற்படும்.  

மீனம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். அலுவலகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!