இதுக்கு பெயர் லவ்வா.. வசைபாடிய பிரபல நடிகை! வாய் திறக்காத கவின்-லாஸ்லியா:

இதுக்கு பெயர் லவ்வா.. வசைபாடிய பிரபல நடிகை!  வாய் திறக்காத கவின்-லாஸ்லியா:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னனாக கவின் இருந்து வந்தார். ஆரம்பத்தில் சாக்ஷியும், கவினும் காதலித்து வந்தனர். ஆனால் சிறிது நாட்கள் கடந்த பின்னர் எல்லாரிடமும் பழகுவது போல தான் உன்னுடனுன் பழகினேன் என கவின் புதிய பிரளயத்தை கிளப்பினார். 

இதனால் கவின் - சாக்ஷி இடையே பிரச்சனைகள் எழுந்தது. ஒரு கட்டத்தில் சாக்ஷியிடம் இருந்து விலகி லாஸ்லியாவிடம் கவின் நெருக்கமானார். லாஸ்லியாவிற்கு அதிக ரசிகர்கள் இருப்பது தெரிந்தே கவின் அவ்வாறு செய்ததாக நெட்டிசன்கள் கூறி வந்தனர். 

ஒரு கட்டத்தில் கவின், லாஸ்லியாவிடம் நெருக்கமாக பழகி வந்ததை கவனித்த சாக்ஷி பொறாமையில் பொங்கி எழுந்து உச்சக்கட்ட சண்டைக்கு சென்றார். இதனால் சாக்ஷி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். சாக்ஷி வெளியேறிய பின்னர் கவின் - லாஸ்லியா காதல் மிகவும் நெருக்கமானது.

twitter

லாஸ்லியாவும் கவின் மீதான காதலை அவ்வப்போது உறுதி செய்து வந்தார். அந்த தருணத்தில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்து அறிவுரை வழங்கியதை தொடர்ந்து இருவரும் சற்று ஒதுங்கி இருந்தனர். அவ்வப்போது கமல்ஹாசனும் விளையாட்டில் மற்றும் கவனம் செலுத்துங்கள் என்றும் கூறி வந்தார். 

ஆனால் கடைசி சில வாரங்களில் இருவரும் மீண்டும் பழக ஆரம்பித்து மகிழ்ச்சியாகவே இருந்தனர். மேலும் லாஸ்லியா ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கவின் 5 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருந்தார் என்றும் கூறப்பட்டது. 

தமிழ் சினிமாவின் ஆதர்ஷ நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரன் ! ஆச்சர்யம் தரும் புகைப்படம் !

இருப்பினும் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை தான் பிடித்தார்.  கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். அவ்வப்போது கவிலியா (கவின்&லாஸ்லியா) என்ற ஹேஷ்டேக்கில் இருவருக்கும் ஆதரவாக கருத்துக்கள் பரிமாறியும் வந்தனர்.

twitter

கவின், லாஸ்லியா காதல் குறித்து என்ன முடிவு எடுத்துள்ளனர் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும்  தற்போது வரை ஏமாற்றமே காணப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியா எந்த ஒரு பேட்டியிலும் பங்குபெறவில்லை. 

கவினும், லாஸ்லியாவும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசவில்லை என்றே தெரிகிறது. பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி படமாக்கப்பட்டபோது கூட தனித்தனியே தான் அமர்ந்திருந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு லாஸ்லியா தனது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பியுள்ளார். 

இதனால் கவிலியா ஆர்மி ரொம்பவே ஷாக்காகி போனது. இதனிடையே விமான நிலையத்தில் லாஸ்லியாவை பல்வேறு ரசிகர்களும் வரவேற்றனர். இலங்கை சென்ற லாஸ்லியாவிற்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 

twitter

அப்போது பேட்டியளித்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சி என்னைப் போன்ற சாதாரண பெண்ணுக்கும் புகழ் வெளிச்சத்தை தந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக என்னை பெரிய அளவில் யாருக்கும் முன்னதாக தற்போது இந்நிகழ்ச்சியின் மூலமாக பெரும் புகழை அடைந்திருக்கிறேன். 

காதலன் குடும்பத்திற்கு பிரியாணி செய்து கொடுத்து அசத்திய பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள்!

அதற்காக ரசிகர்களுக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.மேலும் இலங்கை சென்ற லாஸ்லியா தனது தோழிகளைச் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் சிங்கிள்ஸ் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுவும் ரசிகர்களை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் கவினோ, லாஸ்லியாவே இதுகுறித்து தற்போது வரை எதுவும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

twitter

இந்நிலையில் நடிகை சித்ரா லொஸ்லியா, கவின் காதலைக் குறித்து மிகவும் கோபமாக பேசியுள்ளார். கவின் - லாஸ்லியா காதல் கேவலமானது என்றும், இதெல்லாம் காதலா? என்று பயங்கரமாக பேசியுள்ளார். மேலும் கவின் - லாஸ்லியா இடையே க்ரஷ் இருப்பதாக எழுப்பிய கேள்விக்கு, 

அந்த காலத்தில் எல்லாம் க்ரஷ் என்றால் எழு வருடம், எட்டு வருடம் ஒருவர் மீதே இருக்கும், ஏன் பத்து வருடம் கூட இருக்கும். இவர்களைப் பார்த்தால் ஃபாஸ்ட் புட் மாதிரி தோன்றுகின்றது. இது  மிகவும் கெடுதல், இதெல்லாம் வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதுக்கு பெயர் லவ்வா... கருமம் பிடித்தது... என்றும் பயங்கரமாக பேசியுள்ளார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!