அமெரிக்காவின் அரிஸோனாவில் வசித்து வரும் காதல் கணவன் மற்றும் மனைவி பற்றி பெண்களாகிய நாம் அறிந்து கொண்டே ஆக வேண்டும். கணவர் பெயர்தான் மிக முக்கியம் பால் (paul) அந்த அதிர்ஷ்டக்கார மகராசியின் பெயர் மார்க்கட் ப்ராக்மென் (Margot Brockmann)
1950களின் தொடக்கத்தில் தங்களது சொந்த நாடான ஜெர்மனியில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் கலந்து கொண்ட இந்த இருவரும் முதலில் ஹாய் மட்டுமே சொல்லி நடனம் ஆட ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் விடியும் போது இருவரும் காதலர்களாக மாறியிருக்கின்றனர்.
அனுஷ்கா மிகவும் அழகான பெண்.. சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள போகிறேன்.. பிரபாஸ் !
Youtube
அதன் பிறகான ஒவ்வொரு காதல் சந்திப்பின் போதும் புத்தம் புதிய ஆடைகளை காதலிக்கு வழங்குவது பாலுக்கு பிடித்தமான செய்யலாம். வழக்கமாக பெண்களுக்கு நினைவு சக்தி அதிகம் என்பது இங்கே மாறி இருக்கிறது. தாங்கள் முதல் முதலில் சந்தித்த போது பால் என்ன ஆடை அணிந்திருந்தார் என்பது மார்கெட்டுக்கு நினைவில்லை.. ஆனால் பால் எதையும் இன்று வரை மறக்கவில்லை. அந்த ப்ளூ கலர் ட்ரெஸ்ல அவ ஏஞ்சல் மாதிரி அப்படி இருந்தா என்று இன்னமும் காதல் ததும்பும் கண்களோடு பேசுகிறார்.
ஏன் புதிய ஆடைகள் தினமும் உங்கள் மனைவிக்கு வாங்கி தருகிறீர்கள் என்று கேட்டதற்கு ‘நாளுக்கு நாள் புதுப் புது ஃபேஷன்ஸ் அறிமுகமாகிக்கிட்டே இருக்கு. அதுக்கு ஏத்தா மாதிரி மார்கட் காட்சி தர வேண்டாமா..? அதனாலதான் டிரெஸ் வாங்கிக் கொடுத்துக்கிட்டே இருக்கேன்… நான் அவளுக்கு வாங்கித் தர்ற எல்லாமே அந்தந்த சமயத்துல டிரெண்டுல இருந்ததுதான். ஒவ்வொரு வருஷமும் ஒரு செட் டிரெஸ்ஸஸ்ஸை வித்துடுவோம். பேரம் பேசமாட்டோம். கேட்கற விலைக்கு கொடுத்துடுவோம்…” என்று தன்னுடைய மனைவியை அணைத்த படி சொல்கிறார்.
பயபக்தியும் அதிக அக்கறையும் உள்ளவரே என் கணவர்.. கல்யாண கனவுகளில் காஜல் அகர்வால் !
Youtube
இப்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்த காதல் தம்பதி ஒரு கேரேஜ் முழுக்க 55000 புது ஆடைகள் குவிந்து கிடப்பதாக கூறுகின்றனர். இவரை பற்றி மனைவியாகிய (கொடுத்து வச்ச மகராசி!) மார்க்கட் பேசும்போது ஒரு நாள் அணிந்த ஆடையை தான் திரும்ப அணிந்ததே இல்லை என்று கூறுகிறார். எந்த ஒரு மகாராணி மஹாராணியும் இப்படி ஒரு வாழ்வை வாழ்ந்திருக்க மாட்டாள் அப்படி வாழ்க்கையை நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன் என்று பெருமை பொங்க கூறுகிறார்.
இப்போதுதான் பாலை மிரட்டி ஆடைகள் வாங்குவதை குறைந்திருப்பதாக கூறும் மார்க்கட் அப்படி இருந்தாலும் ஏதாவது சாக்கு போக்கு கண்டுபிடித்து தனக்கு பால் ஆடைகள் வாங்கி விடுவதாக கூறி இருக்கிறார்
Youtube
இவரது ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகள் உடன் அணியும் அணிகலன்களுடன் . evolution-vintage.com என்கிற வலைத்தளத்தில் குறைந்த விற்பனைக்கு கிடைக்கின்றனவாம். ஆஹா இவரல்லவோ கணவர் இதல்லவோ காதல் என்று மனம் சொல்கிறது!
ஆனால் தமிழ்நாட்டிலோ வருடத்திற்கு ஒருமுறை மனைவி தீபாவளிக்கு துணி எடுக்க போவது பற்றி மீம்ஸ் போட்டு கொல்கிறார்கள். இவர்களுக்காகவே இந்த செய்தியை பகிர தோன்றியது.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!