நீங்கள் விரும்பும் வாழ்க்கையை விரைவில் அடைவதற்கான *இரகசியம்* இதுவே!

 நீங்கள் விரும்பும் வாழ்க்கையை விரைவில் அடைவதற்கான *இரகசியம்* இதுவே!

எண்ணங்கள்தான் வாழ்க்கைக்கு வடிவம் தருகிறது. நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் நேர்மறையான அனுபவங்களும், எதிர்மறையான அனுபவங்களும், நம் மனதில் உண்டாகும் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களின் விளைவால் ஏற்படுவது என்ற நம்பிக்கையை கொண்டதுதான் ஈர்ப்பு விதி.

‘நீங்கள் என்ன நினைத்தீர்களோ அதுவாகவே ஆகி இருக்கிறீர்கள்’ என்று புத்தர் ஈர்ப்பு விதியை பற்றி முதன் முதலில் கூறியிருக்கிறார். எண்ணங்கள் நன்றாக இருந்தால், அனைத்தும் நன்றாகவே நடக்கும். ஈர்ப்பு விதிகளின் படி நம் எண்ணங்களை எப்படி படிப்படியாக உயர்த்தி, நாம் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பதைப்பற்றி விரிவாக காணலாம். ஈர்ப்பு விதிகள் பல உண்டு. அவற்றுள்,முக்கியமான ஈர்ப்பு விதிகள் இதோ:

1.நன்றி கூறுவது
2. கவனம்
3. காட்சிப்படுத்துதல்
4. உறுதிமொழி
5. தியானம்
6. நேர்மறை எண்ணம்
7. விட்டு விடு
8. அதிகம் வாசித்தல்

8 முக்கிய ஈர்ப்பு விதிகள் (Law of attraction)

இப்போது ஒவ்வொன்றையும் விளக்கமாக கற்றுக்கொண்டு ஈர்ப்பு விதியின் படி நம் வாழ்க்கையை நம் எண்ணங்களால் உயர்த்தலாம் வாருங்கள்.

1. நன்றி கூறுவது

“தடைகளை நொறுக்கினால் அன்பு ஆரம்பமாகும் ” - டானியல் லைட்

காலையில் எழுந்ததும் உங்களுக்கு கிடைத்த மூன்று விஷயங்களுக்கு நன்றி கூறி உங்கள் நாளைத் துவங்குங்கள். இது உங்கள் நாளை நல்ல மனநிலையில் அராம்பிக்க உதவும். அது போல நீங்கள் பெரும் எந்த உதவிக்கும் நன்றி சொல்லிப் பழகுங்கள். அது செய்தவரையும் ஊக்கப்படுத்தும், உங்களுக்கும் நன்மை பயக்கும். நன்றாக யோசித்துப் பாருங்கள், நீங்கள் நன்றி கூறாத எந்த பொருளும், உறவும் உங்களிடம் இப்போது இருக்காது.

ஒருவர் சுமாராக சமைத்திருந்தால்கூட அவரின் உழைப்பை மனதில் கொண்டு நன்றாக இருக்கு என்று சொல்லிப்பாருங்கள் (முயற்சிக்கலாமே!). அடுத்த முறை நிஜமாகவே சூப்பர் டிஸ் கிடைக்கும். ஆனால் நம்மில் பலர், சூப்பராக இருந்தால் கூட உப்பு குறைவு, பார்க்க கலர் நன்றாக இல்லை, காரம் போதவில்லை என்று எடுத்த எடுப்பிலேயே குறை சொல்லிவிடுவர். அது செய்வோரையும் சங்கடப்படுத்தி, பிறகு உங்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்த அன்பும் பாழாகி விடும் வாய்ப்பே அதிகம்.நன்றி கூறுவதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். அது உங்களை முழுமையாக நேர்மறையான எண்ணத்துடன் வாழ உதவும்.

2. கவனம்

நீங்கள் எந்த விஷயங்களில் பின் தங்கி உள்ளீர்கள் என்று கவனித்து வருந்துவதை விட்டு, உங்களுக்கு என்ன வேண்டும் என்ற விஷயங்களுக்கு உங்கள் கவனத்தை செலுத்துங்கள்!

‘எங்கிட்ட மட்டும் இப்ப ஒரு கார் இருந்திருந்தா?’ , ‘அச்சச்சோ, இந்த முறை பரிட்சையில் தோல்வி அடையக்கூடாதே!’, ‘நான் தோற்க விரும்பவில்லை’, போன்ற எண்ணங்களை தவிர்த்து,‘கார் இல்லை என்றாலும் என்னால் இதை செய்ய முடியும் பாருங்க!’, ‘கடினமா படிச்சு நல்ல மதிப்பெண் எடுப்பேன்’, ‘நான் ஜெயிக்க வேண்டும்’, போன்ற நல்ல வழிகளில் நம் கவனத்தை செலுத்த வேண்டும். கவனம் நாம் செய்யும் செயலில் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் அனைத்தும் நம் இலக்கில் இருந்தால், நாம் விரும்பும் வாழ்க்கை நம் கையில்.

3. உறுதிமொழி

உங்களுக்கு விருப்பமானவற்றை அடைய நீங்கள் விரும்புவது இதுதான் என்பதை உங்களுக்குள், ஒருமுறை அல்லது இரண்டுமுறை சொல்லி முடித்தால் போதாது. அது உங்கள் நினைவில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். தினம் ஒரு செயல் மூலம் உங்கள் இலக்கை நோக்கி பயணிக்க இந்த எண்ணம் உங்களை உந்தும்.

உங்கள் மன உறுதி தினம் தினம் அதிகரித்து உங்கள் இலக்கை அடைய கற்றுக்கொடுக்கிறது என்று உறுதியாக இருங்கள்.‘நான் அழகான ஒரு உறவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’, ‘அன்பு என் வழியில் இருக்கிறது’ போன்ற நேர்மறையான எண்ணங்களை தினமும் திரும்ப திரும்ப உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

4. காட்சிப்படுத்துதல்

"தெரிந்தோ தெரியாமலோ அனைவரும் காட்சிப் படுத்திப் பார்ப்பார்கள். காட்சிப்படுத்திப் பார்ப்பதே வெற்றியின் சிறந்த ரகசியம் ஆகும் " - ரோன்டே பைர்ன்

உங்கள் இலக்கை முன்கூட்டியே அடைந்து விட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதான் காட்சிப் படுத்துதல் ஆகும்.
உதாரணத்திற்கு, அலுவலகத்தில் நீண்ட நாட்களாக அடுத்த பதவிக்காக(promotion) காத்திருக்கிறீர்கள். அது கிடைக்கவில்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டிராமல், நீங்கள் நினைக்கும் பதவி கிடைத்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். எது நடந்தால் உங்களுக்கு சந்தோசம் கிடைக்குமோ அதை மட்டும் கற்பனை செய்யுங்கள். இந்த எண்ணம் உங்களை படிப்படியாக உங்களை அதற்கான வேலைகளைச் செய்யத் தூண்டும்.

இதற்கு நீங்கள் ஒரு விஷன்போர்டு(visionboard) பயன்படுத்தலாம். உங்கள் நிகழ் கால இலக்குக்கை அடையப் பயன்படும் அனைத்தையும் நீங்கள் தினம் பார்க்கும் இடத்தில் புகைப்படங்களாக ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களையும் அறியாமல் உங்களுக்கு ஒரு புத்துணர்வு தரும்.

5. தியானம்

அனைத்து ஈர்ப்பு விதிகளிலும் கடினமான விதி தியானம் செய்வது. ஆனால் பழகிக்கொண்டீர்களானால், உங்கள் எண்ணங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் நிச்சயம் வந்துவிடும்.

நன்றாக சவுகரியமான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள், கண்களை மூடி உங்கள் சுவாசத்தை கவனிக்கவும். இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் என தியானத்தை ஆரம்பிக்கவும். அலைபாயும் எண்ணங்கள் ஒரு கட்டத்தில் தீர்ந்துபோய் உங்கள் வழிக்கு வரும். அப்போது நேர்மறையான எண்ணங்கள் தோன்றும்.

6. விட்டு விடுங்கள்

நம்மில் பலருக்கு நடக்காத ஒன்றை நினைத்து கலங்குவது, நம் கட்டுப்பாட்டில் இல்லாத செயலுக்கு புலம்புவது வழக்கம். அப்படி நினைப்பதை தவிருங்கள்.

‘முழுமையான அமைப்புடன் ஒரு உறவு அமையாது’, ‘நாம் செய்த கர்மாவின் பயனை அனுபவித்துதான் ஆகா வேண்டும்’ போன்ற எண்ணங்களை உங்கள் நம்பிக்கையை இந்த வகையான விஷயங்களில் இருந்து நீக்கி விடுங்கள். இப்படிப்பட்டஎண்ணங்கள் உங்கள் முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

மேலும், உங்களைச் சுற்றி உள்ள வேண்டாதவற்றைக் களைந்து, எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடுபடுங்கள்.

7. நேர்மறை எண்ணம்

நீங்கள் விரும்பும் அனைத்து காரியங்களையும் ஒரு பேப்பரில் எழுதுங்கள். ‘இந்த வாரம் என் தோழி என்னை பார்க்க வருகிறாள்’, ‘குடும்பத்துடன் அடுத்த மாதம் வெளியூர் செல்கிறோம்’, ‘2 வாரத்தில் என் பெற்றோர்களை பார்க்கப் போகிறேன்’, ‘இந்த மாத வேலைகளை விரைவில் முடிப்பேன்’, போன்ற நேர்மறையான எண்ணங்களைப் பட்டியலிடுங்கள். உங்களுக்குள் இருக்கும் மோசமான அல்லது கசப்பான எண்ணங்களை நேர்மறையான எண்ணங்களால் நிரப்புங்கள். உங்கள் மனத்தில் நேர்மறை எண்ணங்கள் தோன்ற போதிய நேரம் கொடுங்கள். உங்கள் நேர்மறை எண்ணங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

8. அதிகம் வாசித்தல்

உங்கள் இலக்கை அடைய உதவும், நேர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கும் புத்தகங்களை வாசியுங்கள். ஈர்ப்பு விதி சம்மந்தமான புத்தகங்களும் ஏராளமாக இருக்கிறது. நேர்மறையான உறுதிமொழி எவ்வாறு மேற்கொள்வது என்ற ஒன்றைப்பற்றியே நீங்கள் மிக அதிகமாகத் தெரிந்து கொள்ளும் வகைகளில் புத்தகங்கள் உள்ளன.

  • வாட்கின்ஸ் மற்றும் ஜேக் கேன்பீல்ட் எழுதிய ‘தி கி டு லிவிங் தி லா ஆஃப் அட்டராக்ஷன்’ (The Key to Living the Law of Attraction);
  • காதரின் ஹர்ஸ்ட்ன் ‘தி சீகிரேட் லா ஆப் அட்டராக்ஷன்’ (The Secret Law of Attraction: Master the Power of Intention) போன்ற புத்தகங்கள் உங்களுக்கு உதவும்.

அடிப்படையான ஈர்ப்பு (அட்ராக்ஷன்) விதியைப்பற்றி விரிவாகப் பார்த்தோம். உங்கள் உடல் எடை குறைய, வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு உயர, நல்ல வாழ்க்கைத்துணை அமைய, போதிய செல்வங்களைப் பெற, போன்ற பல இலக்குக்கு ஈர்ப்பு விதிகளை பயன்படுத்தி மகிழுங்கள்!

 

மேலும் படிக்க - வாழ்க்கையில் உங்களுக்கு உத்வேகம் அளிக்க 8 சிறந்த தமிழ் புத்தகங்கள்!

பட ஆதாரம்  -Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!