‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு படமான ‘ஏ மாயா சேசவே’ என்ற படத்தில் முதன் முதலில் சமந்தாவும், நாக சைதன்யாவும் சந்தித்தார்கள். எட்டு வருடங்கள் கழித்து 2017ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவரது மாமனார் நடிகர் நாகார்ஜூனாவின் 60ம் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இந்த ஜோடி குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இபிசா (Spain - Ibiza)என்ற பெலோரிக் கடலில் அமைந்துள்ள தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இபிசா தீவு இரவு நேர கிளப்களுக்கு மிகவும் பிரபலம். இபிசா என்றால் பார்ட்டி என்றுதான் நியாபகத்திற்கு வரும். இந்த அழகிய ஸ்பெயின் தீவு இரவு நேரங்களில் மிகவும் ஆரவாரத்தோடு காணப்படும்.
தீவு என்றாலே கடல் சூழ்ந்திருக்கும். உலகில் இப்படி பல தீவுகள் இருந்தாலும் மக்கள் சென்று (travel) ரசிக்க என ஒன்று இரண்டு இடங்களே இருக்கும். ஆனால், இபிசா (ibiza) தீவில் பல இடங்கள் இருக்கின்றன. அவற்றை ஒன்று விடாமல், அவற்றின் தனிச் சிறப்பை பற்றி காணலாம்.
இபிசா தீவின் பழமையான, உயரமான இடம் இந்த கோட்டை. சார்லஸ் V இந்த இடத்தில் மறுமலர்ச்சி செய்து மிகவும் உறுதியான கோட்டையை எழுப்பியுள்ளார். பிரெஞ்சு போன்ற அரசர்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள இந்த கோட்டை நிறுவப்பட்டுள்ளது. ஏழு கோட்டை கொத்தளங்கள் உடையது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையை கொண்டிருக்கும் அற்புதமான இடம். பார்க்கத் தவறாதீர்கள்.
கோட்டையில் இருந்து பழைய ஊரை பார்க்கச் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த தேவாலயம். பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் வேலைப்பாடுகள் மிகவும் பிரமிப்பாக கோதிக்(Gothic) மற்றும் பரோக்(Baroque) ஸ்டைலில் இருக்கிறது.
பழைய கட்டிடங்களும், புதிய கட்டிடங்களும் சேர்ந்து காணப்படும் இந்த ஊரைச் சுற்றி வாருங்கள். காலை முதல் மாலை வரை ரம்யமாக காட்சிதரும் தெரு வீதிகள் ஐரோப்பிய பொக்கிஷங்களில் ஒன்று.
இபிசா தீவின் மேற்கே இந்த கடற்கரை அமைந்துள்ளது. சூரியன் மறைவதை இந்த கடற்கரையில் இருந்து பார்க்கலாம். பீச் மற்றும் உலகப் புகழ்பெற்ற நைட் கிளப்களும் இந்த இடத்தில் காணலாம்.
தேவதாரு(pine) காடுகள், விவசாய நிலங்கள், மேலும் அங்கங்கே விடுமுறை நாட்களை கழிக்கும் இடங்கள் என இந்த தீவின் வடக்குப் பகுதி அமைந்துள்ளது. 52 மீட்டர் உயரமுடைய லைட்ஹவுஸ் இருக்கிறது. ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்கள் இந்த இடத்தை தேர்வு செய்யலாம்.
இபிசா தீவின் மேற்கே சற்று விலகிய இடத்தில், மனிதர்கள் வாழாத மர்மமான 400 மீட்டர் உயரம் கொண்ட பாறை உள்ளது. படகு மூலம் இந்த இடத்திற்குச் செல்லலாம். பல பழங்கதைகள் இந்த பாறையை வைத்து வளம் வந்தாலும், இந்த தீவு கண் எரிச்சலைப் போக்கும் மாயம் கொண்டது.
இபிசா தீவின் தெற்கில் 20 நிமிட படகு சவாரியில் இந்த தீவிற்குச் செல்லலாம். இபிசாவில் பார்ட்டி முடித்து விட்டு, சில்லாக ஃபார்மென்டெரா செல்லலாம். இங்கும் உலகம் சிறந்த கடற்கரை இருக்கிறது.
இபிசா தீவில் நீங்கள் முயற்சிக்க வேண்டிய சில உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.
கடலுக்கு அடியில் ஒரு குகைக்குள், குரூபெர்(grouper), ரேய்ஸ்(rays), மொரேய்ஸ்(morays) மற்றும் கொங்கர்(conger) போன்ற நீர் வாழ் உயிரினங்களைப் பார்க்கலாம். கடல் ஆமைகள் கூட இங்கு சிகிச்சைக்காக வைத்திருக்கிறார்கள்.
குதிரை ஏற்றம், ஜெட் ஸ்கீயிங் போன்ற இடங்களும் இங்கு பிரபலமானது. இந்த தீவில் சமந்தா கடற்கரையில் எடுத்த புகைப்படம் உடனடியாக 2 லட்சத்திற்குமேல் லைக்ஸ் பெற்றது. நீங்களும் உங்கள் விடுமுறையை இந்த அழகிய இயற்கை சூழலில் செலவிடலாமே!
பட ஆதாரம் - Instagram, Pinterest
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!