logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
இணையதள குற்றங்கள் மற்றும் சைபர் க்ரைம் குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இணையதள குற்றங்கள் மற்றும் சைபர் க்ரைம் குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்தியாவில் தகவல் தொழிநுட்பம் குறுகிய காலத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவிட்டது. இன்றைய கால கட்டத்தில் இணையத்தின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல் ‘சைபர் கிரைம்’ என்று சொல்லப்படும் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 

‘ஸ்பாம்’ எனப்படும் தேவையில்லாத மெயில்கள், இணையம் மூலம் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், ஆபாச படங்களை வெளியிடுவது, இணையதளங்களை முடக்குவது, ஒரு நாட்டின் ஆராய்ச்சி முடிவுகளை திருடுவது.

pixabay

ADVERTISEMENT

மேலும் ஆன்-லைன் லாட்டரி, மொபைல் குறுஞ்செய்தி மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறித்தல், போலி ஏடிஎம், கிரெடிட் கார்டு மூலம் மோசடி செய்வது, மிரட்டல் விடுப்பது ஆகியவை இணையதள குற்றங்களில் அடங்கும். தற்போது சைபர் க்ரைம் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !

எனினும் இதனால் தொடர்ந்து பல்வேறு பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களை பொறுத்தவரை தவிர்க்க முடியாத ஊடமாக மாறிவிட்டது. அதனால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அதே சமயம் அதை கவனமாக கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது.

 

ADVERTISEMENT

pixabay

சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு தற்போது வரை கேள்விக்குறியாக உள்ள நிலையில் உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இங்கே காண்போம்.

பெண்கள் பாதுகாப்பு – ஆலோசனைகள்

  • பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிரக் கூடாது. வலைத்தளங்களில் உள்ள செட்டிங்கை பயன்படுத்தி, தேவையில்லாத நபர்கள் தங்கள் பக்கத்தை பார்க்க முடியாத வண்ணம் செய்ய வேண்டும்.
  • அறிமுகமில்லாத நட்பை சமூகவலைத்தளங்களில் தவிர்ப்பது மிகவும் நல்லது. இதனால் பிரச்சனைகள் ஏற்படாமல் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க முடியும்.

நடிகை ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை : உருகிய கணவர் போனி கபூர்!

ADVERTISEMENT
  • தங்களை தொந்தரவு செய்து மிரட்டும் நபர்களை தமிழ்நாடு காவல்துறை இணையதளம் மூலமும், இமெயில் மூலமும் புகார் அளிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட சமூக வளைத்தளங்களில் புகார் அளித்து அவர்களது கணக்குகளை முடக்கலாம். 

     

pixabay

  • உங்களுடைய பர்சனல் விஷயங்களை யாரிடமும்  பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • இணையத்தில் மிரட்டும் நபர்களிடம் தொடர்ந்து பேசுவது, சர்ச்சையில் சிக்குவதை தவிர்த்து விடுங்கள்.
  •  இணைய தளங்களில் கேட்கப்படும் சுய விபரங்களுக்கு பதில் அளிக்காதீர்கள். உங்களுக்கு தெரியாமலே உங்கள் சுய விபரங்கள் திருடப்படுவதால் கவனம் தேவை. 
  • உங்கள் மெயிலை யாராவது ஹேக் செய்துவிட்டால் உடனடியாக அதை ஈமெயில் சேவை நிறுவனத்தினரிடம் தெரியப்படுத்துங்கள். தேவையெனில் போலீஸிலும் புகார் அளிக்கலாம். ஆனால் இன்னொரு ஹேக்கரிடம் உதவி பெற வேண்டாம். அது மேற்கொண்டு சிக்கலை அதிகரிக்கவே செய்யும். 

pixabay

ADVERTISEMENT

சைபர் க்ரைம் – தெரிந்து கொள்ள வேண்டியவைகள்

  • சைபர் க்ரைம் (ciber crime) குற்றங்களை புலனாய்வு செய்ய தற்போது நவீன வசதிகள் வருகின்றன. எனவே பெண்கள் தயக்கமின்றி புகார் அளிக்க முன் வர வேண்டும். 
  • பாதிக்கப்பட்ட பெண்கள் 18 வயதிற்கு கீழ் இருந்தால் அவர்களின் பெயர் முகவரி, படம் ஆகியவை வெளியிடக்கூடாது என சட்டப் பாதுகாப்பு உள்ளது. 

கேரளாவில் களைகட்டும் ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் கொண்டாடும் விதம்!

  • 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பெயர்கள், படங்கள் வெளியிட அப்பெண்கள் விரும்பாத பட்சத்தில் சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி பாதுகாப்பு அளிக்கப்படும். 
  • சைபர் க்ரைம் தொடர்பான பிரச்னைகளை உடனுக்கு உடன் நிவர்த்தி செய்ய சென்டர் ஃபோர் சைபர் க்ரைம் விக்டிம் கவுன்சலிங்கிடம் உதவி பெறலாம். 

pixabay

  • பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களை படம் எடுத்தால் அந்த குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.  
  • பெண்கள் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் சட்டவிரோதமாக ரகசிய கேமரா பொருத்தியிருக்கிறதா என்பதை கண்டறிய ஆன்ட்ராய்டு மொபைல் ஆப் பயன்படுத்தலாம். 
  • பெண்கள் தைரியமாக சைபர் குற்றம் (ciber crime) சம்பந்தமாக புகார் இருந்தால் சைபர் கிரைம் (ciber crime) பிரிவில் புகார் தெரிவிக்கலாம்.  புகார் கொடுக்கும் பெண்களின் பெயர் வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தப்படும்.  
  • சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் பாதிக்கப்படும் பெண்கள் தங்களது எதிர்காலம் குறித்து கவலை கொள்ளாமல், புகார் தந்தால் சைபர் கிரைம் போலீசார் விரைந்து  நடவடிக்கை எடுப்பார்கள். 
  • பெண் ஒருவரை சட்ட விரோதமாக படம் பிடிப்பதால் ஐடி விதிகளின் படியும், ஐபிசி விதிகளின் படியும், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

ADVERTISEMENT

pixabay

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள் :

  • இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு (Password Theft)
  • அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் (Threatening emails)
  • இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) 
  • பாலியல் ரீதியிலான தொல்லைகள் (Sexual harassment)
  • இணையதள மிரட்டல்கள் (Cyber bullying)
  • குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் (Child Abuse)
  • கடன் அட்டை எண் திருட்டு (Credit card number theft)
  • வலைத்தள ஹேக்கிங் (Website hacking)

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்ய

1. Tmt.Sonal V.Misra, IPS,

SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

ADVERTISEMENT

2. Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

புகார்களை sms அனுப்ப : 95000 99100.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

05 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT