ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? திருமண பொருத்தம் உள்ள ராசிகள் எது!

ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? திருமண பொருத்தம் உள்ள ராசிகள் எது!

ஆயிரங்காலத்து பயிராக போற்றப்படும் திருமணம் செய்ய பெற்றோர்கள் ஜாதகம் பார்த்து தான் வீட்டின் மருமகன்/ மருமகளை தேர்வு செய்கின்றனர். தங்களுடைய மகள் அல்லது மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணும்போது அவர்களின் மனதில் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன. எந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம்? எந்த எந்த நட்சத்திரம் (zodiac signs) திருமணத்துக்கு உகந்தது அல்ல, எந்த நட்சத்திரம் தம் பிள்ளைக்குப் பொருந்தும்? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கை. 

மேலும் அனைவருக்கும் காலம் காலமாகத் தோன்றும் சந்தேகம், ஒரே ராசி அல்லது நட்சத்திரம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா? என்பது தான். மணமக்கள் இருவரும் ஒரே நட்சத்திரம் அல்லது இருவரும் ஒரே ராசி என்றால் இருவருக்கும் இடையே எண்ண ஒற்றுமை மற்றும் புரிதல் உணர்வு நன்றாக இருக்கும் பட்சத்தில் ஏன் ஒரே நட்சத்திரத்தில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறுகின்றனர் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

twitter

நாம் ஒருவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றால் முதலில் நாம் வலிமையாக இருக்க வேண்டும் என்பது முதன்மையாகும் . ஒரே ராசியில் , ஒரே நட்சத்திர பாதத்தில் (zodiac signs) பிறந்தவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் எனில் அவர்கள் இருவருக்கும் நடைபெறும் திசாபுத்தியானது ஒரே மாதிரியாக செயல்படும். அதாவது வரவு என்றாலும் இரு மடங்காகவும் , செலவு என்றாலும் இரு மடங்காகவும் உண்டாகும் .

மேலும்  ஏழரை சனியானது ஒரே வீட்டில் இருவருக்கும் ஒரே நேரத்தில் தொடங்கி ஒரே நேரத்தில் முடிவடையும் . அவ்வேளைகளில் அத்தம்பதிகளுக்கு ஏற்படும் துன்பம் என்றாலும் இரு மடங்காகவும் , இன்பம் என்றாலும் இரு மடங்காகவும் உண்டாகும். இதனால் குடும்பத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

உங்கள் ராசியின்படி இது உங்கள் திறனாக இருக்கலாம்!!

திருமண பந்தத்தில் இரண்டு ராசிக்காரர்கள் இணையும் போது அவர்கள் வாழ்க்கையில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றது. ஒரே நட்சத்திரக்காரர்கள் (zodiac signs) திருமணம் செய்து கொள்ள ஜோதிடர்கள் பரிந்துரைப்பதில்லை. எந்த ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொண்டால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

pixabay

மேஷம்

செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்காரர்கள். இவர்கள் தான் செய்வதே சரி என்று நினைப்பவர்கள். மேஷம் ராசியில் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் தொடர் பிரச்னை, சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அஸ்வினி நட்சத்திர ஆணும் பரணி நட்சத்திர பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் பாதிப்புகள் குறைவுதான். 

ரிஷபம்

சுக்ரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். இந்த ராசியில் உள்ள ஆணும், பெண்ணும் இணையும் போது இவர்களின் எண்ணங்கள், கருத்துகள் ஒரே மாதிரியானதாக இருக்கும். விடாமுயற்சியும், லட்சியத்தையும் நோக்கிப் பயணிப்பவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். ரிஷபம் ராசி உள்ளவர்களுக்கு, விருச்சக ராசிகாரர்களுடன் திருமணம் நடந்தால் காதல் கெமிஸ்ட்ரி களைகட்டும்.

மிதுனம்

புதனை ராசி நாதனாக கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். தன்மானத்தோடு வாழ வேண்டும் என்று நினைக்கும் இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் உறவில் ஈர்ப்பு இருக்காது. மிதுனம் ராசிக்காரர்கள் துலாம், மேஷம், கும்பம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

சத்குருவின் நதிகளை மீட்கும் திட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு !மேலும் சில பிரபலங்கள் இணைந்தனர்

கடகம்

சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வுகள் அதிகமாகவே இருக்கும். கடக ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்கள் உணர்ச்சிப்பூர்வமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். விருச்சிகம், ரிஷபம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும் பொருத்தமானவர்கள் இவர்களுக்கு பொருத்தமானவர்கள்.

pixabay

சிம்மம்

சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்களின் மத்தியில் முதலில் நிற்பது முன்கோபமாக தான் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் மதிப்பு அளிப்பது, பொறுமையுடன் வாழ்க்கை நடத்தினால் பிரச்னைகள் குறையும். துலாம், மேஷம், தனுசு, மிதுனம் ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்கார்களுக்கு பொருத்தமானவர்கள்.

கன்னி

புதனை ஆட்சி நாயகனாகக் கொண்டவர்கள் கன்னி ராசிக்காரர்கள். இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை அற்றவர்களாக திகழ்வார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசியை சேர்ந்தவர்கள் பொருத்தமாக இருப்பார்கள். 

உங்கள் பெஸ்டியின் திருமணத்தில் முயற்சிக்க 17 அழகான சிகை அலங்காரங்கள்!!

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள். இந்த ராசியைக் கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்கள் தங்களுக்குள் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டால் இவர்களின் உறவில் பிரிவு உண்டாகாது. மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள்.

விருச்சிகம்

வீரமும், வேகமும் கொண்ட செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள் விருச்சிக ராசிக்கார்கள். இந்த ராசியை சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்கள் இருவர் மத்தியில் ஈர்ப்பும், கவர்ச்சியும் அதிகமாக இருக்கும். ஆனால், இவர்களின் வாழ்வில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடகம், கன்னி, மகரம், மீனம் ராசிக்காரர்களுடன் இவர்கள் மண வாழ்க்கையில் இணைந்தால் நலம்.

pixabay

தனுசு

குருவை ஆட்சி நாதனாகக் கொண்ட தனுசு ராசியில் பிறந்த ஆண் பெண் திருமண பந்தத்தில் இணையும் போது ஒற்றுமையாக காணப்படுவார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விருப்புவார்கள். ஆரோக்கியமான விவாதம், உற்சாகத்துடன் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள். மேஷம், துலாம், சிம்மம், கும்பம் ராசிக்காரர்களுடன் திருமண பொருத்தம் சரியாக இருக்கும்.

மகரம்

சனியை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசியில் பிறந்த ஆண், பெண் திருமண பந்தத்தில் இணையும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படும். சுறுசுறுப்புடன் பணிகளை செய்து முடிக்கும் திறன் படைத்தவர்கள் மகர ராசிக்காரர்கள். காதல் உணர்வுகள் அதிகம் நிரம்பியவர்கள் இந்த ராசிக்காரர்கள். ரிஷபம், கன்னி, மகரம், மீனம் ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள்.

கும்பம்

சனியை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசியில் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்படும். அதிக அன்பானவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மேஷம், மிதுனம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள்.

மீனம்

குருவை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள் மீன ராசிக்காரர்கள்.  மீன ராசியைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் தனித்துவம் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள். எனினும் இவர்களுக்கு முன்கோபம் இருப்பதால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ரிஷபம், கடகம், விருச்சிகம், மகரம் ராசிக்காரர்களுடன் இவர்களுக்கு ஒத்துப்போகும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.