logo
ADVERTISEMENT
home / Bigg Boss
தர்ஷனுடனானஉறவை விமர்சனம் செய்ய உனக்கு உரிமையில்லை : வனிதாவை வெளுத்து வாங்கிய ஷெரின்!

தர்ஷனுடனானஉறவை விமர்சனம் செய்ய உனக்கு உரிமையில்லை : வனிதாவை வெளுத்து வாங்கிய ஷெரின்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே ஷெரின் (sherin) மற்றும் தர்ஷனை வனிதா டார்கெட் செய்து வருகிறார். தர்ஷனுக்காக, ஷெரின் டாஸ்கில் விட்டுக்கொடுப்பதாக வனிதா, சாக்ஷியிடம் கூறியிருந்தார். இதனை மறுத்த ஷெரின் இனிமேல் இதுகுறித்து பேசவேண்டாம் என கோவமாக கூறிவிட்டு சென்று விட்டார். நேற்றைய நிகழ்ச்சியில்  பட்டிமன்றம் டாஸ்க்கில் நடந்தது குறித்து கவின், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். 

மற்றொரு புறம் ஷெரின், தர்ஷன் இருவரும் தங்களது உறவு குறித்து பேசினர். அப்போது பேசிய ஷெரின் நீ என் நண்பன், உன்னை ஒரு நல்ல நண்பனாக தான் நான் பார்க்கிறேன். உனக்கு ஏதேனும் பிரச்னை நடந்தால் உனக்காக நான் பேசுவேன். எனக்கு உன்னிடம் நட்பை தாண்டி எதுவும் இல்லை. யாரிடம் நான் அதிக அன்பும், அக்கறையும் காட்டுகிறேனோ அவர்களுக்காக நான் எதையும் செய்வேன். வனிதா தொடர்ந்து உன்னையும், என்னையும் டார்கெட் செய்கிறார்.

twitter

ADVERTISEMENT

ஆனால் நமக்குள் எவ்வித ரிலேஷன்ஷிப்பும் இல்லை நல்ல நட்பை தவிர என்று தர்ஷனிடம் கூறினார். இதற்கு தர்ஷன், வனிதா நீ எப்போது பார்த்தாலும் என்னுடைய பின்னாடியே வருகிறாய் என்று கூறியதாக குறிப்பிட்டார். இப்படியே பேச்சு வருவதால் தான் நான் உன்னிடம் இருந்து விலகுகிறேன் என்றார். மேலும் கமல் சார் நண்பர்கள் என்றால் இரவில் ஏன் பேச வேண்டும் என கேள்வி எழுப்பினர். அப்போதில் இருந்து தான் நான் உன்னிடம் இரவில் பேசுவதை தவிர்த்தேன் என தர்ஷன் தெரிவித்தார்.  

அதன் பின்னர் வழக்கம் போல் பாடலாலும் நாள் தொடங்கியது. கேப்டன் வனிதா பாத்திரம் கழுவதற்கு லாஸ்லியாவை அழைத்ததாக சாண்டியிடம் கூறி விட்டார். பின்னர் லாஸ்லியா சமையறைக்கு சென்றார். அங்கு ஷெரின் மற்றும் வனிதா இடையே வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. ஷெரினுக்கு கொடுத்த சமையல் வேலையை அவர் சரியாக செய்யவில்லை என வனிதா கூறினார். அதற்கு பதிலளித்த ஷெரின் டாஸ்க் இருந்ததால் என்னால் பண்ண முடியவில்லை என்றார். 

twitter

ADVERTISEMENT

இதற்கு டாஸ்க் இருந்தாலும், சரி, இல்லாவிட்டாலும் சரி வேலையை சரியாக பண்ண வேண்டும் என கூறிய வனிதா, காலையில் சமைத்து வைத்து விட்டால் டாஸ்க் செய்யும் போது எவ்வித பிரச்னையும் ஏற்படாது என்றார். இன்று நான் சமையல் செய்கிறேன் என ஷெரின் கூற, வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதில் கோபமடைந்த ஷெரின், எப்போது பார்த்தாலும் நீ என்னை டார்க்கெட் பண்ணிக்கிட்டே இருக்க, நீ என்னிடம் என்ன எதிர்பார்கிறாய் என கேள்வி எழுப்பி வெளியே சென்று விட்டார். 

பின்னர் அவரை சாக்ஷி சமாதானப்படுத்தினார். வனிதா செய்யும் பிரச்சனைகள் குறித்து சாக்ஷியிடம், ஷெரின் (sherin)  கூறி கொண்டிருந்தார். இதனிடையே டாஸ்க் இருந்ததால் தான் ஷெரினால் சமைக்க முடியவில்லை என சேரன், வனிதாவிடம் கூறினார். அதற்கு டாஸ்க் இருந்தால் முன்கூட்டியே சமைப்பது குறித்து திட்டமிட வேண்டும் என வனிதா கூறினார். அப்போது அவர்களுடன் மோகன் வைத்யா இருந்தார். பின்னர் சாக்ஷி மற்ற போட்டியாளர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்குமாறு பிக் பாஸ் கூறினார். 

வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்து சாக்ஷி பேசினார். இதனை தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக அமர்ந்து பேசினர். அப்போது பேசிய வனிதா, டாஸ்கில் கவனம் செலுத்த வேண்டும் என ஷெரினிடம் கூறி மீண்டும் வம்புக்கு இழுத்தார். தர்ஷன் கையில் காயம் ஏற்பட்ட போது மட்டுமே நான் சென்று அவனுக்கு முதலுதவி அளித்தேன். மொத்த டாஸ்க்கில் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே நான் அதெற்கென எடுத்து கொண்டேன். அதனால் என் கவனம் மாறுவதாக நீ கூறுவதை நான் ஏற்கமுடியாது என ஷெரின் கூறினார். 

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்ட தர்ஷன், ஷெரின் தலையணை டாஸ்கில் நன்றாக பணி செய்தார். அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் கவனம் செலுத்துங்கள் என அடிக்கடி கூறினீர்கள் என வனிதாவிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் வனிதா – ஷெரின் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவமடைந்த சேரன், டாஸ்க் செய்ய தான் இங்கே வந்தோம் அதனை சரியாக செய்ய வேண்டும் யாருக்கு யாரும் அட்வைஸ் செய்ய வேண்டாம். அவரவர்கள் அவர்களது பணிகளை செய்யட்டும் என கூறினார்.

twitter

சேரன் கருத்தை சாண்டி உள்ளிட்டோர் ஆதரித்தனர். ஆனால் அப்போதும் வனிதா சமாதானமாகவில்லை. நீ குளிக்க தவறான நேரத்தில் செல்கிறாய் என ஷெரினிடம் கூறினார். மேலும் நீ சந்தோசமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி வேலை செய்ய வில்லை என வனிதா கூற, ஷெரின் கோவமடைந்தார். இந்த வீட்டில் நீ மட்டுமே என்னை வேலை செய்யவில்லை என கூறுகிறார் மற்ற யாரும் கூறவில்லை என கோவமாக பேசினார். 

ADVERTISEMENT

நேற்று இரவு நான் சமையல் செய்யவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் இந்த வீட்டில் நான் வேலையே செய்யவில்லை என கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவரை சாண்டி மற்றும் அபிராமி சமாதானம் செய்தனர். எல்லாரையும் கூப்பிட்டு வைத்து இதனை பேச வேண்டிய அவசியமில்லை என சாண்டி கூறி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாக்ஷி, ஷெரினை (sherin) தனியாக அழைத்து சென்றார். 

twitter

அப்போது பேசிய ஷெரின், தர்ஷன் பக்கத்தில் இருப்பதால் நான் எந்த வேலையும் செய்யவில்லை என்று எப்படி கூற முடியும். ஏன் எப்போது பார்த்தாலும் தர்ஷன் பற்றியே பேசிக்கிட்டே இருக்காங்க. என்னுடைய உறவு யார் கூட வேண்டுமானாலும் இருக்கும். ஆனால் அது குறித்து விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என சாக்ஷியிடம் கூறினார். அப்போது அவர்களுடன் இருந்த சேரன், வனிதா உங்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார், ஆனால் அவர் தர்ஷன் குறித்து பேசுவது தவறு என கூறினார். 

ADVERTISEMENT

அப்போது அங்கு வந்த வனிதா, வெளியில் ஒரு பெண் தர்ஷனுக்காக காத்துக்கொண்டிருக்கும் போது நீ அவனுடன் தொடர்பு வைத்திருப்பது தவறு, காதலிப்பதும் தவறு, எனக்கு இது பிடிக்கவில்லை என்றார். தர்ஷன் உடனான உறவை தவறாக பேசியதால் கோபமடைந்த ஷெரின், உனக்கெல்லாம் அறிவு இருக்கிறதா? ஏன் இப்படியெல்லாம் பேசிக்கிட்டே இருக்க, அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஏன் எப்போது பார்த்தாலும் அதைப் பற்றியே பேசிக்கொண்டே இருக்க என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். 

twitter

அப்போதும் விடாமல் பேசிய வனிதா அவன் உன்னை விட்டு ஒதுக்கி செல்லும் போது, நீ ஏன் அவன் பின்னால் செல்கின்றாய் என கேட்டார். அப்போது அருகில் இருந்த தர்ஷனை பார்த்து, ஏ நான் என்னடா பண்ணிருக்கேன் உன்னை என கேட்டார். அதற்கு தர்ஷன் ஏன், அப்படி பேசுறீங்க? எங்களுக்குள் என்ன தொடர்பும் இல்லை என்றார். அதற்கு இதில் நீ தலையிடாதே என வனிதா கூறினார். பின்னர் தர்ஷனை கூப்பிட்டு வனிதா பேசினார். அப்போது பேசிய தர்ஷன் எங்கள் இருவருக்குள் வெறும் நட்பு மட்டுமே உள்ளது, இருவரும் அந்த எல்லையை மீறியதில்லை. நீங்கள் அவரை தவறாக பேசியது எனக்கே கஷ்டமாக உள்ளது அவளுக்கு எப்படி இருக்கும் என வினவினார். 

ADVERTISEMENT

மற்றொரு புறம் ஷெரினிடம், சாக்ஷி பேசி கொண்டிருந்தார் அப்போது வனிதா எப்படி என் உறவு குறித்து தவறாக பேசலாம் என கூறி அழுதார் எனக்கும் அவனுக்கும் இடையில் எதுவும் இல்லை வனிதா கூறுவதில் உண்மை இல்லை என ஷெரின் கதறி அழுதார் பின்னர் வனிதா, தர்ஷன் பேசி கொண்டிருந்த இடத்திற்கு வந்து, தர்ஷனிடம் வந்து இனிமேல் உன்னுடைய ஃப்ரண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை. இனிமேல் உன் கூட நேரம் செலவிடவும், பேசவும் வேண்டாம் என்றார். உன்னிடம் பேசினால் தொடர்பு இருக்கிறது என்று எல்லோருமே பேசுறாங்க. வெளியில் இருக்கும் உன்னிடைய காதலியை கஷ்டப்படுத்துவதாகவும் பேசுறாங்க. 

twitter

இதெல்லாம் போதும் என கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து ஷெரின் மற்றும் சாக்ஷி தனியாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது வனிதா என எமோஷன்களை கொச்சைப்படுத்திவிட்டதாக கூறி அழுதார் ஷெரின். அப்போது பேசிய சாக்ஷி, “நாய்கள் ரோட்ல குரைக்கும்” அதற்கு நீ கவலை படாதே என கூறினார். ரோட்ல குரைக்கும் நாய்களை நினைத்து நான் கவலை படவில்லை, ஆனால் என்னுடைய நாயே என்னை கடிக்கிறது என வனிதாவை குறிப்பிட்டு பேசினார். அதற்கு நான் வெளியே இருக்கும் மக்களை பத்தி பேசுகிறேன் என சாக்ஷி கூறியுள்ளார். இந்நிலையில் சாக்ஷி மக்களை நாய்கள் என கூறியது தற்போது மிகப்பெரிய விவாதமாக்கியுள்ளது.

ADVERTISEMENT

இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், சாக்ஷி, அபி மற்றும் மோகன் நடுக்கவர்களாக இருந்து விருது கொடுக்கப்படுகிறது. அப்போது மோகன் வைத்யா லாஸ்லியாவிற்கு பச்சோந்தி என்ற விருதை வழங்குவதாக அறிவிக்கிறார். சாக்ஷி அந்த விருது கொடுக்க லாஸ்லியா அதை வாங்க மறுப்பு தெரிவிக்கிறார். மேலும் அந்த விருதை மேடையிலேயே தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார். அப்போது விருது பிடிக்கவில்லை என்றால் அதனை வாங்கி வெளியே தூக்கி எறியுங்கள் என மோகன் கூற, இதனால் கோபமடைந்த சாக்ஷி, இதென்ன மரியாதை இல்லாத செயல், நான் இனிமேல் விருது கொடுக்க மாட்டேன் என கூறிவிட்டு செல்கிறார்.

இரண்டாவது புரோமோவில் எங்களுக்கு கொடுத்த வேலையை தான் நாங்கள் செய்கின்றோம், விருதை வெளியே போடுங்கள் என லாஸ்லியாவை குறிப்பிட்டு என மோகன் வைத்யா பேசினார். அப்போது டீசெண்டாக பேசுங்கள் என சாக்ஷி கூற, நீங்கள் எனக்கு கற்று கொடுக்க வேண்டாம் என லாஸ்லியா கூறினார். அப்போது நான் உன்னிடம் பேசவில்லை கேமராவிடம் பேசுகிறேன் என சாக்ஷி கூறுகிறார். மேலும் பிரச்சனையை நீ தான் ஆரம்பிக்கிறாய் என சாக்ஷி கூறினார். அதற்கு நீ வா என நீங்கள் என்னை மரியாதையை இல்லாமல் பேசாதீர்கள் என லாஸ்லியா கோவமாக கூறுவது வெளியாகியுள்ளது.

மூன்றாவது புரோவோவில் சேரன் காய்கறிகள் நறுக்கி கொண்டிருக்கிறார். அப்போது வனிதா உங்கள் உதவிக்கு ஒரு ஆளை நியமித்திருந்தேன் அவர் இங்கு இல்லை, அதனை நீங்கள் கேட்டு கொள்ளுங்கள் என்று ஷேரினை குறிப்பிட்டு பேசுகிறார். அப்போது தர்ஷனுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த ஷெரின், இதனை கேட்டு சமையலறைக்கு வந்து சமையல் ஏற்கனவே ரெடியாகி விட்டது, இப்போது என்ன வேலை செய்ய வேண்டும் என கேட்கிறார். உன் வேலையை நீ செய்ய கற்றுக்கொள் என கூறிவிட்டு வனிதா செல்கிறார். பின்னர் எனக்கு வேலை பார்க்க வராது இது ஜெயில் இல்லை, நீ எங்கள் வார்டன் இல்லை, 24 மணிநேரமும் நீங்கள் சொல்வதை செய்ய வேண்டுமா? என ஷெரின் கோவமாக பேசுகிறார். இன்றும் ஷெரின் – வனிதா சண்டை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

05 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT