இந்த வாரத்திற்கான பிக் பாஸ் நாமினேஷன் தொடங்கியது : அதிகம் நாமினேட் செய்யப்பட்டவர் யார்?

இந்த வாரத்திற்கான பிக் பாஸ் நாமினேஷன் தொடங்கியது : அதிகம் நாமினேட் செய்யப்பட்டவர் யார்?

Big பாஸ் (biggboss) நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், டிக்கெட் டு பினாலே டாஸ்க் தொடங்கியுள்ளது. இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலி டாஸ்க் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. அவன் விளையாட்டை சரியாக விளையாட ஆரம்பித்துவிட்டார் என சாண்டி கூறுகிறார்.

இதில் வெற்றி பெறும் நபர் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வார் என பிக் பாஸ் அறிவிக்கிறார். அப்போது போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடுகின்றனர். பின்னர் 80 நாட்கள் எனக்கு புரியாதது இப்பொது எப்படி புரியும் என கவின் கூறுகிறார். இதற்கு நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என சேரன் கூறுகிறார். இதனால் கவின் இந்த வாய்ப்பை இழந்துவிட்டார் என தோன்றுகிறது.

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தலைவராக இருக்கும் நபர் நாமினேஷனில் இடம்பெற மாட்டார். எனவே மீதமுள்ள ஆறு பேரில் யார் நாமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றாவது புரோமோவில், சாண்டி, சேரன் மற்றும் முகென் உள்ளிட்டோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். பின்னர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்குகிறது. சாண்டி மற்றும் கவினை சேரன் நாமினேட் செய்கிறார். இதனை தொடர்ந்து நாமினேஷன் குறித்து முகெனிடம், சேரன் பேசி கொண்டிருக்கிறார். லாஸ்லியா, ஷெரினால் எவ்வித பிரச்னையும் இல்லை என்பதால் சாண்டி மற்றும் கவினை நாமினேட் செய்தேன் என கூறுகிறார். பின்னர் சாண்டியிடம் எப்போதும் போல பேசுவது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெறப்போவது யார் என்பது இன்று நிகழ்ச்சியில் தெரியவரும்.

மூன்றாவது புரோமோவில் சாண்டி, சேரன் மற்றும் ஷெரினை நாமினேட் செய்கிறார். இருவரும் கடினமான போட்டியார்கள் என்பதால் அவர்களை நாமினேட் செய்வதாக சாண்டி விளக்கம் அளிக்கிறார். இதன் பின்னர் நாம் ஒரு கோணத்தில் யோசித்தால், மற்றவர்கள் வேறு கோணத்தில் யோசிப்பார்கள் என தர்ஷனிடம் கூறுகிறார். மேலும் நான் ஒரு கேம் விளையாடுகிறேன். உனக்கு தெரியும் நான் எப்படி விளையாடுவேன் என்றும், எனக்கு கண்டிப்பாக தெரியும் இந்த முறை சேரன் சார் வெளியே செல்ல மாட்டார் என்று, ஏனெனில் அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது என சாண்டி கூறுகிறார்.

பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்கில் முகென் அம்மா, சகோதரி வருகை: மகிழ்ச்சியில் திளைத்த முகென்!

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற பிரீஸ் டாஸ்க்கில் போட்டியாளர்களின் குடும்பத்தார் ஒவ்வொருத்தராக வந்து சென்றனர். இதனால் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும் ஒவ்வொரு விதமாக நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த சிலர் வராதது போட்டியாளர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது. அது தொடர்பாக நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன், வேறு யாரை சந்திக்க ஆசைப்பட்டீர்கள் என போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். 

twitter

அப்போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது எதிர்பார்ப்பைச் சொன்னார்கள். தர்ஷன் அவரது அப்பா வருவார் என எதிர்பார்க்கப்பட்டதாக கூறினார். அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையும் தர்ஷனின் பிறந்தநாள் வாழ்த்தை அவரது அப்பா மற்றும் அம்மா இருவரும் கூறும் வீடியோ போட்டுக்காட்டப்பட்டது. வனிதா தன் மகனை எதிர்பார்த்ததாகக் கூறி அழுதார். 

அப்போது கமல், வனிதா அவரது சண்டைக்கோழி குணத்தை எல்லாம் தாண்டி கடந்த வாரம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டார் என பாராட்டினார். கடந்த வார நிகச்சியில் அவரது தாய்மையையும், ஏக்கத்தையும் வெளிவந்ததது என கூறி அவரை அன்னை வனிதா என்றே அழைத்தார். இதேபோல் சாண்டி பேசுகையில் மச்சினிச்சி வந்திருந்தா நல்லாயிருக்கும் சார் என சிரித்துக் கொண்டே கூறினார். 

இதனை கேட்ட அவரது போட்டியாளர்கள் அவரை கலாய்க்க , அட என் மச்சினிச்சி நன்றாக டான்ஸ் ஆடிவார், அதனால் அவர் வந்தால் அவருடன் டான்ஸ் ஆடலாம் என எதிர்பார்த்தேன் என கூறினார். சாண்டி விளையாட்டுக்கு தான் கூறுகிறார் என நினைத்தால் நிஜமாகவே நேற்று அவரது மச்சினிச்சியையும் மேடையேற்றி விட்டார் பிக் பாஸ். கூடவே சாண்டியின்  மாமியாரும் இருந்தார். சாண்டி குறித்த கமல் முன்னிலையில் பேசிய அவரது மாமியார், ‘இதுவரை சாண்டியை மாப்பிள்ளை என்றே அழைத்ததில்லை. 

twitter

அவரும் தனக்கு ஒரு மகன் தான்' என நெகிழ்ச்சியாகக் கூறினார். கூடவே எங்களுக்கு மகனாக, நல்ல கணவராக, நல்ல அப்பாவாகவும் சாண்டி இருப்பதாக கூற, இதனை அகம் டிவி வழியே பார்த்த சாண்டி கண்ணீர் விட்டு அழுதார். இறுதியில்  ‘ஜெயிச்சுட்டு வாங்க மாப்பிள்ள' என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து எலிமினேஷன் ப்ரோசஸ் தொடங்கியது. 

சாண்டி, ஷெரின், தர்ஷன், கவின், வனிதா ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். அப்போது இந்த வாரம் காப்பாற்றப்படுவோர் பெயர் சற்று வித்தியாசமாக அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல பெயரை கூறாமல் ப்ரீஸ் டாஸ்கில் குடும்பத்தினர் வரும் போது என்ன பாடல் ஒலிக்கப்பட்டதோ அந்த பாடல் தற்போது ஒலிக்கப்படும், அந்த பாடலுக்குரியவர் காப்பாற்றப்பட்டுவார் என கூறப்பட்டது.

அதன்படி முதலாக கவின் காப்பாற்றப்பட்டார். அப்போது பேசிய கவின் வெளியில் இருக்கும் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக நான் பொறுப்புடன் விளையாடுவேன் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து தர்ஷன், சாண்டி காப்பாற்றப்பட்டனர். இறுதியில் ஷெரின் மற்றும் வனிதா இருந்த நிலையில் வனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இதனையடுத்து ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார் வனிதா. 

அனைவர் முன்னிலையில் கவினை பளார் விட்ட நபர் யார்? குடும்பத்தின் நிலை என்ன?

அப்போது சேரன் மிகவும் வருத்தப்பட்டார். அதற்கு வனிதா நீங்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததே மகிழ்ச்சி. அனைவரும் நன்றாக விளையாடுங்கள் என்று கூறி விட்டு சென்றார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்த வனிதா, ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு ஓனர் என்பது போல அதிகாரம் செய்தார். பின்னால் பேசுவது, கொளுத்தி போடுவது, சண்டை மூட்டி விடுவது செய்து வந்தார். இதனால் கடுப்பான மக்கள், சமூக வலைதளங்களில் வனிதாவை திட்டி தீர்த்தனர். 

twitter

இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற எவிக்ஷனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வனிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் வனிதா போன பிறகு நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்துவிட்டது. சண்டை, சச்சரவு ஏதும் இல்லாமல் பிக்பாஸ் வீடு அமைதியாக இருந்தது. இதன் காரணமாக டிஆர்பி குறைந்துவிட்டது நித்தசமான உண்மை. 

இதனை உணர்ந்த பிக் பாஸ், ஹோட்டல் டாஸ்க்ககின் மூலம் அடுத்த சில வாரங்களிலேயே வனிதாவை விருந்தாளியாக அழைத்து வந்தார். பின்னர் வனிதாவை வைல்டு கார்டு என்ட்ரி என கூறினார். பிக்பாஸ் (biggboss) எதிர்பார்த்தப்படியே வனிதா மீண்டும் பிக்பாஸின் டிஆர்பியை எகிற வைத்தார். பிக்பாஸ் வீட்டில் அவர் போட்ட தூபத்தால் அடிதடி, தற்கொலை முயற்சி என களைகட்டியது. ஷெரின் - தர்ஷன் இடையே பிரச்னையை உண்டாக்க முயன்றார்.

இதனால் நிகழ்ச்சில் சற்று காரசாரமாகவே சென்றது. இதனிடையே சேரன் வெளியிடப்பட்டு சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டார். சேரன் சீக்ரெட் ரூமில் இருந்ததை அறியாத வனிதா, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற எண்ணினார். இதற்காக கேப்டன் டாஸ்க்கையும் விட்டுக்கொடுத்து வான்ட்டடாக நாமினேஷனுக்கு சென்றார். கடந்த வாரம் நடந்த பல பிரச்சனைகளுக்கு வனிதாதான் காரணமாக இருந்தார் என்பதால் மொத்த ஹவுஸ்மேட்ஸும் அவரை நாமினேட் செய்தனர். 

twitter

இந்நிலையில் குறைந்த வாக்குகள் பெற்றதால் வனிதா வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் தான் வனிதா அமைதியாகவும் மற்றவர்களுக்கு நல்ல மாதிரியான அட்வைஸ்களையும் கொடுத்து தனக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காட்டினார். வனிதா போட்டியில் தோற்றாலும் மக்கள் மத்தியில் வனிதா ஒரு சிறந்த போட்டியாளர் என்ற பெயருடன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். 

இதுவே தனக்கு வெற்றி என்ற களிப்பில் வின்னர் மெடலை பிக் பாஸ் அனுமதியுடன் வனிதா கொண்டு சென்றுள்ளார். பிக் பாஸ்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எதிர்நோக்கி பயணிக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த வாரம் முதல் கடினமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது  வனிதா இல்லாத பிக் பாஸ் (biggboss) வீடு எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பாப்போம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம் , இந்தி , தமிழ் , தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !

செய்தி செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shop ல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.