விநாயகர் சதுர்த்தி அன்று எப்படி உங்கள் வீடுகளை பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யலாம்?

விநாயகர் சதுர்த்தி அன்று எப்படி உங்கள் வீடுகளை பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யலாம்?

பலருக்கும் விநாயகர் சதுர்த்தி (vinayakar) என்றாலே, தீபாவளி, பொங்கல் போன்று இதுவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக மாறி விடும். இன்னும் சிலருக்கு, தங்கள் வீட்டில் திருமணம் நடப்பது போலவே அலங்காரங்கள் செய்து, தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தி கொண்டாடுவார்கள். இந்த கொண்டாட்டங்கள், பெரியவர்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைகளையும் அதிகம் குதூகலப்படுத்தும்.

வழக்கம் போல் ஏதோ வீட்டை சுத்தம் செய்து விட்டு, ஒரு சர்க்கரை பொங்கல் மற்றும் கொழுக்கட்டை செய்து படையலில் வைத்து, விநாயகரை வணங்கி விட்டு, தொலைக்காட்சி முன் அமராமல், இந்த வருடம், சற்று வித்யாசமாக நீங்கள் ஒரு திருவிழா கோலம் கொண்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாட எண்ணினால், இந்த தொகுப்பும், குறிப்புகளும், உங்களுக்காக!

twitter

எப்படி உங்கள் வீட்டை பிரம்மாண்டமாக, குறைந்த செலவில், பாரம்பரிய முறைப்படி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடதிருக்கு அலங்காரம் செய்யலாம்? – குறிப்புகள்

வாசலில் கோலம்: முதலில் வாசலில் இருந்து தொடங்குவோம். நீங்கள் ஒரு தனி வீட்டில் வசிப்பவரோ அல்லது அடுக்கு மாடி குடி இருப்பில் வசிப்பவரோ, எதுவாக இருந்தாலும், உங்கள் வாசலில் முதலில் கோலம் போட்டு தொடங்கலாம். அதி காலையில், வாசலில் வண்ணக் கோலங்கள், அரிசி மாவு கோலம் மற்றும் டிசைனர் கோலம் என்று போட்டு அசத்தலாம். இன்று கோலங்களில், பூக்கள், விளக்கு, மற்றும் அலங்காரப் பொருட்களை வைத்தும் அழகு படுத்துகின்றனர். அப்படி உங்கள் கற்பனை வளத்தை வெளிபடுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.  

வாசலில் வாழை மரம், பூ மாலை மற்றும் தோரணங்கள்: உங்கள் வீட்டில் திருமணம் அல்லது சுப காரியம் நடந்தால், முதலில் நீங்கள் செய்வது வீட்டின் தலை வாசலில் வாழை மரம் கட்டுவது. இந்த வகையில், நிச்சயம் சந்தையில், வாழை மரம் மற்றும் தோரணங்களும், மா இலைகளும் கிடைக்கும். அதனை வாங்கி வாங்கி வந்து, வாசலின் இரு பக்கங்களிலும் வலை மரத்தை கட்டி விட்டு, மா இலைகளால் அழகான பூ தொடுப்பது போல தொடுத்து வாசலில் தொங்க விட்டு, தோரணங்களையும் இரு பக்கங்களில் கட்ட வேண்டும். இது ஒரு அற்புத அழகை உங்கள் வீட்டிற்கு கொண்டு வரும். நீங்கள் விரும்பினால், பூ மாலை தோரணமும் போடலாம். இது இன்னும் அழகை அதிகப்படுத்தும்   

twitter

வீட்டினுள் சுவறுகளில் பூக்களால் அலங்காரம்: உங்களிடம் அதிக பூக்கள் மற்றும்  அலங்காரப் பொருட்கள் இருந்தால், வீட்டினுள் இருக்கும், குறிப்பாக ஹால் பகுதியில் மற்றும் பூஜை அறையில், அல்லது பூஜை செய்யப் போகும் பகுதியில், சுற்றி இருக்கும் சுவற்றில் இதனை ஒட்டி அலங்காரம் செய்யலாம். ஒரு அழகான தோற்றத்தையும், ரம்மியமான உணர்வையும் கொடுக்கும்.

வீட்டின் ஹாலில் அலகாரம்: உங்கள் வீட்டின் ஹால் பெரிதாக இருந்தால், நடுவில் பூக்கள் மற்றும் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யலாம். உண்மையில் உங்களுக்கு குதூகலத்தை இது கொடுக்கும்.   

பூஜை அறை அலங்காரம்: பூஜை அறையை அலங்காரம் செய்வது முக்கியம். பூஜை அறை அல்லது பூஜை செய்ய நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில், கோலம் போட்டு, பூக்களால் அலங்காரம் செய்யலாம். தோரணங்களையும் கட்டி தொங்க விடலாம்.  

twitter

விநாயகர் அலங்காரம்: உங்கள் வீட்டு விநாயகரை அலங்காரம் (vinayakar) செய்வது ஒரு முழுமை பெற்ற உணர்வைத் தரும். உங்கள விநாயகரை, பூக்கள், சிறிய பலன்கள், அல்லது அலங்காரப் பொருட்கள் என்று, உங்களுக்கு எது கிடைகின்றது அதனைக் கொண்டு, நீங்கள் விரும்பியப் படி அலங்காரம் செய்யலாம்.  

பலகாரங்களின் தொகுப்பு: பலகாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்: உங்களால் முடிந்த புதுமையான பலகாரங்களை செய்து விநாயகரையும், உங்கள் குடும்பத்தினர்களையும், குறிப்பாக குழந்தைகளை அசத்துங்கள். இது நல்ல உற்சாகத்தை இந்த திருநாள் அன்றுத்  தரும்.

பழங்களின் அணிவகுப்பு: விநாயகர் சதூர்த்தி (vinayakar) என்று, பொறி கடலை, மற்றும் பேரீச்சம் பழம் வைப்பது வழக்கம். இதனோடு, தேங்காய் மற்றும் வாழைப்பழங்களும் வைப்பார்கள். ஆனால், இதனோடு சேர்ந்து, உங்களால் முடிந்த பிற வகை பழங்களையும் தட்டு வரிசைகள் வைத்து அந்த பூஜை அறையை முழுமைப்படுத்தலாம்.  

twitter

இனிப்பு வரிசைகள்: பழங்கள் மற்றும் பலகாரங்கள் மட்டுமல்லாது, இனிப்பு வகைகளையும் நீங்கள் தட்டு வரிசைகளில் விநாயகருக்கு பூஜை செய்ய வைக்கலாம். இப்படி அலங்காரங்களோடு சேர்ந்து, படையல் வரிசைகளும் வரும் போது, உங்கள் வீடு ஒரு திருமண கோலம் கொண்ட வீடாகவே மாறி விடும்.

உங்கள் வீட்டை நீங்கள் அலங்காரம் செய்யும் போது விநாயகருக்கு உகந்ததாக இருக்கும் அருகம் புற்களையும் பயன்படுத்தலாம். இது மேலும் வீட்டின் அழகையும், பூஜை அறையின் அழகையும் அதிகப்படுத்த உதவும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன