உங்களுக்கான தனித்துவமிக்க வாசனை திரவியத்தை எப்படி தேர்வு செய்வது?

உங்களுக்கான தனித்துவமிக்க வாசனை திரவியத்தை எப்படி தேர்வு செய்வது?

உடையை அழகாகவும், சுத்தமாகவும் அணிந்துகொள்ள விரும்புகிறோம். அது போல உங்களுக்கு ஏற்ற பர்ஃயூமைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது, உங்கள் உடைக்கு இன்னும் அழகூட்டும். மேலும், உங்களைத் தனித்துக் காட்டும்.
முதலில் என்னனென்ன பர்ஃயூம் (fragrance)இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அதில் நமக்குப் பொருந்தும் பர்ஃயூமை எப்படி தேர்வு செய்வது என்று பார்க்கலாம்.

 

வாசனை திரவிய அமைப்பு மற்றும் அதன் வகைகள்

நறுமணத்தின் தன்மையை வைத்து ஒரு பிரமிட் வடிவில் வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

 1. பிரமிட் மேல் நிலை - சிட்ரஸ் - சிட்ரஸ் பழங்களின் மணம் கொண்டது. எலுமிச்சை, மாண்டரின்(சீன ஆரஞ்சு), பெர்காமோட்(எலுமிச்சை, கிச்சிலி இன வகை) போன்ற நறுமணங்கள்.
 2. பிரமிட் இரண்டாம் நிலை - அரோமேட்டிக் - லாவெண்டர், லெமன் க்ராஸ், அனீஸ் போன்ற நறுமணங்கள்.
 3. மூன்றாம் நிலை - ப்ளோரல்(பூ) - ரோஸ், ஜாஸ்மின், லீலாக் போன்ற நறுமணங்கள்.
 4. நான்காம் நிலை - க்ரீன்(பச்சை) - புல், கல், இலை போன்ற நறுமணங்கள்.
 5. ஐந்தாம் நிலை - ப்ரூட்டி(பழங்கள்) - ரேஸ்ப்பெர்ரி, பியர், பீச் போன்ற நறுமணங்கள்.
 6. ஆறாம் நிலை - ஸ்பைஸஸ்(மசாலா) - கிராம்பு, ஜாதிக்காய், பட்டை போன்ற நறுமணங்கள்.
 7. ஏழாம் நிலை - வூடெட்(மரம்) - சிடார்(கேதுரு), பட்சவுளி(குளவி), மோஸ்(பாசி) போன்ற நறுமணங்கள்.
 8. எட்டாம் நிலை - பால்சாமிக் - வெண்ணிலா, ஹெலியோட்ரோப், டோங்கா பீன் போன்ற நறுமணங்கள்.
Pixabay

பிரமிட்டில் முதல் இரண்டு நிலையும் தலைப் பகுதியாகவும், 3-6 நிலைகள் இதயப்பகுதியாகவும், கடைசி இரண்டும் அடித்தள பகுதியாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் தலைப்பகுதி நறுமணங்களை தேர்வு செய்தால், அதன் மனம் 2 மணி நேரம் வரை இருக்கும். இதயப்படுத்தியில் உள்ள நறுமணங்களைத் தேர்ந்தெடுத்தால் 3 முதல் 5 மணி நேரம் வரை இருக்கும். அடித்தளம் 8 மணி நேரம் வரை மனம் வீசிக்கொண்டே இருக்கும்.

அதுமட்டுமின்றி, பர்ஃயூம் எண்ணெய் எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது என்பதை வைத்து, எது தரமான பொருள் என்றும் கண்டறியலாம். 

 • 30 சதவிகிதம் பர்ஃயூம் எண்ணெய் இருந்தால் 6 முதல் 8 மணி நேரம்வரை வாசனை இருக்கும். 
 • 5 சதவிகிதம் மட்டுமே பர்ஃயூம் எண்ணெய் இருந்தால் 2 முதல் 3 மணி நேரம்தான் அதன் வாசனை இருக்கும். 

இப்படி வாசனை திரவியத்தின் எண்ணெயின் சதவிகிதத்தைக் கொண்டும், பாட்டில் அளவைக்கொண்டும் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உங்களுக்கான வாசனை திரவியம் / நறுமணத்தை எப்படி தேர்வு செய்வது ?

Pixabay

 1. பர்ஃயூமின் மனம் (perfume/scent)  ஒவ்வொருவருடைய உடல் தன்மைக்கேற்ப மாறுபடும். ஒவ்வொருவருக்கும், அவர்களின் ஹார்மோன், ஃபெரோமோன் பொருத்து பர்ஃயூமின் மனம் ஓங்கியோ அல்லது மங்கியோ இருக்கும். அதனால் அவரவர் மணிக்கட்டில் நீங்கள் வாங்க நினைக்கும் பர்ஃயூமை ஸ்ப்ரே செய்து, கொஞ்ச நேரத்திற்கு பின் முகர்ந்து பாருங்கள். பிறகு முடிவெடுங்கள்.
 2. உங்களால் கடைக்குச் சென்று தேர்வு செய்ய முடியவில்லை என்றால் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். தள்ளுபடி உள்ள பர்ஃயூமை பார்த்து மயங்கி விடாதீர்கள். ஆன்லைனில் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் தேர்ந்தெடுப்பதற்குமுன் அவர்கள் சில கேள்வி பதில்கள் வைத்திருப்பார்கள். அதை சரியாக செய்து, ஒவ்வொற்றிற்கும் தகுந்த விளக்கம் இருக்கும், அவற்றையும் சரியாக படிக்க வேண்டும். பிறகு உங்களுக்கான ஒன்றைத் தேர்வு செய்யுங்கள். 
 3. மேலும், நீங்கள் என்ன மாதிரியான உடை அணிகிறீர்கள், எந்த இடத்திற்கு செல்கிறீர்கள், எங்கு அதிகமாக இருக்கிறீர்கள் போன்றவற்றை மனதில் கொண்டு உங்களுக்கான பர்ஃயூமை தேர்ந்தெடுங்கள். 
 4. நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியம் நீங்கள் வருவதற்குமுன் சில அடி தூரம்வரை மனம் வீசி நீங்கள் வரப்போகிறீர்கள் என்பதை தெரிவித்துவிடும். அப்படி பயன்படுத்தும் பர்ஃயூம் மற்றவர்கள் இரசிக்கும்படியாக இருக்க வேண்டும். முகம் சுளிக்கும் படியாக இருக்கக் கூடாது. 
 5. முதலில் எந்த கம்பெனி பர்ஃயூம் வாங்கப்போகிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள். பிறகு, அந்த கம்பெனியில் இருக்கும் மற்ற இரகங்களை ஆராய்ந்து உங்களுக்கான ஒரு பர்ஃயூமை தேர்வு செய்யுங்கள்.

பார்க் அவென்யூ, ஃபாக், ஃபாரெஸ்ட் ஸ்பைஸ், யார்டலே, ப்ளாக் ஜாக், ஜியோர்ஜியோ அர்மானி, பெர்பெர்ரி  பார் வுமன் , குச்சி ,ரெவ்லான் சார்லி ரெட் பர்ஃயூம்,கால்வின் கிளைன் போன்றவை இந்தியாவில் பெண்களுக்கான (women) முதன்மை பர்ஃயூம்கள் ஆகும்.

மேலும் படிக்க - வாசனை திரவியம் : ரூ. 1000 திற்கு கீழ் கிடைக்கும் நீண்ட நேரம் நீடிக்கும் வாசனை திரவியங்கள்

பட ஆதாரம்  - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!