கல்லூரி செல்லவிருக்கும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு சில பயனுள்ள குறிப்புகள்

 கல்லூரி செல்லவிருக்கும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு சில பயனுள்ள குறிப்புகள்

கல்லூரி வாழ்க்கை என்றாலே, குதூகலம் தான். மனிதர்கள் வாழ்க்கையில் எத்தனை பருவத்தை கடந்து வந்தாலும், அவர்கள் மனதில் என்றும் ஒரு வசந்த காலமாக இருப்பது கல்லூரி காலமே. இதை யாரும் மறுக்க மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள். அதிலும் குறிப்பாக நீங்கள் முதலாம் ஆண்டு கல்லூரிக்குள் செல்லும் போது பற்பல கற்பனைகளும், எதிபார்புகளும், மகிழ்ச்சியும், ஆச்சரியங்களும் உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.

இந்த வகையில், நீங்கள் முதலாம் ஆண்டு கல்லூரிக்கு (first year college student)  செல்லும் பெண்ணாக இருந்தால், உங்களுக்கு நிச்சயம் மனதில் பல கேள்விகளும், குழப்பங்களும் இருக்கம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பெண்கள் எப்போதும், தங்களை எந்த ஒரு சூழலுக்கும் முன் கூட்டியே தயார் படுத்திக் கொள்ள முயற்சி செய்வது இயல்பே. அப்படி இருக்கும் போது, நீங்கள் முதலாம் ஆண்டு கல்லூரிக்கு செல்லும் மாணவியாக இருந்தால், இங்கே உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள்(tips). மேலும் படியுங்கள்!

1. வகுப்பறைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

Pexels

கல்லூரிக்கு முதன்முதலில் சேரும் அனைத்து மாணவர்களும், பல விழாக்கள், விளையாட்டு, மற்றும் போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு பரிசுகள் வெல்ல வேண்டும், மேலும் பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும், என்றும் நினைப்பார்கள், மேலும் தங்களது நேரத்தை அதிகம் நண்பர்களுடன் செலவிட எண்ணுவார்கள். ஆனால், நீங்கள் இவை அனைத்தும் உங்களுக்கு கல்லூரியில் கிடைத்தாலும், ஒன்றை நீங்கள் என்றும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், அது, நீங்கள் கல்லூரிக்கு முதலில் படிக்க செல்கின்றீர்கள், இந்த பட்ட படிப்பு உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றது என்பதை. அதனால், எந்த காரணத்தை கொண்டு, உங்கள் வகுப்புகளை புறக்கணிக்காமல், முதலில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, பின்னர் கிடைக்கும் நேரங்களில் பிற விடயங்களில் பங்கு பெறலாம்.

2. தினசரி வருகை

நாம் சினிமாவிலும், ஊடகங்களிலும் பார்ப்பது போல, சில நாட்கள் மட்டுமே கல்லூரிக்கு வந்தால் போதும், மற்ற சமயங்களில் உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும், செலவிட்டுக்கொள்ளலாம் என்று எண்ணாதீர்கள். நீங்கள் தவறவிடும் ஒவ்வொரு வகுப்பிலும், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கான பாடங்களும் நடந்து கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால், தவறாமல் கல்லூரிக்கு வருகை தருவதும், வகுப்புகளில் கலந்து கொள்வதும் முக்கியம்.

3. பாதுகாப்பான நன்பர்கள் வட்டாரம்

Pexels

புதிதாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் தங்கள் நண்பர்களை/ தோழிகளை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆணோ, பெண்ணோ, நீங்கள் ஒருவரை அணுகும் போது, அல்லது ஒருவர் உங்களிடம் நட்புக் கொள்ள அணுகும் போது, நன்கு சிந்தித்து, அவரை பற்றி புரிந்து கொண்டும், சிறிதளவாவது தெரிந்து கொண்டும் பின்னர் உங்கள் நட்பை வளர்த்துக் கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும். இல்லை என்றால், நீங்கள் தவறான வழிகளில் இழுக்கப்பட்டு, உங்கள் எதிர் காலம் பாதிக்கப்படலாம்.

4. கொடுக்கப்படும் வேலைகளை / வீட்டுப்பாடங்களை தாமதம் இன்றி முடிப்பது

உங்கள் கல்லூரியில் பேராசிரியர் உங்களுக்குத் தரும் வீட்டு பாடங்கள், ப்ராஜெக்ட் மற்றும் பிற வீட்டு பாடங்களை, நீங்களாகவே நேரம் ஒதுக்கி செய்து விட முயற்சி செய்ய வேண்டும். இதில் தாமதமோ அல்லது அலட்சியமோ இருக்கக் கூடாது. இதனால், நீங்கள் உங்கள் பாடங்களை தக்க சமயத்தில் படிப்பதோடு, வரவிற்கும் பரிசைக்கும் தயாராகலாம்.

5. ஆடை அணிகலன்கள்

Pixabay

பெண்கள் எப்போதும் தங்கள் ஆடை மற்றும் பிற அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முடிந்த வரை நாகரீகமான மற்றும் பிறரை கவரா வகையிலும் ஆடை போடுவது உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். என்னதான் இன்றைய காலகட்டத்தில் பல வகை நவநாகரீக ஆடைகள் வந்து விட்டாலும், உங்களுக்குள்ளேயே ஒரு கட்டுப்பாட்டுடன் இருப்பது உங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்துவதோடு, உங்கள் ஆடை உங்களுக்கான மரியாதையையும் தேடிக் கொடுக்கும்.

6. செலவுகளில் கட்டுப்பாடு

கல்லூரிக்கு சென்றாலே, நமக்கு தேவை / தேவை இல்லை என்று பார்க்காமல், பிற மாணவ மாணவிகள் செலவு செய்யும் போது நாமும், செலவு செய்யாமல் இருந்தால், நம்மை அவமதிப்பார்களோ அல்லது, நம் கௌரவம் பாதிக்கப் படுமே என்று பல இளம் மாணவிகள் நினைப்பதுண்டு. ஆனால், அதை பற்றி நீங்கள் வருந்தாமல், பிறருக்காக தேவையற்ற செலவுகளை செய்வதை விடுத்து, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் செய்வது உங்களுக்கு நல்லது. இதனால் நீங்கள் பணத்தை சேமிக்கவும் செய்யலாம்.

7. கைபேசியை கவனத்தோடு பயன் படுத்துங்கள்

Pixabay

இன்று அனேக இளம் பெண்கள் துன்பத்திற்கும், ஆபதிற்கும் ஆளாவது இந்த ஸ்மார்ட் போனகளால்  தான். இதை யாரும் மறுக்க முடியாது. பெற்றோர்களும், கல்லூரி நிறுவனங்களும் உங்களுக்கு கொடுத்திருக்கும் இந்த சுதந்திரத்தை நீங்கள் பாதுகாப்பாக பயன் படுத்த வேண்டும். எந்த சூழலிலும், உங்கள் கை பேசி  உங்களுக்கு ஆபத்தானதாக முடிந்து விடாமல், உங்கள் பாதுகாபிர்க்கானது என்பதை உணர்த்து சரியாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். குறிப்பாக, பொது இடங்களில் உங்கள் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் சேர்ந்து அல்லது தனியாக அதிக அளவு செல்பி எடுப்பதை தவிர்ப்பது மற்றும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்வது போன்ற விடயங்களை தவிர்க்க வேண்டும்.

8. பேராசிரியரிடம் தெரிவியுங்கள்

உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதனை உடனடியாக உங்கள் பெராசிரியரிடமோ அல்லது கல்லூரி முதல்வரிடமோ தெரியப்படுத்துங்கள். எந்த சூழலிலும், தாமதிக்காமல் உங்கள் பாதுகாபிற்க்கான முயற்சிகளை எடுப்பது மிக முக்கியம் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

9. அனைவரிடத்திலும் நட்போடு இருங்கள்

Pexels

முதலாம் ஆண்டு கல்லூரிக்கு போகும் போது உங்களுக்குள் பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யாரை உங்கள் நண்பராக தேர்ந்தெடுப்பது, யாரிடம் விலகி இருப்பது என்று பல கேள்விகள் வரக்கூடும். ஆனால், முடிந்த வரை யாரிடமும் பகை வளர்த்துக் கொள்ளாமல், நல்ல நட்போடு, அதே நேரத்தில் சற்று இடைவெளியோடு பழகுவது, உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும்.

10. ஏதாவது ஒரு விழாவிலாவது கலந்து கொள்ளுங்கள்

எப்போதும் எந்த போட்டி மற்றும் விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது. முடிந்த வரை ஏதாவது ஒரு விழாவிலாவது, கொண்டாட்டம் அல்லது விளையாட்டிலாவது, உங்களுக்கு பிடித்த ஒன்றில் கலந்து கொள்வது, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பை உண்டாக்குவதோடு, உங்களுக்கு புதிய நண்பர்களையும் பெற உதவும்.  

 

மேலும் படிக்க - காலேஜ் டேஸ் : கல்லூரிக்கு செல்வோருக்கு தேவையான 6 சிறந்த ட்ரெண்டி கைப்பைகள்

பட ஆதாரம் - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.