வாழ்வில் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுப்பவர் எல்லாருமே ஆசிரியர்கள்தான்.. ஆசிரியர் தினம்

வாழ்வில் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுப்பவர் எல்லாருமே ஆசிரியர்கள்தான்.. ஆசிரியர் தினம்

வருடா வருடம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாகவே இந்த நாளை ஆசிரியர் தினமாக (teachers day) கொண்டாடி வருகிறோம்.

அந்த காலங்களில் பள்ளி நாட்களில் ஒவ்வொருவரும் இந்த நாளை தனக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியைகளுக்கு வெட்கமும் பயமும் கலந்து ஓடி போய் ஆசிரியர் தின வாழ்த்துக்களை சொல்லி விட்டு வருவார்கள். இன்றைய நவீன மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு பரிசுகளையும் வழங்கி ஆச்சர்யப்படுத்துகின்றனர்.

சாகும்வரை 1 ரூபாய்க்குத்தான் இட்லி விற்பேன்..ஊருக்கெல்லாம் ஆக்கிப்போடும் கமலாத்தாள்பாட்டி!

Youtube

வாழ்க்கை ஒவ்வொரு நாளும் நம்மை ஏதோ ஒன்றை கற்றுக் கொள்ள வைக்கிறது. யாரோ ஒருவர் மூலம் பல பாடங்களை நமக்கு நடத்திக் கொண்டேதான் இருக்கிறது. முகம் தெரியாத பலர் நமக்கு பொதுவெளியில் சொல்லிப் போன அறிவுரைகள் நமது வாழ்வை செப்பனிட்டு இருக்கின்றன.

ஏதோ பயணத்தில் சில மணி நேரங்களில் அறிமுகம் ஆன பல நபர்கள் நம் வாழ்விற்கு தேவையான வார்த்தைகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்கு வழங்கி போயிருக்கின்றனர். இப்படி நம் வாழ்வில் நமக்கு கற்றுக் கொடுத்த அத்தனை பேருமே ஆசிரியர்கள்தான். அவர்கள் அத்தனை பேருக்குமே உங்கள் நன்றியை தெரிவிப்பது சரியான செயலாக இருக்க முடியும்.

மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு - வெப் சீரிஸ் ஆகிறது.. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.

 

Youtube

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் எனும் இந்த வார்த்தை அது நம்மை அழைத்து செல்லும் அந்த ஆழம்.. நிச்சயம் நமக்கு எழுதப் படிக்க கற்றுத் தந்தவர்களும் நமக்கு இறைவன் தான். அவர்கள் இல்லாவிட்டால் நமது அறிவு என்பது மிருகத்தின் இயல்போடு இயைந்து போயிருக்கலாம். நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்கள் இதனை பிரித்து பார்த்து பகுத்து அறிய நமக்கு தேவையான மூளை வளர்ச்சியை அறிவின் மூலமே வளர வைத்தவர்கள் அவர்கள். அத்தகையவர்களை இந்த நாளில் நினைவு கூறுவதும் சரியானது. அவசியமானதும் கூட.

ஒரு ஆசிரியரின் பணி என்பது மருத்துவர்களின் பணியை போன்றே பல மடங்கு பொறுப்புகளை உள்ளடக்கியது. வளர்கின்ற குழந்தைகளின் மனதில் நல்ல அறத்தை விதைக்க வேண்டிய பொறுப்புகள் ஆசிரியருக்கு இருக்கின்றன. ஒரு நன்மையான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கிற பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Youtube

எல்லா ஆசிரியர்களும் அதன் பொறுப்பை உணர்ந்து நடப்பதாக தெரியவில்லை. ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே இன்னமும் இந்த பொறுப்புகளை சுமக்கின்றனர். மற்றவர்கள் எல்லோரும் கல்வி கற்றுக் கொடுத்தாலே போதுமானது என்கிற நேர நெருக்கடிகளில் சிக்கி இருக்கின்றனர்.

ஒரு குழந்தையை அதன் பெற்றோர்களை விடவும் அதிக நேரம் பார்த்து கவனிப்பது பெரும்பாலும் யார் என்றால் அது நிச்சயம் ஆசிரியர்கள்தான். தொடக்க கல்வி ஒரு குழந்தைக்கு சிறப்பாக இருந்து விட்டால் அடுத்தடுத்த இடங்களில் அவர்கள் சிறந்து விளங்கியபடியே போவார்கள்.

ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு மற்ற ஆசிரியர்களை விடவும் பொறுப்புணர்வு அதிகமானது. ஏனெனில் குழந்தைகள் புரிந்து கொள்ளும் பக்குவம் அற்ற வயதான 2 அல்லது மூன்று வயது முதலே அவர்கள் அக்குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக வேண்டிய கட்டாயம் நிகழ்கிறது. ஆகவே ஆசிரியர்கள் இந்த இடத்தில் இருந்தே சிறப்பாக குழந்தைகளைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

 

Youtube

ஒரு நல்ல மாணவன்தான் ஒரு சிறந்த ஆசிரியரின் அடையாளமாக இருக்கிறான். தன்னால் முடியாத நல்ல லட்சியங்களை மாணவர்கள் மூலம் நிறைவேற்ற விரும்பும் ஆசிரியர்கள் உண்டு. அவர்களால்தான் பல லட்சியவாதிகள் உருவாகின்றனர்.

ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆசிரியர்கள் வாழ்ந்து காட்டுவதே நல்லது. கோபம், சத்தம் , திட்டுதல் என எதுவும் இல்லாமல் பொறுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ்ந்து காட்டினால் உங்கள் வகுப்பறை மாணவர்களுக்கும் அந்தப் பழக்கம் ஏற்படும்.

ஒரு ஆசிரியர் மாணவனுக்கு கற்றுக் கொடுக்கும்போதே அவனிடம் இருந்து நல்ல அறிவு சார்ந்த செய்திகள் இருந்தால் அதனை பெற்றுக் கொள்ளவும் வேண்டும். இதில் எந்த அகங்காரமும் அவசியமில்லை. இந்த நவீன யுகத்தில் ஆசிரியர்கள் தங்களை அப்டேட்டட் ஆக வைத்துக் கொள்ள இதுவே நல்ல முயற்சி.

அதே போல மாணவர்களும் கல்வி கற்ற நாட்கள் மட்டும் அல்லாமல் எல்லா நாட்களிலும் ஆசிரியரின் அறிவுரையை கவனத்தில் வைத்து நடந்தால் இந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவதற்கான அர்த்தங்கள் இன்னும் மேம்படும்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.