கலைகள் மேல் ப்ரியம் கொண்ட தலைமுறையாக இந்த தலைமுறை மாறி வருவது வரவேற்கத் தக்கது. ஆனாலும் தங்களை வருத்திக் கொண்டு டாட்டூ எனும் ஓவியங்களை தங்கள் உடலில் வரைந்து கொள்ளும் சிலருக்காகத்தான் இந்தக் கட்டுரை.
தங்கள் உடலையே ஓவியம் வரையத் தேவையான பலகையாக்கி பல்வேறு விதமான ஓவியங்களை அதில் நிரந்தரமாக வரைந்து தான் ஒரு கலைக் கண் கொண்டவர் என்றோ நான் எந்த வலியையும் தாங்கும் வலிமையானவர் என்றோ தங்களை பற்றிய ஏதோ ஒன்றை இந்த உலகிற்கு சொல்ல வருவதுதான் பெரும்பான்மை டாட்டூ (tattoo)ரசிகர்களின் நோக்கமாக இருக்கிறது.
இன்றைய டாட்டூக்களின் முன்மாதிரி வடிவம்தான் பச்சை குத்துதல் எனப் பாரம்பரியமாக பழங்கால முறைகளில் இருந்து வந்தது. ஆனால் அது ஒரு பச்சை நிறம் மட்டுமே கொண்டிருந்தது. இதனைக் குறிப்பிட்ட சமூகத்தினர் தங்கள் குலத்தொழிலாக செய்து வந்தனர்.
ஆனால் இப்போதோ நவீன மயமாக்கப்பட்ட உலகில் பலவண்ணங்களில் டாட்டூக்களை வரைய முடிகிறது. நமக்கு விருப்பப்பட்ட ஓவியத்தை விருப்பப்பட்ட வண்ணங்களில் வரைந்து கொள்ள முடிகிறது. இங்கிருந்துதான் ஆபத்துக்கள் ஆரம்பிக்கின்றன.
டாட்டூக்களை இரண்டு வகையாகப் பிரித்தால் ஒன்று தற்காலிக டாட்டூகள் இரண்டாவது நிரந்தரமான டாட்டூக்கள் என வகைப்படுத்தப்படுகிறது. தற்காலிக டாட்டூக்கள் ஒருவாரத்தில் அழிந்து விட ஆரம்பிக்கும். ஆனால் நிரந்தர டாட்டூக்கள் என்பது நமது இறப்பிற்கு பின்னர் உடல் புதைந்து மக்கி போனாலும் எலும்புகளில் டாட்டூவின் பதிவுகள் இருக்கும். அந்த அளவிற்கு இதன் நிரந்தரத்தன்மை இருக்கிறது.
எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் மை டெக்னாலஜி உதவியோடு காட்ரிஜ் ஊசி போன்ற கருவியில் ரசாயன மைகளை நிரப்பி, மின்சாரம் மூலம் சூடேற்றி உடலில் விரும்பிய இடத்தில் வரைவதே டாட்டூ (tattoo) எனப்படுகிறது. நிரந்தரமாக போடும் முன்னர் பல தடவை யோசிப்பதே நல்லது.
ஒரு சிலர் தங்கள் காதலரின் பெயரை டாட்டூவாக மாற்றிக் கொள்ள விரும்புவார்கள். எல்லாக் காதல்களும் நல்லவிதமாக தொடர்வதில்லை. ஒரு பெண்ணோ ஆணோ தன்னுடைய காதலி/காதலன் பெயரை நெஞ்சிலோ ரகசிய இடங்களிலோ டாட்டூவாக போடுகிறார்கள் எனில் அவர்கள் காதலின் ஆழம் அத்தகையது. இறப்பிற்கு பின்னரும் எலும்புகளில் அவர்/அவள் பெயரை விலகாது இருக்கும் நேர்மைக்கு சாட்சியானது.
அதே சமயம் அப்படி முடிவெடுத்து போடப்பட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் அதனை அழிக்க சொல்லியும் வருவார்கள். காரணம் அவர்கள் மிக நேசித்த காதலரின் நம்பிக்கைத்துரோகம். ஏமாற்றிய காதலனோ காதலியோ தங்களுக்கும் அவர்களுக்கும் இனி எதுவும் இல்லை என்று விலகி விடுவார்கள். ஆனால் எந்த ஆண் / பெண் மீது வைத்த அழுத்தமான நேசத்தினால் பெயரை டாட்டூ செய்தார்களோ அவர்களுக்கு மனவலியோடு உடல்வலியும் சேரும்.
ஒவ்வொரு முறை அந்தப் பெயரை தன்னுடைய உடலில் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் தந்து போன துரோகங்கள் நிழலாடுவதை அவர்களால் மறக்க முடியாமல் அந்த டாட்டூவை அழிக்க விரும்புவார்கள். டாட்டூவை போடுவதைக் காட்டிலும் அழிப்பது வலி மிகுந்தது. லேசர் முறையில் அழிக்க நேரிடும். சில அடர்வண்ண டாட்டூக்களை அழிப்பதற்கு பலமுறை லேசர் செய்ய வேண்டும்.
ஒரு நிரந்தர டாட்டூவை அழிப்பதற்கு பதிலாக அதில் வேறு விதமான ஓவியங்களை வரைந்து கொள்ளுதல் அந்த பெயரை மறைந்து விட செய்யும். இதுதான் சரியான தீர்வாக இருக்கமுடியும் என்கின்றனர் டாட்டூ வல்லுநர்கள். நிரந்தரமாக காதல் பெயரை சொல்லி டாட்டூ போடும் முன்னர் நிறையவே யோசிப்பது நல்லது.
Youtube
டாட்டூ போடுவதால் ஏற்படும் மற்ற ஆபத்துக்கள்
டாட்டூ போடும் போது சருமம் காயப்படும். அதற்கான வீக்கம் மற்றும் வலி இருக்கும்.. சில சமயம் அரிப்பும் இருக்கலாம். இது சரியாக 10 நாட்கள் ஆகலாம்.
அதிக வண்ணங்களை ஏற்றும்போது அதில் உள்ள ரசாயனங்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சரும அலர்ஜிகள் நாட்பட நாட்பட தோன்ற ஆரம்பிக்கும். உடல் நலம் பாதிக்கும்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன