ஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தமிருக்க வாய்ப்புண்டு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வேலைக்கு செல்லும் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக அளவில் மன அழுத்தத்துக்கும் (stress), மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள்.
ஏனென்றால் பெண்கள் வீட்டிலும் வேலை பார்த்துவிட்டு அலுவலகத்திலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இன்னமும் இருக்கிறது. இதனால் அவர்கள் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக உடலளவிலும், மனதளவிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என சமீப ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
pixabay
நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன. இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை. கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும். இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள். தனிமையில் அழுவது, சோர்வு, பசியின்மை போன்றவை மனஅழுத்தத்தின் அறிகுறிகளாகும்.
மனஅழுத்தத்தில் இருந்து பெண்கள் மீண்டு வர சில டிப்ஸ்!
- மனஅழுத்தத்தில் (stress) இருக்கும் பெண்கள் அதை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். உங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் உங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்வதால், மனஅழுத்தம் குறையும்.
முகப்பொலிவு கிரீம்கள் பயன்படுத்துவோர் கவனத்திற்கு : கிரீம்களால் இவ்வளவு தீமைகளா
- நல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தை தவிர்க்கும். ஏதேனும் ஒரு தொடர் கதையை படியுங்கள். மற்ற நேரங்களில் கூட பிரச்சனைகள் குறித்து எண்ணாமல் கதையை மனதில் ஆசை போடுங்கள்.
- மனதிற்குப் பிடித்த இசையை தொடர்ந்து கேட்பது மிக நல்லது. மனம் வேறு சிந்தனைக்கு போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு. அதனால் உங்களுக்கு பிடித்த மென்மையான பாடலை தொடந்து கேளுங்கள்.
pixabay
- கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம். கண்ணை மூடிய நிலையில் கடல் அலை, குளக்கரை, இயற்கை காட்சிகளென்று கற்பனை செய்து பார்ப்பது மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற உதவும்.
- மன அழுத்தத்திற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனக்கவலை அடையும்போது உடலில் உள்ள தசைகள் இறுக தொடங்கும். சிறிது நேரத்திலேயே உடல் சோர்வு அடைந்து விடும். அதற்கு இடம் கொடுக்காமல் மனதையும், உடலையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
பாத வெடிப்புகள் பாடாய்படுத்துகிறதா? குளிர்காலம் தொடங்குமுன் குணப்படுத்தி விடலாம் வாருங்கள்
- மன பாரத்தை இறக்கி வைக்க நடைப்பயிற்சியும் மேற்கொள்ளலாம். கொஞ்ச தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது கண்கள் கவனத்தை திசைதிருப்பும். பார்க்கும் விஷயங்களில் கவனத்தை பதிய செய்யும்போது மன பாரம் குறையும்.
- உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தம் நீடிக்கும் சமயத்தில் காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். பழச்சாறுகள், தண்ணீர் பருகலாம்.
pixabay
மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் ஸ்பா தெரபிகள்!
ஸ்பா சிகிச்சை மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர பெருமளவு உதவி செய்யும். ஸ்பா நிபுணர்கள் மனித உடற்கூறியலை அறிந்திருப்பார்கள். உடலில் எந்தப் பகுதியை அழுத்தினால் புத்துணர்வு கிடைக்கும் என்பது ஸ்பா செய்பவர்களின் மந்திர விரல்களுக்குத் தெரியும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் ஹாட் ஸ்டோன் மசாஜ் தெரபிமாதம் ஒரு முறையேனும் உடலுக்கு சிறந்த மசாஜ் கொடுத்தால் நல்ல மாற்றம், புத்துணர்ச்சி உண்டாகும்.
களரி ஸ்பா
களரி என்பது கேரளாவில் மல்யுத்த பயிற்சியின் போது செய்யப்படும் ஒருவித கலையாகும். இந்த களரியை மையமாக கொண்டு செய்யப்படும் மசாஜில் குப்புற படுக்க வைத்து மூலிகை எண்ணெய்களை கொண்டு பாதங்களுக்கு நன்கு மசாஜ் செய்யப்படும். இதனால் உடல் நன்கு வளையும் தன்மையைப் பெறுவதோடு மன அழுத்தம் (stress) நீங்கி, உடல் நன்கு சுறுசுறுப்புடனும் இருக்கும்.
pixabay
ஆயில் ஸ்பா
இந்தியாவில் பாரம்பரியமாக தலைக்கு எண்ணெய் வைத்து செய்யப்படும் தெரபி முறையாகும். இதற்கு நெல்லிக்காய் எண்ணெய் மற்றம் பிராமி போன்ற எண்ணெய்களை பயன்படுத்தி மசாஜ் செய்யப்படும். இதனால் மன அழுத்தம் நீங்குவதோடு முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
இளமையான முகத்திற்கு காபி தூளை எப்படி பயன்படுத்த வேண்டும் : எளிமையான அழகு குறிப்புகள்!
லோமி லோமி ஸ்பா
இது ஹவாய் தீவுகளில் இருந்து வந்த ஒரு ஸ்பெஷல் மசாஜ். இந்த மசாஜ் முறையில் எண்ணெய் பயன்படுத்தாமல் வெறும் கையிலேயே உடலை பிடித்து விடும் ஒரு முறை. எனவே மனதை ரிலாக்ஸ் செய்ய ஆசைப்பட்டால் விடுமுறை நாட்களில் இந்த முறையை செய்து கொள்ளலாம். இதனை அழகாக வீட்டிலேயே செய்யலாம்.
pixabay
ஹாட் ஸ்டோன் ஸ்பா
ஹாட் ஸ்டோன் ஸ்பா என்பது மழ மழவென இருக்கும் கற்களை பயன்படுத்தி உடம்பின் முக்கிய பகுதிகளில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யப்படும். ஆஸ்திரேலியாவின் பிரபலமான பசல்ட் நதியில் தான் இந்த கற்கள் கிடைக்கின்றன. அவை இயற்கையாகவே மழ மழவென இருக்கும். அதை இன்னும் உரசி மென்மையாக்கி அதில் கருப்பு நிற கோட்டிங் கொடுத்து பயன்படுத்துகின்றனர். கற்களை சூடுபடுத்தி முக்கிய நரம்பு பகுதிகளில் அளிக்கும் அழுத்தத்தால் உடல் தசைகள் இலகி உடலுக்கு ஃபீல் ஃபிரீ உணர்வை அளிக்கிறது.
அரோமாதெரபி ஸ்பா
அரோமாதெரபி என்பது வெறும் மசாஜ் மட்டுமல்ல, இது மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு முறை எனலாம். இதில் பயன்படுத்தப்படும் நறுமண எண்ணெய் மற்றும் மெழுகுவர்த்திகள் அனைத்து உணர்வுகளையும் தூண்டி, மசாஜின் இறுதியில் உடலுக்கும், மனதிற்கும் ஒருவித புத்துணர்ச்சியை தரும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.