25 வயதுக்கு மேல் எப்படி இளமையாகவும் அழகாகவும் இருப்பது? பயனுள்ள அழகு குறிப்புகள்!

25 வயதுக்கு மேல் எப்படி இளமையாகவும் அழகாகவும் இருப்பது? பயனுள்ள அழகு குறிப்புகள்!

இன்று பெரும்பாலான பெண்கள் நேரமின்மை காரணமாக தங்களது சரும ஆரோக்கியத்தை பற்றியும், முக அழகை பற்றியும் சிந்திப்பதில்லை. எனினும் அவர்களுக்கு தங்கள் அழகு (beautiful), சருமம் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகின்றது என்பதை பற்றி அதிக கவலைகள் மனதில் இருக்கும்.

இன்றைய விரைவாக ஓடிக் கொண்டிருக்கும் உலகத்தில், தங்களது உடல் ஆரோக்கியத்தை பற்றியும், அழகை பற்றியும் சிந்திக்க, அல்லது அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க யாருக்கும் முடிவதில்லை. இதை அப்படியே விட்டுவிட்டாலும், பாதிப்புகளை சில நாட்களிலேயே உடல் வெளிபடுத்தி விடுகின்றது. அதனால் ஒரு நல்ல தீர்வை உடனடியாகப் பெற வேண்டியது அவசியம்.

நீங்கள் உங்கள் அழகை பராமரித்து, நல்ல ஆரோகியத்தோடு வாழ விரும்புகின்றீர்களா?

அப்படி என்றால், தொடர்ந்து படியுங்கள். இது உங்களுக்காக!

pixabay

உங்களால் அதிக நேரம் பேசியல் செய்ய செலவிட முடியவில்லை என்றாலும், ஒரு சிறு முயற்சியாக வாரத்தில் குறைந்தது 2 அல்லது 3 நாட்களுக்காவது சிறிது எலுமிச்சைப் பழச்சாற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இது முகத்தில் இருக்கும் பருக்கள், அரிப்பு மற்றும் அழுக்கு அல்லது தூசிகளை போக்கி, சருமத்தை சுத்தம் செய்து விடும்.

எலுமிச்சைப் பழம்:

தினமும் நீங்கள் குளிப்பதற்கு கடலை மாவை பயன்படுத்தலாம். இதனுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள், கத்திரி மஞ்சள் தூள் மற்றும் வெப்பம் இலைப் பொடி ஆகியவற்றையும் கலந்து வைத்துக் கொண்டு, சோப்பிற்கு பதிலாக இந்த எளிய ஸ்னானப் பொடியை பயன்படுத்தி குளிக்கலாம். இது உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, நல்ல போஷாக்கு மற்றும் பொலிவையும் (beautiful) கொடுக்கும்.

கடலை மாவு:

உங்கள் சருமம் பொலிவிழந்து காணப்பட்டால், நீங்கள் வாரம் 2 அல்லது 3 முறையாவது சிறிது பச்சை அரிசி மாவில் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். இது நல்ல பலனைத் தரும். மேலும் இதற்கு அதிக நேரமும் ஆகாது.

பச்சை அரிசி மாவு:

நீங்கள் தினமும் உங்கள் தலைமுடிக்கும், சருமத்திற்கும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணையில் சிறிது வைட்டமின் E எண்ணையை ஊற்றி கலந்து வைத்து விடுங்கள். இந்த எண்ணையை தலைமுடி மற்றும் சருமம் இரண்டிற்கும் தேய்க்கலாம். தினமும் குளிப்பதற்கு 1 அல்லது 2 மணி நேரத்திற்கு முன், அதாவது காலையில் எழுந்தவுடன் ஒரு 2 நிமிடம் ஒதுக்கி, இந்த தேங்காய் எண்ணையை, உங்கள் சருமத்தில், குறிப்பாக முகத்திலும், கைகள், கால்களிலும் தேய்த்து, லேசாக மசாஜ் செய்து விட்டு, பின் உங்கள் வீட்டு வேலைகளை செய்யத் தொடங்கலாம். பின்னர் கடலை மாவு தேய்த்து குளித்து விடலாம். இப்படி செய்தால், உங்கள் சருமத்திற்கு நல்ல நிறம் கிடைப்பதோடு, நல்ல போஷாக்கு மற்றும் பொலிவையும் (beautiful) பெரும்.

தேங்காய் எண்ணை மற்றும் வைட்டமின் E:

நீங்கள் சமைத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறிய துண்டு தக்காளிப் பழத்தை முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இது நல்லப் பலனைத் தரும். இதற்காக நீங்கள் தனியாக நேரம் செலவிட வேண்டாம்.

தக்காளி:

எப்போதும், முடிந்த வரை குளிர்ந்த நீரில் குளிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். சுடு தண்ணீரில் குளிக்கும் போது உங்கள் சருமம் பாதிக்கப்படுகின்றது. இதனால் சுருக்கங்கள் அதிகம் ஏற்படுவதோடு, சோர்ந்தும் காணப்படுகின்றது. அதனால், சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்:

வாரம் ஒரு முறை, நீங்கள் விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது, பப்பாளி, வாழைப்பழம், மாதுளைப் பழம், கொய்யா, என்று ஏதாவது ஒரு பழத்தை பயன்படுத்தி பேசியல் செய்து கொள்ளலாம். இது நல்ல பலனைத் தரும். இந்த பழத்தோடு சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து பேசியல் செய்ய வேண்டும். உடனடியாக நீங்கள் பலனைப் பார்க்கலாம்.

பழப் பேசியல்:

வாரம் ஒரு முறையாவது, சிறிது நல்லெண்ணையில் 5 பூண்டுப் பல் மற்றும் சிறிது மிளகு சேர்த்து, காய வைத்து, மிதமான சூடு இருக்கும் போது, இந்த எண்ணையை உங்கள் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து மிதமான சுடு தண்ணீரில், கடலை மாவு ஸ்னானப் பொடி பயன்படுத்தி குளித்து விட வேண்டும். இப்படி செய்தால், உங்கள் உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு, உங்கள் சருமமும் நல்ல ஆரோக்கியம் பெரும். மேலும் நல்ல பலபலப்பாகவும் இருக்கும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.