நடிகை ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை : உருகிய கணவர் போனி கபூர்!

நடிகை ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை : உருகிய கணவர் போனி கபூர்!

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் போன்ற தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற இவர் ஹிந்தி சினிமாவில் பிஸியாகிவிட்டார். மேலும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். நடிகை ஸ்ரீதேவி 300 படங்களில் நடித்துள்ளார். 

சினிமா  துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள அவர் ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து இறந்தார். அவரின் மறைவு அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. 

twitter

அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில் அண்மையில் அவரின் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி கபூர், குஷி ஆகியோர் நினைவு நாளை கொண்டாடினர். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியை நினைவு கூறும் வகையில் சிங்கப்பூர் பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள். 

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அருகில் நின்று நீண்ட நேரம் தொட்டு தொட்டுப் பார்த்து ரசித்தனர். பின்னர் ஸ்ரீதேவியின் மெழுகு சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் #Sridevi என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டு ட்ரென்ட்டாகி வருகிறது. 

twitter

இந்த மெழுகு சிலை 1987ம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் இடம் பெற்ற ஸ்ரீதேவின் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர் ஒரு மெழுகு அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா தலமாகும். இந்த அருங்காட்சியகம் சென்டோசா தீவின் இம்பியா லுக் அவுட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு மிகவும் பிரபலமான குறிப்பிட்ட விளையாட்டு சின்னங்கள், அரசியல் சின்னங்கள், சூப்பர்ஸ்டார்கள் போன்றவர்களின் மெழுகு உருவங்கள் உள்ளன. நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்கள் உள்ளன. 

twitter

மேலும் நமது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வரிசையில் தற்போது ஸ்ரீதேவிக்கு சிலை வைத்திருப்பது அவருக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இதற்கு நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் நன்றி தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகும் அவருக்கு கிடைக்கும் இந்த மரியாதையை நினைத்து நான் மிகவும் மனமகிழ்ந்து உள்ளேன். 

மேடம் துசாட்ஸ் சிங்கப்பூரில் நடைபெறும் அல்டிமேட் ஃபிலிம் ஸ்டார் எக்ஸ்பீரியன்ஸ் நிகழ்ச்சியில் நானும் எனது குடும்பமும் ஒரு பகுதியாக கலந்து கொள்வோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாளுக்கு முன்னதாகவே சிலை வடிவமைப்பு வீடியோவுடன் பதிவு செய்துள்ளார் போனி கபூர். ஆனால் இந்த சிலை ஸ்ரீதேவி போல இல்லை என்றும் அவரின் மகள் ஜான்வி கபூர் போல இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.