அசைவம் இல்லாத சண்டேவா? : சுவையான செட்டிநாடு ரெசிபிக்களை ஈஸியாக செய்யலாம் வாங்க!

அசைவம் இல்லாத சண்டேவா? : சுவையான செட்டிநாடு ரெசிபிக்களை ஈஸியாக செய்யலாம் வாங்க!

தமிழ்நாட்டில் அசைவ உணவுகளில் செட்டிநாடு ஸ்டைலுக்கு இணை எதுவும் வர முடியாது. செட்டிநாடு ரெசிபிக்கள் (recipes) பிடிக்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. செட்டிநாடு உணவுகள் நல்ல மணத்துடனும், காரமாகவும், சுவையுடனும் இருக்கும். அவற்றை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம். 

செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் : 

சிக்கன் - 1/2 கிலோ, 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3, 
கறிவேப்பிலை - சிறிது, 
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு, 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், 
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன். 

செட்டிநாடு மசாலாவிற்கு... 

மல்லி - 3 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன், 
வரமிளகாய் - 6, 
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன், 
பட்டை - 3 இன்ச், 
கல்பாசி - 2 துண்டு, 
ஏலக்காய் - 4, 
கிராம்பு - 4, 
மிளகு - 1 டீஸ்பூன், 
அன்னாசிப்பூ - 1. 

 

youtube

செய்முறை : 

முதலில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு இஞ்சி, பூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 20 நிமிடம் மிதமான தீயில் சிக்கனை மூடி வைத்து வேக வைக்க வேண்டும். 

இப்போது சிக்கனில் இருந்து தண்ணீர் வெளிவரும். இந்நிலையில் மீண்டும் சிக்கனை பிரட்டி விட்டு மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்ததும் தீயை அதிகரித்து அதில் மசாலா பொடியை சேர்த்து நன்கு பிரட்டி கொத்தமல்லித் தூவி இறக்கினால் செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெடி!

செட்டிநாடு இறால் கிரேவி

தேவையானப் பொருட்கள்:

இறால் - கால் கிலோ,
வெங்காயம்   நறுக்கியது - 2,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - ஒரு துண்டு,
சீரகம் - 1 ஸ்பூன்,
தக்காளி - 2,
தேங்காய்  துருவியது - 1 கப், 
காய்ந்த மிளகாய் - 10,
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.

youtube

செய்முறை :

இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்  பூண்டையும், இஞ்சியையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். இறால் கிரேவிக்கு இஞ்சி, பூண்டு பேஸ்ட் தான் முக்கியமானது. பின்னர் தேங்காய் துருவல், காய்ந்த  மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். வாணலில் தேவையான அளவு எண்ணை விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்தபின் தக்காளியை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் இறாலை போட்டு வதக்கி கிளறவும். இறால் நன்றாக சுருளும் வரை கிளறிய பின்னர், அரைத்து வைத்துள்ள பூண்டு, இஞ்சி விழுதையும் போட்டு வதக்க வேண்டும். பச்சை வாசனை நன்றாக போகும் வரை வதக்கிய பின்னர், அதனுடன் அரைத்த தேங்காய்  விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன். மசாலா கெட்டியாகி (recipes) இறால் வெந்தவுடன் இறக்கி கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

செட்டிநாடு மீன் குழம்பு

தேவையான பொருட்கள் : 

மீன் - 8 துண்டுகள், 
புளி - 1 எலுமிச்சை அளவு, 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, 
கொத்தமல்லி - சிறிது, 
உப்பு - தேவையான அளவு, 
பூண்டு - 10 பல், 
தக்காளி - 2, 
வெங்காயம் - 1,
வெந்தயம் - 1 டீஸ்பூன். 

அரைப்பதற்கு... 

துருவிய தேங்காய் - 1/4 கப், 
சோம்பு - 1 டீஸ்பூன், 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், 
மல்லி தூள் - 2 டீஸ்பூன்.

youtube

செய்முறை : 

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வந்த பின்னர் பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். 

பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை அரைத்து இதனுடன் சேர்ந்து வதக்க வேண்டும். இதனையுடன் மஞ்சள் தூள் சேர்த்து, உப்பு மற்றும் கரைத்து வைத்துள்ள புளி நீரை சேர்த்து 20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது மீன் துண்டுகளை சேர்த்து மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால் செட்டிநாடு மீன் குழம்பு ரெடி (recipes)!

செட்டிநாடு நண்டு குழம்பு

தேவையான பொருட்கள் : 

நண்டு - 1/2 கிலோ,
வெங்காயம் - 2, 
தக்காளி - 2 சீரகம் - 1 டீஸ்பூன், 
சோம்பு - 1 டீஸ்பூன், 
பூண்டு - 5 பல், 
மிளகு - 1 டீஸ்பூன், 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மல்லித் தூள் - 3 டீஸ்பூன், 
கொத்தமல்லி - சிறிது, 
கறிவேப்பிலை - சிறிது, 
உப்பு - தேவையான அளவு, 
எண்ணெய் - தேவையான அளவு. 

youtube

செய்முறை: முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு, மிளகு கலவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து மூடி வைக்க வேண்டும். நண்டு நன்கு வெந்த பின் அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை தூவி இறக்கினால், செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி!

 

செட்டிநாடு எலும்பு சூப்

தேவையான பொருட்கள்

ஆட்டு எலும்பு - 1/4 கிலோ,
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
பட்டை - 2 துண்டுகள்,
கிராம்பு - 6,
மிளகு - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு.

youtube

செய்முறை  

முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பின்னர் மிளகை உடைத்து வைக்கவும். ஆட்டு எலும்பை கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு  தண்ணீர் ஊற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், உடைத்த மிளகு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து எலும்பில் உள்ள சாறு நீரில் இறங்கி எண்ணெய் போல் மிதக்கும் நேரத்தில் பாத்திரத்தை இறக்கி விடவும்.

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மற்றும் கிராம்பை தட்டிப்போடவும். அவை சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து எலும்பு நீரை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்துவிடவும். சூப் சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி பின்பு பரிமாறவும்.

செட்டிநாடு மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்:


மட்டன் - 1/2 கிலோ,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்,
தக்காளி - 3,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிது,
தேங்காய் - 1 கப்,
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்.

மசாலா பொருட்கள் :

பட்டை - 1 இன்ச்,
ஏலக்காய் - 2,
கிராம்பு - 3,
சோம்பு - 1 டீஸ்பூன்.

செட்டிநாடு மசாலா பொடிக்கு :

வரமிளகாய் - 6,
மல்லி - 4 டேபிள் ஸ்பூன்,
பட்டை - 5 செ.மீ,
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்,
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - 5,
அன்னாசிப்பூ - 1.

youtube

செய்முறை:

முதலில் மட்டனை நன்றாக கழுவி வைக்கவும். மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, செட்டிநாடு மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி மசாலா பொருட்களை போட்டு தாளித்த பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

இதனுடன் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூட வேண்டும். குறைவான தீயில் 20 நிமிடம் குக்கரை அடுப்பிலேயே வைத்து இறக்கவும். பிறகு குக்கரைத் திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய், சோம்புகலவையும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.