பிக் பாஸ் 3 (biggboss) நிகழ்ச்சி பெரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் கவின், லாஸ்லியா, முகென், சேரன், ஷெரின் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் இரண்டு குழுவாக தனித்தனியாக பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
ஏற்கனவே பிரச்னையாக இருக்கும் வீட்டிற்குள் தற்போது வந்த போட்டியாளர்களால் இன்னும் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றது. நேற்றைய நிகழ்ச்சியில் அபிராமி கெஸ்டை நீங்க எண்டர்டெய்ன் பண்ணுங்க என்று சொல்ல கவின், லாஸ்லியா அவரை கலாய்த்து கொண்டிருந்தனர். சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் வெளியில் நடந்ததை பற்றி வனிதா, ஷெரின், சேரன் ஆகியோரிடம் பேசிக்கொண்டனர். சாக்ஷி, வனிதாவிடம் கவினை நாம் காதலித்தது வொர்த் இல்லனு இப்போ ஃபீல் பண்றேன் என கூறினார்.
அதற்கு வனிதா “யூஸ்லெஸ், அவன்கிட்ட உன்னாலதான் சாக்ஷி போனதுனு புரியவெச்சுட்டிருக்கேன். லாஸ்லியாவும், கவினும் ரொம்ப ஓவராப் போறாங்க இப்பலாம்” என்றார். இதனை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிய சாக்ஷி, அதத்தான் நான் ஆரம்பத்துல இருந்தே சொல்றேன், ஃப்ரெண்ட்ஷிப் ஃப்ரெண்ட்ஷிப்னாங்க இப்ப அந்த ஃப்ரெண்ட்ஷிப் எங்க?” என்றார். மேலும் ஷெரின், தர்ஷன் வெளில க்யூட்டாதான் காமிச்சிட்டிருக்காங்க என்றார்.
அப்போது ஷெரின் யாருக்காகவோ க்ளோஸாகி விட்டுக்கொடுத்து விளையாடறா என்று வனிதா கூற, அதனை மறுத்து பேசிய ஷெரின் ஒரு கட்டத்தில் கோபமடைந்தார். எனக்கும் தர்ஷனுக்கும் ஒண்ணுமில்ல, சும்மா அதப்பத்திப் பேசாத, நீதான் என்னையும் தர்ஷனையும் பத்தி திரும்பத் திரும்ப பேசி பெரிசு பண்ற. நீதான் இரிடேட் ஆகிட்டே இருக்க என்று வனிதாவை திட்டிவிட்டு அங்கிருந்து கோவமாக ஷெரின் சென்றார்.
பின்னர் சாக்ஷி, சாண்டி குழுவினரிடம் சென்று பேசினார். முன்னதாக ஒரு டாஸ்கில் ஓடும்போது கவின் விழுந்தார். அப்போது சாக்ஷி தள்ளிவிட்டிருப்பாளோ என்று சாண்டியிடம் சந்தேகப்பட்டார். அந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட சாக்ஷி, நான் யாரையும் தள்ளி விடல, அப்படி சொல்லி சிம்பதி கிரியேட் பண்றாங்களானு தெரியாது. அப்படி சீப் மெண்டாலிட்டி எனக்கில்ல என்று விளக்கினார்.
அப்போது குறுக்கிட்ட கவின், இன்னைக்குன்னு பார்த்து இவ்ளோ கொசு வருது. சாண்டிண்ணே… தூங்கலாமா என்று கிண்டலாக கேட்டார். மற்றொரு புறம் மோகன் வைத்யா சேரனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது லாஸ்லியா குறித்து சேரனிடம் பேசிய மோகன், பசங்க உங்களப் பத்திப் பேசறப்ப அவளும் சேர்ந்து சிரிச்சிட்டிருக்கா, அது உண்மையான பாசமா, பொய் தான் என கூறினார்.
அதற்கு எல்லாத்துலயும் கவின் விவரம், அவனால் ரெண்டு பொண்ணுங்க பாதிக்கப்படறாங்க. ஆனா அவன் ஜாலியா இருக்கான். அதுனாலதான் அவனை அனுப்பணும்னு வாரவாரம் சொல்றேன் என்று மோகன் வைத்யாவிடம், சேரன் சொல்லிக்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து லக்சரி பட்ஜெட் டாஸ்க் தொடங்கியது. அப்போது கன்வேயர் பெல்டில் மூலப்பொருட்களை எடுக்கும்போது தர்ஷனுக்கு அடிபட்டது. எதிர் அணியை சேர்ந்த லாஸ்லியா அவருக்கு ஃபர்ஸ்ட் எய்ட் செய்தார்.
மீண்டும் பொருட்கள் வர கட்டுப்போட்ட கையோடு தர்ஷனும், நார்மலாக இருந்த முகெனும் போட்டி போட்டுப் பொருட்களை எடுத்தனர். இதில் 18 மதிப்பெண்களுடன் வனிதா, சேரன், தர்ஷன், ஷெரின் கூட்டணி வெற்றி பெற்றது. பின்னர் பட்டிமன்ற்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சேரன், வனிதா, ஷெரின், தர்ஷன் ஒரு அணி. சாண்டி, கவின், லாஸ்லியா, முகென் மற்றொரு அணியினர். அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு தலைப்பாக கொடுத்தனர்.
அவர்கள் கொடுக்கும் தலைப்பிற்கு ஏற்றவாறு வனிதா அணியினர் எதிராகவும், கவின் அணியினர் ஆதரவாகவும் பேசினர். 3 விதமான தலைப்பு கொடுக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. இறுதியில் மன்னிப்பு என்ற சொல்லிற்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்று விவாதத்தின் போது லாஸ்லியா மற்றும் ஷெரின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீட்டில் (biggboss) மன்னிப்பு என்கின்ற வார்த்தைக்கு ஒரு மரியாதையே கிடையாது.
தர்ஷனுக்காக நான் போட்ட சப்பாத்தியை லாஸ்லியா குத்திவிட்டு, அவர் துளிக்கூட தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவில்லை என ஷெரின் கூறினார். அதற்கு மன்னிப்பு கேட்பதால் ஒருவர் நல்லவராக மாறிவிடமாட்டார் என லாஸ்லியா பதில் அளித்தார். முடிவில் வனிதா அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து வனிதா சமைத்துக்கொண்டிருக்க மோகன் வைத்யா, சாக்ஷி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வனிதா பேசுவதை சாண்டி இமிடேட் செய்ததுடன் கலகலப்பாக நிகழ்ச்சி முடிந்தது.
#Day74 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/kmt4GO3yig
— Vijay Television (@vijaytelevision) September 5, 2019
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில், (biggboss) கார்டன் ஏரியாவில் உள்ள சோபாவில் அமர்ந்து ஷெரின், வனிதா, சாக்ஷி ஆகியோர் பேசி கொண்டிக்கிறார்கள். அப்போது தர்ஷனுடனான உறவு குறித்து வனிதா தவறாக பேசுவதைக் கேட்டு பொங்கி எழுகிறார் ஷெரின். உனக்கு காமென் சென்ஸ் இருக்கா.. என்னை பற்றி பேச உனக்கு எந்த உரிமை இல்லை என வனிதாவை போட்டு தாக்கியிருக்கிறார் ஷெரின். அந்த பையன் டீசெண்டாக ஒதுங்கி தானே போய் கொண்டிருக்கிறார் என தர்ஷனை குறிப்பிட்டு வனிதா பேசுகிறார். இதனால் ஆத்திரமடையும் ஷெரின், தர்ஷனை பார்த்து நான் உன்னை செய்தேன் என கேட்கிறார். அதற்கு தர்ஷன் அவள் எதுவும் செய்யவில்லை என கூறுவது காட்டப்பட்டுள்ளது.
#Day74 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HI30o99kAc
— Vijay Television (@vijaytelevision) September 5, 2019
இரண்டாவது புரோமோவில் வனிதா, ஷெரினிடம் நீ தர்ஷனை காதலிக்கிறாய் என கூறியதை நினைத்து அழுகிறார். அவரை சேரன் சமாதானப்படுத்துகிறார். நான் தர்ஷனை காதலிக்கிறேன் என வனிதா கூறுகிறார், என்னால் எப்படி சும்மா இருக்க முடியும் என ஷெரின் அழுகிறார். இனிமேல் நான் தர்ஷனுடன் பேச மாட்டேன், அவன் இருக்கும் இடத்திற்கு கூட செல்லமாட்டேன் என ஷெரின் கூறுகிறார். வனிதா அவ்வாறு கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதனை வேறு யாராவது கூறி இருந்தால் கூட நான் இவ்வளவு கவலை பட மாட்டேன் என ஷெரின் அழுவது காட்டப்பட்டுள்ளது. அப்போது தர்ஷன் சோகமாக படுத்தபடி யோசித்து கொண்டிருக்கிறார்.
#Day74 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/snYuQlqg1t
— Vijay Television (@vijaytelevision) September 5, 2019
மூன்றாவது புரோமோவில் நேற்று மற்றும் அதற்கு முந்தைய டாஸ்கில் என்னுடைய பங்களிக்க நூறு சதவீதம் இருந்தது என ஷெரின் கூறுகிறார். அப்போது குறுக்கிட்ட வனிதா, கிடையாது என கூற, ஷெரின் அவரது பணிகளை சரியாக செய்தார். தலையணை டாஸ்கில் வனிதா சரியாக தையல் போடாததால் மட்டுமே அவரது தலையணைகள் ரிஜெக்ட் செய்யப்பட்டன என தர்ஷன் கூறுகிறார். இதை அன்றே கூறி இருக்கலாமே என சாண்டி கேள்வி எழுப்புகிறார்.அப்போது கோவமாக பேசிய சேரன், எவ்வளவு நேரம் கேட்பது என வனிதாவிடம் சீறுகிறார். மேலும் ஒரு முட்டாள் போல நாங்கள் அமர்த்திருக்கின்றோம் என சேரன் கூறுவது புரோமோவில் வெளியாகியுள்ளது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.