நீயே கேட்டாலும் விட்டுக் கொடுப்பதாயில்லை உன் மீதான என் காதலை.. சாண்டி மனைவி சில்வியா!

நீயே கேட்டாலும் விட்டுக் கொடுப்பதாயில்லை உன் மீதான என் காதலை.. சாண்டி மனைவி சில்வியா!

இந்த பிக் பாஸ் சீசன் 3 இவ்வளவு நன்றாக செல்வதற்கு ஒருவகையில் சாண்டியும் காரணமே. மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் அதனைப் பாடல் வடிவில் வெளியேற்றுவதில் கெட்டிக்காரர் சாண்டி (sandy).

பிக் பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாக இருந்து வரும் சாண்டி எந்தவித உள்ளர்த்தங்களும் இல்லாமல் பிக்பாஸ் மீதான தனது இயல்பான பாசத்தை "குருநாதா" என்று யதார்த்தமாக அழைத்ததன் மூலம் காட்டப்போக இப்போது சாண்டியால் குருநாதர் பிரபலம் ஆகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிக்பாஸ்சும் சும்மா இருக்காமல் சாண்டியுடன் சிஷ்யா என்கிறார்.. வால்தனம் செய்யும் போட்டியாளர்களிடம் அதே போலவே பேசி கிண்டலும் செய்கிறார். இந்த முறை பிக் பாஸ் தன்னுடைய நாற்காலியை விட்டு இறங்கி வந்து போட்டியாளர்களுடன் கூடவே விளையாட சாண்டி தான் முக்கிய காரணம் என்பதில் சந்தேகமே இல்லை.

தர்ஷனின் நண்பரை மணந்த பிக் பாஸ் போட்டியாளர் ரம்யா! தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வாழ்த்து !

 

விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளில் இவரைப் பார்க்கும்போது விளையாட்டான பையன் என்பதான தோற்றம் இருக்கும்.. ஆனால் பிக் பாஸ் வந்த பின்னர்தான் சாண்டி எனும் நபருக்கும் குழந்தை மீதான எல்லையற்ற பாசம் மற்றும் மனைவி மீதான கட்டுக்கடங்காத காதல் இரண்டும் இவரிடம் இருக்கிறது.

முதல் மனைவி காஜலை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாம் மனைவியாக தன்னுடைய வாழ்வில் வந்த சில்வியாவை ஆரம்பத்தில் வழக்கம் போல இருந்தாலும் போக போக தான் கவனித்துக் கொள்ள ஆரம்பித்ததாக சாண்டி பிக் பாஸ் வீட்டில் ஒருமுறை கூறினார்.

ஆர்யாவை விட சூர்யாவிடம்தான் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது - தனி ரூட்டில் ஸாயிஷா !

சாண்டிக்கும் சில்வியாவிற்கும் பிறந்த தேவதைக் குழந்தை லாலா என்கிற சுசானா. குழந்தையை நினைத்து அடிக்கடி கலங்கும் சாண்டி தகப்பன் பாசத்தின் பிரதிநிதி என்றும் கூறலாம். 100 நாட்கள் கழித்து வீட்டிற்கு செல்லும்போது லாலா தன்னை அடையாளம் தெரியாமல் தன்னிடம் வர மறுத்து விடுவாளோ என்று சாண்டி கண்கலங்குவதுண்டு.

ஆனால் 80 நாட்கள் கடந்து ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் உள்ளே நுழைந்த லாலா சாண்டியைப் பார்த்ததும் பொம்மையைக் கொடுத்தார். சாண்டியிடம் சென்று ஒட்டிக் கொண்ட லாலா அதன் பின் அவர் அம்மாவிடம் வர மறுத்தாள். அப்பாவோடு ஓடி விளையாடினாள். அப்பாவைக் காணாமல் தேடினாள்.

ஆல்யா வீட்டுல பேசிப் பார்த்தோம்.. ஒத்துக்கல..இப்போ ஆல்யா எங்க வீட்டுலதான் இருக்கா -சஞ்சீவ்

 

கிட்டத்தட்ட எந்த குடும்ப படத்திலும் காணக்கிடைக்காத பாசப்பிணைப்பின் போராட்டமாகவே அந்த நிமிடங்கள் அத்தனை அழகாக அமைந்து போனது. அதன் பின்னர் வெளியே வந்த சில்வியா சாண்டி மீது தனக்கிருக்கும் காதலை வெகு அழகாக ஒரு பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி அடிக்கடி பிக்பாஸ் பார்த்து சாண்டிக்கு சப்போர்ட் செய்து கொண்டே இருந்தார். என்ன இருந்தாலும் இது சில்வியாவின் மனதில் லேசான வலியை உண்டாக்கித்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு கொடுக்கப்பட்ட பதிலாகவும் இந்தப் பதிவை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!