ஸ்பெயின் நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா : க்யூட் புகைப்படங்கள்!

ஸ்பெயின் நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா : க்யூட் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் சமந்தா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார் சமந்தா. 

மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சினிமா அவார்ட்ஸ், பிலிம் ஃபார் அவார்ட்ஸ், விஜய் அவார்ட்ஸ் போன்ற 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் சமந்தா. இவர் தற்போது ஒரு புதிய வெப் சீரீஸ் ஒன்றில் நடித்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதாப்பத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் சமந்தா.

instagram

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் அவர் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் ஓ பேபி, படம் வெளிவந்து தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சமந்தா அவருடைய கதாப்பாத்தில் சிறப்பாக நடித்துள்ளார். 

தற்போது இவர் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார்.  சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது கணவர் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறார் நடிகை சமந்தா. இந்நிலையில் சமீபத்தில் சமந்தா அவரது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.

instagram

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்ககளை பதிவேற்றம்  செய்து தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க செய்திடுவார். அந்த வகையில் கடந்த வாரம் ஒரு ஹாட் போட்டோவை அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். பின்னர் சமந்தாவின் மாமனாரும், பிரபல நடிகருமான நாகார்ஜுனாவின் 60வது பிறந்தநாள் ஸ்பெயின் நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

இதையடுத்து குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். சமீபகாலகமாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது உடல் தோற்றத்தை ஒல்லியாக மாறியுள்ளார் சமந்தா. மாமனாரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா மிகவும் ஹாட்டான உடை அணிந்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலர் அவருக்கு ஆதரவாகவே பேசினர். இதனை தொடர்ந்து நீச்சல் உடையில் சமந்தா மற்றொரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். 

instagram

அதில் ஒரு டாட்டூ காணப்பட்டது.  அதனையடுத்து ரசிகர்கள் அதன் விளக்கம் என்ன என கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சமந்தா தனது கணவனுடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் நீச்சல் குளத்தில் நாகர்ஜுனா இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் சமந்தா, உங்களைப் பார்த்துத் தான் எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். 

 
 
 
View this post on Instagram
 
 

I love you for always pretending to be as enthusiastic as I am 😂😂 @chayakkineni ❤️❤️ #childrenofthe80s

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

உங்களது அழகான மனம், வாழ்க்கைக்கு நீங்கள் கொண்டு வரும் படைப்பாற்றல் ஆகியவற்றால் உங்களின் வயதை தோற்கடித்து விட்டீர்கள் மாமா என குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ வேடிக்கையாக இருந்தது. இந்நிலையில் நேற்று கருப்பு உடையில் கையில் பலூனை ஏந்தியவாறு மகிழ்ச்சியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெ