சமந்தா அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார், தீபிகா தான் சரியானவர்... பி.வி. சிந்து ஓபன் டாக்!

சமந்தா அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார், தீபிகா தான் சரியானவர்... பி.வி. சிந்து ஓபன் டாக்!

தன்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க சமந்தா சரியானவர் இல்லை என பிவி சிந்து தெரிவித்துள்ளார். சமீபகாலமாக வாழ்கை வரலாற்று படங்கள் அதிகம் எடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டு வீரர்களின் வாழ்கை வரலாற்று படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் நடிக்க சமந்தாவிடம் கேட்கப்பட்டது. 

சமந்தாவும் (samantha) இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பி.வி. சிந்துவிடம் கேட்ட போது, எனது வாழ்க்கை கதையில் சமந்தாவை விட தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார். ஏனென்றால் தீபிகா ஒரு பேட்மிண்டன் வீராங்கனை. ஆனால் எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை பட தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

twitter

இந்த கருத்துக்கள் மூலம் படக்குழுவினர் என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரியவில்லை. தீபிகா படுகோனா? சமந்தாவா? என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் குழப்பத்தில் என்று வலைத்தளங்களில் பரவி வருகிறது. சிந்துவே சொல்லிவிட்டதால் சமந்தா நடிக்க ஒப்புதல் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே 96 ரீமேகில் சமந்தா பிஸியாக உள்ளார். 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான 96 படத்தை தெலுங்கில் ஷர்வானந்த், சமந்தாவை வைத்து ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தான் தெலுங்கில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார். 96 படத்தை பார்த்து பலரும் ராம், ஜானு நினைப்பாக இருந்தனர். அதே ஃபீலிங்கை தெலுங்கு ரசிகர்களுக்கும் வரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  

பிரேம் குமார். படப்பிடிப்பில் ஒரு ஷாட்டுக்கும் மற்றொரு ஷாட்டுக்கும் இடையே பெரிய பிரேக் எடுத்துக் கொண்டு தயாராகுகிறாராம் அவர். தன் கெரியரிலேயே 96 பட ரீமேக் கதாபாத்திரம் தான் மிகவும் கடினமானது என்று நினைக்கிறாராம் சமந்தா. படத்தை பார்ப்பவர்கள் இது த்ரிஷாவை காப்பியடித்தது போன்று இருக்கிறதே என்று கூறிவிடக் கூடாது என்பதற்காக மெனக்கெடுத்து வருகிறார்.

twitter

சமந்தா (samantha) ஏ மாய சேசாவே படம் மூலம் தான் தெலுங்கு திரையுலகில் அறிமுகம் ஆனார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தான் தெலுங்கில் சமந்தா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது கதாப்பாத்திரம் த்ரிஷாவை காப்பியடித்து போன்று இருக்க கூடாது என சமந்தா நினைக்கிறார். 96 படத்தை கன்னடத்தில் கணேஷ் மற்றும் பாவனாவை வைத்து ரீமேக் செய்தார்கள். 

ஆனால் தமிழ் அளவுக்கு அந்த படம் ஹிட்டாகவில்லை. படத்தை பார்த்தவர்களோ 96 படத்தை கண்டம் செய்துவிட்டதாக புலம்பினார்கள். இந்நிலையில் சமந்தா நடிப்பில் வெளியாகும் படம் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது. சமந்தாவின் கெரியர் சற்று நிதானமாக சென்று கொண்டிருக்கிறது. தனக்கு திருமணமான பிறகு தன்னை வைத்து என்ன செய்வது என்று இயக்குநர்களுக்கு தெரியவில்லை என சமந்தா தெரிவித்தார்.

twitter

இந்நிலையில் இது தான் குழந்தை பெற சரியான நேரம் என்று சமந்தா (samantha) முடிவு செய்துள்ளார். 96 பட ரீமேக்கை முடித்துக் கொண்டு குழந்தை பெற்று கொள்ளப் போகிறாராம் சமந்தா. குழந்தை பெற்று அது கொஞ்சம் வளரும் வரை பிரேக் எடுக்கப் போகிறாராம் என்று கூறியுள்ளார். இதனிடையே சமீபத்தில் சமந்தாவின் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவிடம் உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு நாக சைதன்யா, விரைவில் நடக்கும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். சமந்தாவுக்கு திருமணமானதில் இருந்தே அவரிடம் எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்று அடிக்கடி கேட்கப்பட்டது. அதற்கு அவரோ நானும், கணவரும் ஒரு நேரத்தை முடிவு செய்துள்ளோம். அப்பொழுது தான் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்றார். இந்நிலையில் அந்த நேரம் தற்போது வந்துவிட்டது என கூறியுள்ளார். இதனால் சமந்தா 96 படத்திற்கு பின்னர் சினிமாவிற்கு பிரேக் விடுவார் என எதிர்பார்கப்படுகிறது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.