அப்பா கண்ணத் தொற..அழகம் பெருமாள் வந்துருக்காரு..பொன்னியின் செல்வன்ல நீ வொர்க் பண்ணணுமாம்..

அப்பா கண்ணத் தொற..அழகம் பெருமாள் வந்துருக்காரு..பொன்னியின் செல்வன்ல நீ வொர்க் பண்ணணுமாம்..

உலகத் தமிழர்களின் பெருமையான அடையாளமாக இருப்பவர் இயக்குனர் மணிரத்னம். அவருடன் நீண்ட காலமாக நட்பில் இருப்பவர் அழகம் பெருமாள். இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக இணைய வந்தவர். பிற்காலத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இயக்குனர் மணிரத்னம் படங்களில் அழகம்பெருமாளுக்கென தனிப்பட்ட ஸ்பெஷல் கேரக்டர் ஒன்று எப்படியாவது அமைந்து விடும். அழகம் பெருமாள் அவர்களும் டும்டும்டும் ஜூட், உதயா போன்ற திரைப்படங்களை இயக்கியவர். அனைவரின் அன்பிற்கும் பாத்திரமான நடிகர் அழகம் பெருமாள் நேற்று முகநூலில் மிகவும் ஆழமான ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்

Youtube

தளபதி திரைப்படத்தில் ஆரம்பித்து இயக்குனர் மணிரத்னம் உடன் பல திரைப்படங்களில் பயணித்தவர் ப்ரொடக்ஷன் மேனேஜர் கணபதி (ganapathi). நான் உதவி இயக்குனராக இருப்பது முதலே என்னோடு நட்பில் இருப்பவர். கடந்த 16 நாட்களுக்கு முன்னர் பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்தவர்தான். அப்படியே கோமாவிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது.

நேற்றுதான் எனக்கு தகவல் தெரிந்தது. மருத்துவமனையில் இருந்து வீடு வந்தது முதல் இந்நேரம் வரை நான் எதை எதையோ பேசி கொண்டிருக்கிறேன். எனக்கே தெரிகிறது நான் நீண்ட நேரமாக முகநூலிலேயே இருக்கிறேன். என் துயரை மறக்கத்தான் நான் இங்கேயே இருக்கிறேன்.

Facebook

ஐசியுவில் இருந்த கணபதி அவர்களை பார்க்க அவரது மகன் என்னை அங்கே அழைத்து சென்றான். ஐசியூக்களில் வழக்கமாக நிலவும் அந்த அமைதியைக் குலைத்தபடி அவன் கத்தி சொல்கிறான்.

அப்பா கண்ண தொற... பெருமாள் சார் வந்திருக்காரு... அழகம்பெருமாள், பொன்னியின் செல்வன்ல நீ வொர்க் பண்ணனுமாம், உன்ன கூட்டிட்டு போக வந்திருக்காரு.

சினிமாவே தனது உலகம் என லட்சியத்துடன் வாழ்ந்த ப்ரொடக்ஷன் மானேஜர் கணபதிக்கு நிச்சயம் அது கேட்டிருக்கத்தான் வேண்டும். ஆனால் அவரிடம் அசைவில்லை.

சினிமா எனும் மாபெரும் திரைக்கு பின்னால் பல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஊடகம் எப்போதும் திரைக்கு முன்னால் இருக்கும் பிரபலங்களை மட்டுமே காட்டுகிறது. ஆனால் இப்படிப்பட்ட திறமையான பலரை அவர்கள் வெளியுலகுக்கு காட்டுவதில்லை.

 

 

சினிமாவில் பல வெற்றிகளைக் குவித்த மாபெரும் மனிதர்கள் பின்னால் கணபதியயை போன்ற ப்ரொடக்ஷன் மேனேஜர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இயக்குனர் மணிரத்னம் அவர்களின்  சினிமா பயணத்தில் கணபதி ஒரு மறக்க முடியாத அத்யாயம். ஆனால் சினிமா உலகம் இப்படிப்பட்ட லட்சியவாதிகளை மறந்து விடுகிறது என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ப்ரொடக்ஷன் மேனேஜர் கணபதி பிழைக்க வேண்டும் என்று அவர் பிரார்த்திக்கவும் சொல்லி இருந்தார். ஆனால் விநாயகரின் விருப்பம் வேறு மாதிரி இருக்கவே விநாயகர் சதுர்த்தி நன்னாளில் கணபதியின் ஆத்மாவை கணபதியே கைக்கொண்டார்.

திரு கணபதி அவர்களின் முகவரி நம்பர் 8, ராமகிருஷ்ணபுரம் 2ஆவது தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. இந்த நாளில் அவர் அங்கு இல்லை. இனிமேல் அவரது குடும்பத்தை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று யோசிக்காமல் அவரது நெருங்கிய நண்பர்கள் , சினிமா பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறார் அழகம் பெருமாள் sir.

 

Youtube

உண்மைதான் சினிமா எனும் மாயத்திரை பின்னே இருக்கும் பல திறமை வாய்ந்த கலைஞர்கள் மீது புகழ் வெளிச்சங்கள் படுவதே இல்லை.

மறைந்த ப்ரொடக்ஷன் மானேஜர் கணபதி அவர்களின் புகைப்படம் எனக்கு கிடைக்கவில்லை. அதற்காகவே முகநூல் மூலம் திரு. அழகம் பெருமாள் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

எந்த கர்வமும் இல்லாமல் திரு. கணபதி குடும்பத்தாரிடம் இருந்து புகைப்படம் பெற்று எனக்கு அனுப்பி வைத்தார். அவரது அந்த எளிமையான கர்வமற்ற மனமே அவரை மென்மேலும் புகழ்பெற செய்யும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மிக்க நன்றி அழகம் பெருமாள் சார்.

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                            

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.