மழைக்காலத்தில் சுற்றுலா! சற்று சுவரசியமன பயணமாக இருந்தாலும், நிச்சயம் உங்களுக்கு நல்ல நினைவுகளையும், புதுமையான அனுபவங்களையும் உண்டாக்கிக் கொடுக்கக் கூடிய ஒரு சுற்றுலாவாகத் தான் இது இருக்கும்.
மழைக்காலம் என்று வந்துவிட்டாலே, பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும், சாலைகள் சேதமடைந்திருக்கும், பல இடங்களில் போக்குவரத்து தாமதமாகும், சரியான தங்கும் வசதி கிடைக்காமல் போகலாம், என்று இன்னும் பல.
எனினும், இந்த சுற்றுலா ஒரு சுவாரசியமான சுற்றுலாவாக (tour) உங்களுக்கு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
pixabay
மழைக்கால சுற்றுலாவிற்கு உங்களை சரியான முறையில் தயார் செய்து கொள்ள வேண்டியது முக்கியம்,. இது பல இடையூறுகளுக்கு இடையில், நீங்கள் ஓரளவிர்க்காயினும் சௌகரியமாகவும், ஆரோக்கியமாகவும் உங்கள் சுற்றுலாவைத் தொடர உதவும்.
இந்த வகையில், இங்கே உங்களுக்காக மழைக்கால சுற்றுலாவிற்கு உங்களை தயார் செய்து கொள்ள சில பயனுள்ள குறிப்புகள்;
மழையில் உங்கள் உடைமைகள் நனையாமல் தயார் செய்ய வேண்டும் :
முடிந்த வரை வாட்டர் ப்ரூப் – அதாவது தண்ணீர் பட்டாலும், உள்ளே இருக்கும் பொருட்கள் நனையாமல் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ள பெட்டிகளை தேர்வு செய்ய வேண்டும். இந்த வாட்டர் ப்ரூப் பேட்டிகள், உங்களது அனைத்து பொருட்களையும், குறிப்பாக துணிகள், உணவு பொருட்கள், மற்றும் மின்பொருள் சாதனங்கள், ஆகியவற்றை பத்திரமாக தண்ணீரில் நனையாமல் பாதுகாக்கும்.
கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியவைகள்
வானிலை அறிக்கை:
உங்கள் பயணத்தைத் தொடங்கும் முன், வானிலை பற்றிய சில தகவல்களை சேகரித்துக் கொள்வது நல்லது. மேலும் அவ்வப்போது, வானிலை எப்படி இருக்கும் என்கின்ற தகவல்களும் உங்களுக்கு, மேற்கொண்டு பயணத்தை தொடரவும், பாதுகாப்பாக திட்டமிடவும் உதவியாக இருக்கும். அதனால், முடிந்த வரை வானிலையை பற்றிய சமீப தகவல்கள் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்குமாரு பார்த்துக் கொள்ளுங்கள்.
pixabay
நல்ல சலுகைகளை தேடுங்கள்:
மழைக்காலங்களில் பொதுவாக அதிகம் சுற்றுலா (tour) பயணிகள் சுற்றுலா தளங்களுக்கு வர மாட்டார்கள். அதனால், சில சமயங்களில் தங்கும் விடுதி மற்றும் பயண சீட்டுகள் சலுகை விலைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், மழைக்காலத்தில், சற்று லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், தங்கும் விடுதிகளும், போக்குவரத்து நிறுவனங்களும் அதிக விலைக்கு தங்கும் அறை மற்றும் பயண சீட்டை விற்க நேரிடும். அதனால், சரியான சலுகைகளை தேர்வு செய்து, உங்கள் சேமிப்பை அதிகரித்துக் கொள்ளலாம்.
குடை மற்றும் ரெயின் கோட்டுகள்:
நீங்கள் பயணம் செய்யப்போவது மழைக்காலம் என்பதால், எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம். அதனால், நீங்கள் எப்போதும் குடை மற்றும் ரெயின் கோட்டுகளுடன் தயாராக உங்களை வைத்துக் கொள்வது முக்கியம். இதனால் எதிர்பாராத மழையிலும் நனையாமல் தப்பிக்கலாம்.
நறுமண பொருளான இஞ்சியின் மருத்துவ குணங்கள் மற்றும் அழகு பலன்கள்!
எப்போதும் உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள்:
மழைக்காலத்தில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால், முடிந்த வரை உங்களை எப்போதும் உலர்வாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மேலும் நீங்கள் நனைந்து விட்டால், உங்கள் ஆடைகள் உலர்ந்து காய பல நாட்கள் கூட எடுக்கலாம். இதனால் உங்களுக்கு போதுமான ஆடைகள் இல்லாமலும் போகலாம்.
தாமதங்களுக்கு தயாராகுங்கள்:
மழைக்காலத்தில் உங்களால் சரியான நேரத்தில் திட்டமிட்டப்படி ஒரு இடத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். அதிலும் நீங்கள் புதிதாக செல்லும் அந்த சுற்றுலா (tour) தலத்தில் எப்படி சாலைகளும், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் தூரமும் இருக்கும் என்று தெரியாது. அதனால், சில நேரங்களில் மழை அதிகமாக இருக்கும் போது தாமதங்கள் ஆகலாம். அதற்கு உங்களை தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
pixabay
பாதுகாப்பான உணவு:
ஒரு புதிய இடத்திற்கு நீங்கள் செல்லும் போது, அங்கு இருக்கும் உணவு முறை பற்றி உங்களுக்கு முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் சில உணவுகள் உங்களுக்கு மிகவும் புதுமையாக இருக்கலாம். அப்படி எதையாவது நீங்கள் பார்த்து அதை உண்ண விரும்பினால், அது உங்களுக்கு நல்ல ஜீரனமாகுமா என்றும், வேறு எந்த உபாதைகளையும் உங்களுக்கு கொடுத்து விடாது என்பதையும் உறுதி செய்து, அதன் பின் உண்பது நல்லது. முடிந்த வரை வீட்டு உணவுகளை முடிந்த வரை, எடுத்து செல்வது நல்லது.
இவை மட்டுமல்லாது, நீங்கள் தேவையான பணம், தேவையான இதர பொருட்கள் மற்றும் சில அடிப்படை முதலுதவி மருந்துகளை உங்களுடன் எடுத்து செல்ல வேண்டியதும் அவசியம். இது உங்களுக்கு சில எதிர்பாராத தருணங்களில் உதவியாக இருக்கும். மேலும் உங்கள் சிரமங்களையும் குறைக்கும்.
பூக்களை பயன்படுத்தி சருமத்தை பாதுகாப்பது எப்படி : தெரிந்து கொள்ளுங்கள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.