தமிழ்நாட்டில் மழைக் காலதத்தில் சுற்றுலா செல்ல சில இடங்கள்!

தமிழ்நாட்டில் மழைக் காலதத்தில் சுற்றுலா செல்ல சில இடங்கள்!

பொதுவாக அனைவரும் தங்கள் குடும்பத்தினர்களுடன் அல்லது நண்பர்களுடன்  கோடை காலங்களில் சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். ஆனால், சற்று மாறாக, மழைக் காலங்களிலும் (rain) நீங்கள் சுற்றுலா செல்ல சில இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தையும், ஞாபகங்களையும் உங்களுக்குத் தரும்.

இந்த ஆண்டு நீங்கள் மழை காலத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றீர்களா?

அப்படியென்றால், உங்களுக்காக இங்கே சில சுவாரசியமான இடங்கள்:

pixabay

கன்னியாகுமரி :

இந்த இடத்திற்கு ஒரு தனித்துவம் உள்ளது. இந்திய பெருங்கல்டலும், வங்காள விரிகுடாவும், அரேபியக் கடலும் சங்கமிக்கும், முக்கடல் சங்கமம் இந்த கன்யாகுமாரி. இது மட்டுமல்லாது, இந்த இடத்தில் மட்டும் தான் சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் ஒரே இடத்தில் காண முடியும்.  கோடை காலத்தில் இங்கு பிற நகரங்கள் போல வெப்பம் அதிகமாக இருந்தாலும், மழை காலத்தில் இங்கு நீங்கள் சுற்றுலா செல்ல ஏற்றதாக இருக்கும். மழைக் காலத்தில் இங்கு வெப்பம் மிதமாகவும், நல்ல சீர்தோஷ நிலையம் நிலவும்.

அதனால் வெயிலும் தாக்கம் தெரியாமல் நீங்கள் அனைத்து இடங்களையும் இங்கு சுற்றிப் பார்க்கலாம். மேலும், இங்கு பிரம்மாண்டமாய் நிற்கும் திருவள்ளுவர், சிலை, கரையில் இருந்து சுமார் சற்று தள்ளி கடலில் இருக்கும் விவேகானந்தர் மடம் மற்றும் இங்கு வீற்றி இருக்கும் கன்யாகுமாரி அம்மனும், அவளது மூக்கில் தொடர்ந்து தொழித்துக் கொண்டிருக்கும் மூக்கத்தியும், ஒரு ஈர்ப்பை உண்டாகுகின்றது. இந்த மழைக் காலத்தில் நீங்கள் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த சுற்றுலா தளமாக இருக்கும்.

அழகை அதிகரிக்க இந்த ஒரு வாதுமைப் பழத்தை சாப்பிட்டால் போதும்!

twitter

குற்றாலம்:

பல அருவிகள் ஒன்று கூடி நீரை பொலிந்து கொண்டிருக்கும், ஒரு அறிய நீர்வீல்சிகள் நிறைந்த இடம், குற்றாலம். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இது அமைந்துள்ளது. அரசு மழை காலத்தில் (rain) இங்கு அருவிகளில் அதிக அளவு நீர் வரத்து இருக்கும் போது குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்றாலும், இந்த நீர்வீல்சிகளை தொடர்ந்து ஓடும் ஆறு மற்றும் அது சார்ந்த கரை ஓரங்களில் நீங்கள் சற்று இளைப்பாறலாம்.

எனினும், மழை காலங்களில் இந்த அருவிகளின் அழகு உங்கள் கற்பனைக்கும் எட்டாத உயரத்தில் இருக்கும். ரம்மியமான குளிர் நிறைந்த சூழலில், இந்த இயற்க்கை அழகை ரசிக்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, குண்டர் ஆணை, குற்றாலம் இகோ பார்க் போன்றவை மக்களால் அதிகம் விரும்பி பார்க்கக்கூடிய இடங்களாக உள்ளன.

நமது அன்றாட வாழ்வில் தண்ணீரை எப்படி சேமிப்பது மற்றும் தண்ணீரை சேமிப்பதின் முக்கியத்துவம்!

twitter

ஏற்காடு:

இது மற்றுமொரு அழகான மழைப் (rain) பிரதேசம். இங்கு பொதுவாக கோடை காலங்களில் மக்கள் சுற்றுலா செல்ல விரும்பினாலும், மழை காலம் மற்றும் குளிர் காலங்களில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும். இயற்கையை ரசிப்பவர்கள், இங்கு நிச்சயம் விரும்பி செல்வார்கள். ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை செல்ல, இது ஏற்ற இடமாக இருக்கும். இங்கு இருக்கும் அடர்ந்த காடுகளில், மான், நரி, காட்டெருமை போன்ற விலங்குகள் அதிகம் இருக்கும். இங்கு பல அற்புதமான சுற்றுலா தளங்கள் உள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உங்கள் சுற்றுலாவில் கொடுக்கும்.

வாழை நாரில் இருந்து நாப்கின் தயாரித்து ஐ.ஐ.டி மாணவர்கள் சாதனை : 120 முறை பயன்படுத்தலாம்!

ராமேஸ்வரம்:

மழைக் காலத்தில் சுற்றுலா செல்ல நீங்கள் தேர்ந்தெடுக்க மற்றுமொரு சுவாரசியமான இடமாக, ராமேஸ்வரம் இருக்கும். மழைக் காலத்தில் இங்கு நீங்கள் கடலின் அழகை ரசிக்கவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் புயல் தாக்கும் தருணங்களில், அரசு ஒரு சில இடங்களுக்கு, குறிப்பாக தனுஷ்கோடி, போன்ற முற்றிலும் கடலால் சூழப்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. எனினும், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மற்றும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை இது ஒரு சிறப்பான மழைக் கால சுற்றுலா தளமாக இருக்கும்.

மேலே குறிப்பிடப் பட்டுள்ள இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடனும், நண்பர்களுடனும், மழைகாலத்தில் சுற்றுலா செல்ல மேலும் பல இடங்கள் உள்ளன. அவை:

  • சென்னை – தலைநகரம்
  • திருச்சி
  • தஞ்சாவூர்
  • மதுரை
  • வேளாங்கண்ணி மேலும் பல


மழைக் காலங்களில் உங்கள் பயணத்தை திட்டமிட்டு, புயல் அபாயம் இல்லாத நாட்களை, வானிலை முன்னறிக்கை மூலம் தெரிந்து கொண்டு திட்டமிடலாம். அப்படி செய்தால் மழையின் பாதிப்பு இல்லாமலும், மிதமான மழையில் இரசித்த வண்ணம் உங்கள் சுற்றுலாவில் தொடர்ந்து பயணித்தும் ஒரு புதுமையான அனுபவத்தை உங்கள் வாழ்க்கையில் பெறலாம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.