ஓணம் பண்டிகை ஸ்பெஷல் ரெசிபிகள் : நாவூறும் உணவுகளை ஈசியாக செய்யலாம்!

ஓணம் பண்டிகை ஸ்பெஷல் ரெசிபிகள் : நாவூறும் உணவுகளை ஈசியாக செய்யலாம்!

ஓணம் பண்டிகையை (onam) முன்னிட்டு கேரளாவில் இருக்கும் அனைவரும் மிகவும் சுவையான உணவுகளை சமைத்து சாப்பிடுவர். அதிலும் ஓணம் பண்டிகை பத்து நாட்கள் நடைபெறுவதால் ஒவ்வொரு நாளும் அனைவரது வீடுகளிலும் விதவிதமான உணவுகளை சமைத்து உண்பர். ஓணம் ஸ்பெஷல் ரெசிபிகளை ஈஸியாக செய்வது குறித்து இங்கே காணலாம்.

youtube

அரிசி புட்டு

தேவையான பொருட்கள் : 

அரிசி மாவு - 4 கப், 
தேங்காய் துருவல் - 2 கப்,
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.  

செய்முறை : 

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். அதில் அரிசி மாவை போட்டு கலந்து கொள்ளவும். பின்னர் புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டவும். நீளமாக இருக்கும் குழாயில் முதலில் சிறிது புட்டு மாவு சிறிது போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை தொடர்ந்து செய்யவும். பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 5-6 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும்.

கேரளாவில் களைகட்டும் ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் கொண்டாடும் விதம்!

youtube

அடை பாயாசம்

தேவையான பொருட்கள் :

அரிசி அடை – 50 கிராம்
துருவிய வெல்லம் – 1 கப்
தேங்காய்ப் பால் – 2 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் –  1/2 டேபிள் ஸ்பூன்
சிறிதாக அரிந்த தேங்காய்த் துண்டுகள் – 1 கப்
முந்திரி பருப்பு – 10
திராட்சைப் பழம் – 10

செய்முறை:

முதலில் வெல்லத்தில் அரை கிண்ணம் நீர் ஊற்றி உருக விட்டு அரைத்துக் கொள்ளவும். அரிசி அடையை தேங்காய் பாலில் சிறு தீயில் பத்து நிமிடம் வேக விடவும். அதன் பின் உருக்கிய வெல்லத்தை சேர்த்து அடை குறுகி வரும் வரை கிளறவும்.  பின்னர் ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் போடவும். நெய்யில் தேங்காய் துண்டுகள், முந்திரி பருப்பு, திராட்சைப் பழம் இவற்றையும் வறுத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்ப் பாலை அடையில் ஊற்றி ஒரு கிளறு கிளறியவுடன் இறக்கிவிடவும். அதனுடன் வறுத்த தேங்காய்த் துண்டுகள், முந்திரி, திராட்சை போட்டால் அடை பாயாசம் தயார்.

youtube

அவியல்

தேவையான பொருட்கள் :

சௌசௌ -  1 கப், 
உருளைக்கிழங்கு - 1 கப்,
கேரட் - 1 கப், 
பூசணிக்காய் - 1 கப், 
வாழைக்காய் - 1 கப், 
வெங்காயம் - 2,
தேங்காய் - 1/2 கப்,
பச்சை மிளகாய் - 4,
தயிர் - 1/2 கப்,
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு. 

வீட்டிலேயே தலைமுடி நன்கு வளர எப்படி தைலம் செய்வது? பயனுள்ள குறிப்புகள்

செய்முறை :

காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து அனைத்து காய்கறிகளையும் போட்டு வேக வைக்கவும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் சிறிது உப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் அதில் தயிரை ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி விடவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த, பின் வெங்காயம் சேர்த்து வதக்கி அத்துடன் அந்த காய்கறி கலவையை ஊற்றி ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்.

youtube

உண்ணியப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
வாழைப்பழம் - 1
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் துண்டுகள் - சிறிது
நெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு வெல்ல நீர் ஊற்றி பிசைய வேண்டும். பின்பு அதில் ஏலக்காய் தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து மெல்லியதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் அத்துடன் சேர்த்து, ஓரளவு கொட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் மாவை அப்பங்களை போட்டு எடுத்தால் சுவையான கேரள ஸ்டைல் உண்ணியப்பம் ரெடி!  

youtube

இலை அடை

தேவையான பொருட்கள் : 

பலாப்பழ சுளைகள் - 2 கப்,
வெல்லம் - 2 கப்,
அரிசி மாவு - 2 கப்,
ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்,
நெய் - சிறிது,
துருவிய தேங்காய் - 2 கப்,
தண்ணீர் - 2 கப்,
வாழை இலை.

செய்முறை : 

மேல் மாவிற்கு...

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரிசி மாவை தூவிக் கிளறி விடவும். ஒட்டாத பதம் வந்ததும், கீழே இறக்கி ஒரு சொட்டு எண்ணெய் விட்டுப் பிசைந்து ஒரு ஈரத்துணியில் சுற்றி வைக்கவும்.

பூரணத்திற்கு...

பலாப்பழ சுளைகளை துண்டு துண்டாக வெட்டி இட்லிப் பானையில் வைத்து வேகவிட்டு, மிக்சியில் போட்டு மசித்துக் கொள்ளவும். வெல்லப் பாகு தயார் செய்து, அதனுடன் மசித்த பலாப்பழ துண்டு, துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். ஒன்று சேர்த்து உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி வைக்கவும். இப்போது இலையை சதுரங்களாக வெட்டி அதில் சிறிதளவு நெய் தடவி சிறிதளவு மாவை அதில் மெல்லியதாக தட்டவும். பின் ரெடியாக வைத்துள்ள பூரணத்தை அதில் வைத்து இலையுடன் சேர்த்து மடித்து மூடி, ஆவியில் வைத்து வேகவிடவும். சுடச்சுடப் பரிமாறவும்.

இளைய சமுதாயத்தைக் கவரும் டாட்டூக்கள்.. அழகும் ஆபத்தும்..

youtube

புளிசேரி

தேவையான பொருட்கள் : 

வெள்ளரிக்காய் - அரை கிலோ
தயிர் - 1 கப் 
தேங்காய் துருவல் - 1 கப் 
பச்சை மிளகாய் - 4 
சீரகம் - ஒரு ஸ்பூன்
பெருங்காயம் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு 
வெந்தயம் - கால் ஸ்பூன்

செய்முறை : 

முதலில் வெள்ளரிக்காய் துண்டு துண்டாக நறுக்கி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். மிக்சியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து கொள்ளவும். பிறகு காய் வெந்ததும் அதில் அரைத்த கலவையை சேர்த்துக் கலந்து ஒரு கொதி வந்ததும், தயிர் சேர்த்து கிளறவும். பின்னர் மற்றொரு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை இவற்றை தாளித்து அதிலேயே பெருங்காயத் தூள், இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள்  சேர்த்து இதனை காய் கலவையில் ஊற்றி விடவும். சுவையான புளிசேரி தயார்! 

மேலே குறிப்பிட்டுள்ள ரெசிபிகளை செய்து ஓணம் திருவிழாவை (onam) கொண்டாடுங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.