மினுமினுக்கும் முக வசீகரம் உங்களுக்கும் வேண்டுமா! இருக்கவே இருக்கிறது மினிமல் மேக்கப்!

மினுமினுக்கும் முக வசீகரம் உங்களுக்கும் வேண்டுமா! இருக்கவே இருக்கிறது மினிமல் மேக்கப்!

அளவுக்கு அதிகமான மேக்கப் உங்கள் உண்மையான அழகை மாற்றிக் காட்டி விடும். அதீத மேக்கப் அலங்காரங்கள் எல்லா நேரங்களிலும் தேவையற்றவையும் கூட. இயல்பான அழகிலும் நீங்கள் பொன்னென மின்ன இந்த மினிமல் மேக்கப் (minimal makeup) முறைகளை பயன்படுத்திப் பாருங்கள்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு

தேவையானவை

மாய்ச்சுரைசர் , லிப் க்ளாஸ், டோனர், நியூட் ஐ ஷேடோ, பேலட் மற்றும் காஜல்.

மேலே கண்ட அழகு பொருள்கள் உங்களிடம் வழக்கமாக இருக்கும் பொருள்கள் தான். அதனைக் கொண்டே ஒரு அழகான மினிமல் மேக்கப்பை நீங்கள் செய்தால் காண்பவர் மனம் கவரும் தோற்றம் உங்களுடையதாகும்.

ஃபவுண்டேஷனுக்கு பதிலாக மாய்ச்சுரைஸரில் இருந்து ஆரம்பியுங்கள். முகத்தில் வழக்கமான அளவு மாய்ச்சுரைஸைரை தடவவும். அதன் பின் சில நொடிகள் உலர விடுங்கள். இப்போது உங்கள் உதட்டிற்கான லிப் கிளாஸை எடுத்துக் கொள்ளுங்கள். ப்ரவுன், பிங்க், நியூட் அல்லது ப்ளஷ் கலரை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.                        

கண்ணிமைகளை அழகாக்க நியூட் நிற ஐ ஷேடோக்களை பயன்படுத்துங்கள். உங்கள் கண்கள் கவர்ச்சிகரமாக மாற கொஞ்சம் காஜலை தடவுங்கள். கண்கருவளையங்களை கன்சீலர் கொண்டு மறையுங்கள். இப்படி மேக்கப் செய்தால் தினமும் உங்கள் அழகை காண அலுவலகத்தில் சில ரசிகர்கள் உருவாகலாம்.                              

Pixabay

நைட் அவுட்

இன்றைய கால பெண்களுக்கு நைட் அவுட் என்பது சாதாரணமான ஒன்று தான். இந்த நேரங்களில் அளவுக்கதிகமான மேக்கப் உங்கள் அழகை துவம்சம் செய்ய நேரிடும். ஆகவே மினிமல் மேக்கப்பை பயன்படுத்துங்கள்.

தேவையானவை                

லிப் டிண்ட், ஹைலைட்டர், சிவப்பு ஐ ஷேடோ, மஸ்காரா, ஐ லைனர்

பலவிஷயங்களுக்கு பயன்படும் மல்டிடாஷ்கரை நீங்கள் இதற்கும் பயன்படுத்தலாம். உங்கள் உதடுகளுக்கும் கன்னங்களுக்கும் வரையப்படும் நிறம் உங்களை பார்ட்டிகளில் பளபளக்க வைக்கலாம். பகல் பொழுதில் பயன்படுத்தியதை திரும்ப பயன்படுத்தி உங்கள் அழகை மேம்படுத்துங்கள். ஷிம்மரை கன்னங்கள் மற்றும் புருவ மேடுகளில் சரியாக பயன்படுத்தினால் பூமியில் இரவில் ஜொலிக்கும் நட்சத்திரம் நீங்கள் மட்டும்தான்.

Pixabay

ட்ராவலர் கிட்

தேவையானவை                                             

டின்டேட் லிப் பாம், வாட்டர் ப்ரூப் மஸ்காரா, ஃபேஸ் மிஸ்ட் மற்றும் வெட் வைப்ஸ்.

பயண நேரங்களில் பகட்டான அலங்காரம் உங்களை மற்றவரிடம் இருந்து தள்ளி வைக்கலாம். ஒரு எளிமையான மேக்கப் உங்கள் யதார்த்த மனதை எடுத்துரைக்கட்டும். உங்கள் முகத்திற்கு ஈரப்பத்தினை தக்க வைக்கும் ஃபேஸ் மிஸ்ட் உங்கள் கன்னங்களை அழகாக்கி காட்டும். உடன் இருக்கும் மேக்கப் வைப்ஸ் பயன்படுத்தி அவ்வப்போது தூசிகளை துடைத்து லிப்பாம் தடவினால் போதுமானது.

 

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                               

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!