டல்லான உங்கள் முகத்திற்கு தேவையான பேஸ் பாக்கை உங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளுங்கள்

டல்லான உங்கள் முகத்திற்கு தேவையான பேஸ் பாக்கை உங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளுங்கள்

இன்று அனைத்து வயதினரும், குருப்பாக இளம் வயது பெண்கள் நல்ல முக அழகோடு இருக்க வேண்டும் என்று நினைகின்றனர். இது இயல்பே!

ஆனால் அழகை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பல நூருகளிலும், ஆயிரங்களிலும் செலவு செய்து, இராசயணக் கலவைகளை முகத்திலும், தலைமுடியிலும் பூசிக் கொண்டு, தங்கள் ஆரோக்கியத்தை தாங்களே கெடுத்துக் கொள்கின்றனர். மேலும் அழகு நிலையங்களில் செய்யப்படும் இத்தகைய பேசியல், அதிக நாட்களுக்கு பலன் தராது. ஒரு காலகட்டத்தில், உங்களது இளம் வயதிலேயே நீங்கள் உங்களது இயற்கையான அழகை இழந்து விடும் நிலையை இந்த இரசாயனங்கள் ஏற்படுத்தி விடக் கூடும்.

எனினும், இனி இந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்!

நீங்கள் எளிய முறையில் உங்கள் வீட்டிலேயே பேஸ் பாக் செய்ய, இங்கே உங்களுக்காக படிப்படியான செயல் முறை குறிப்புகள்(facial): 

 1. முகம் பொலிவு பெற: உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள், தழும்புகள் மற்றும் கரைகள் நீங்கி நல்ல பொலிவு பெற வேண்டுமா? அப்படியானால், இந்த பேஸ் பாக் உங்களுக்கானது:

தேவையான பொருட்கள்

 • சிறிது கடலை மாவு
 • ஒரு தேக்கரண்டி தேன்
 • சிறிது எலுமிச்சை பல சாறு
 • சிறிது பால் அல்லது தயிர்

 செய்முறை

 • முதலில் சிறிது எலுமிச்சை பழ சாற்றை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள்
 • பின் மிதமான சூடு உள்ள தண்ணீரில் ஒரு துணியை பிழிந்து எடுத்துக் கொண்டு முகத்தை நன்கு துடைத்து விடுங்கள்
 • பின் தேன் சிறிதளவு எடுத்து முகத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்யுங்கள்
 • இதன் தொடர்தியாக சிறிது கடலை மாவு மற்றும் பால் கலந்து பசை போல கலந்து முகத்தில் தடவ வேண்டும்
 • சிறிது நேரம் மசாஜ் செய்து, அப்படியா 2௦ நிமிடங்கள் விட்டு விட வேண்டும்
 • பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
 • இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால், முகம் நல்ல பொலிவைப் பெரும்
 • கடலை மாவுடன் தேவைப்பட்டால் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம். நல்ல பலனைத் தரும்
pixabay

 1. நல்ல நிறம் பெற(facial): அனைவருக்கும் சருமம் நல்ல நிறத்தோடு இருக்க வேண்டும் என்கின்ற ஆசை இருக்கும். இது குறிப்பாக பெண்களிடையே அதிகம் உள்ளது. இதற்காக பல இராசாயனங்கள் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அது எதிர் பார்த்த பலனை தருவதில்லை. எனினும், நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்து பயன்படுத்த இங்கே ஒரு குறிப்பு:

தேவையான பொருட்கள்

 • முல்தானி மட்டி
 • நன்கு பழுத்த தக்காளிப் பழம்
 • பச்சை அரிசி மாவு
 • பச்சை பால்
 • பன்னீர்

செய்முறை

 • முதலில் பன்னீர் சிறிதளவு எடுத்துக் கொண்டு ஒரு பஞ்சால் நனைத்து முகத்தில் தேய்ந்து நன்கு துடைக்க வேண்டும். இது முகத்தில் இருக்கும் அழுக்கை போக்கி சுத்தம் செய்து விடும்
 • அதன் பின் சிறிது நன்கு பழுத்த தக்காளி பழத்தை எடுத்து நன்கு முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படியே சிறிது நேரம் விட்டு விடவும். இதனுடன் தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை பழ சாற்றை சேர்த்து தேய்க்கலாம். பருக்கள் அகலும்
 • பின் சிறிது முல்தானி மட்டி, சிறிது பச்சை அரிசி மாவு மற்றும் பால், ஆகியவறை நன்கு கலந்து பசை போல செய்து கொள்ள வேண்டும்
 • இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
 • அப்படியே 2௦ நிமிடங்கள் விட்டு விட வேண்டும்
 • பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
 • இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் கரும் வளையங்கள், மெல்லிய கோடு மற்றும் சுர்க்கங்கள் மறைந்து, அழகான இளமையான மற்றும் சிவப்பான சருமம் கிடைக்கும்.

உங்கள் வீட்டில் உங்களுக்கு எளிமையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி நீங்கள் பேஸ் பாக் செய்து மேலும் பல பலன்களைப் பெறலாம். இதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் நீங்கள் வீட்டிலேயே தயார் செய்வதால், உங்களுக்கு எப்போது நேரம் கிடைகின்றதோ அப்போதெல்லாம் செய்து பயன் பெறலாம். நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும். 

shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம் , இந்தி , தமிழ் , தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !

செய்தி செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shop ல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.