போட்டியாளர்கள் சித்தரவதை..தற்கொலை முயற்சிக்கு இவர்கள் தான் காரணம் : மனம் திறந்த மதுமிதா!

போட்டியாளர்கள் சித்தரவதை..தற்கொலை முயற்சிக்கு இவர்கள் தான் காரணம் :  மனம் திறந்த மதுமிதா!

கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 77 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்த அறிவிப்பில், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது. 

twitter

இதனை தொடர்ந்து  விஜய் டிவி நிர்வாகம் கடந்த மாதம் ஆகஸ்ட் 21ம் தேதி நடிகை மதுமிதா சம்பள பாக்கியை கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகாரளித்தது. இந்த தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து மதுமிதா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார். அதில், தன் மீது விஜய் டிவி பொய் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். 

பின்னர் கடந்த 4ம் தேதி ஹலோ ஆப் டாஸ்க்கின் போது சக போட்டியாளர்கள் தன்னைக் கொடுமைப்படுத்தினர். இதுகுறித்து விஜய் டிவி நிர்வாகமும், நிகழ்ச்சி சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நசரத் பேட்டை காவல்நிலையத்தில் தபால் மூலமாக புகார் அளித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார்கள். 

twitter

விஜய் டிவி எனக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து, என்னைப் பற்றி தவறான விமர்சனங்களை பரப்புகிறது. எனவே அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுமிதா குறிப்பிட்டிருந்தார். தற்போது வரை மதுமிதா (madhumitha) எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் முதல் முறையாக இதுகுறித்து மதுமிதா  மனம் திறந்து பேசியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துங்கள் அதை ஹலோ எப்.எம்மில் பதிவிடப்போகிறோம் சொன்னார்கள். இதனைதொடர்ந்து சுதந்திர தினம் அன்று தமிழ்நாட்டில் மழை இல்லாத ஆதங்கத்தில் நான் ஒரு வரி கவிதை சொன்னேன். " வருண பகவானும் கர்நாடகாவை சேர்த்தவரோ, மறை வடிவில் கூட மழை தர மறுக்கிறார்" என்று நான் கூறினேன். 

இது எந்த இடத்தில் அவர்களுக்கு அரசியலாக தெரிந்தது என எனக்கு விளங்கவில்லை. தமிழகத்தில் மழை இல்லை, தினமும் நான் மழை வர வேண்டும் என சுலோகம் கூறி சாமியை வணங்குகிறேன். அதனால் என் கருத்தை நான் தெரிவித்தேன். இதில் எங்கும் அரசியல் இல்லை, ஆனால் அதை முற்றிலும் அரசியல் ஆக்கி வேறு கோணத்தின் எடுத்து சென்றனர். 

twitter

மேலும் என்னை கிண்டல் செய்து நகைத்தனர். பின்னர் அரை மணி நேரத்தில் பிக் பாஸிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நீங்கள் பேசிய விஷயம் ஒளிபரப்பபடாது என்று குறிப்பிட்டிருந்தது. அதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் 8 பெரும் மேலும் கிண்டல் செய்தனர். இதனால் நான் என்ன செய்கின்றேன் என்பதை எனக்கே புரியாத வகையில் அங்கிருந்தவர்கள் மாற்றிவிட்டனர். 

என் ஊருக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி மட்டுமே நான் பேசினேன். நம் ஊரில் உள்ள பிரச்னையை பேசும்போது கூட சிலர் கேங்காக ராக்கிங் செய்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமாக இருந்ததால் கிடைத்த பரிசுதான் நான் மற்ற போட்டியாளர்களிடம் இருந்து தனித்து விடப்பட்டிருந்தேன். நான் தமிழ் பெண் என்று கூறிய போது கூட ஷெரின் தான் கலாச்சாரம் குறித்து பிரச்சனையை எழுப்பினார்.

அதே போல தற்போது இந்த பிரச்சனையின் போதும் சேரன், கஸ்தூரி தவிர மற்ற போட்டியாளர்கள் தண்ணீர் பிரச்னை குறித்து நான் பேசியதை விமர்சித்தனர். அதை பொறுக்க முடியாமல் நான் கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்று கூறி கண்கலங்கினார் மதுமிதா. நான் தற்கொலை முயற்சி எடுத்தபோது என்னை கஸ்தூரியும், சேரனும் தான் காப்பாற்ற முயன்றார்கள்.

twitter

மற்றவர்கள் ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் அதை கிண்டலாக பார்த்து சிரித்தது வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைக்கப்பட்ட விஷயங்களுக்காக கமல்ஹாசன் குரல் கொடுக்க வேண்டும் என்றும், 40 நிமிட எபிசோடை மட்டும் பார்த்து கமல் பேசாமல் வீட்டில் 24 மணி நேரம் என்ன நடக்கிறது என்பதை கமல் கண்காணிக்க வேண்டும் என்றும்  நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மட்டுமல்லாமல், மக்கள் பிரதிநிதியாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராகவும் மக்கள் பார்க்கிறார்கள். அந்த பொறுப்புடன் அவர் நடந்து கொள்ளவேண்டும்" என நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எனக்கு வர வேண்டிய சம்பளம் விஜய் டிவி கொடுத்துவிட்டது என்று மதுமிதா (madhumitha) கூறியுள்ளார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.