பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் துன்புறுத்தி வெளியேற்றினர் : மதுமிதா புகார்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் துன்புறுத்தி வெளியேற்றினர் : மதுமிதா புகார்!

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் மற்ற போட்டியல்களால் நாமினேட் செய்யப்படும் நபர்களால் ஒருவர் வெளியேற்றப்படுவர். தற்போது 70 நாட்களை கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், லோஸ்லியா, தர்ஷன், ஷெரின், முகென், சாண்டி, சேரன், வனிதா என்று 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். 

இந்த நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து, தனது காமெடியான நடிப்பால் போட்டியாளர்களின் அன்பைப் பெற்று வந்த மதுமிதா (madhumitha) ஒரு கட்டத்தில் போட்டியாளர்களால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து தன்னை வெளியேற்றிவிடுமாறு பிக் பாஸிடம் கேட்டார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தார். எனினும் வனிதா, அபிராமி, ஷெரின், சாக்‌ஷி, ரேஷ்மா ஆகியோர் கூட்டணியாக இருக்கும் போது அவர்களால் டார்க்கெட் செய்யப்பட்டு வந்தார்.

twitter

தமிழ் பெண்கள் கலாச்சாரம், ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற பல்வேறு கருத்துக்களை பிக்பாஸ் வீட்டுக்குள் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதனால் பிக் பாஸ் வீட்டில் மதுமிதா (madhumitha) தனித்தே காணப்பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 54வது நாளில் பிக் பாஸ் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி மதுமிதா வெளியேற்றப்படுவதாக திடீரென அறிவிப்பு வெளியானது. 

தனது கருத்தை நிலை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மதுமிதா நடந்து கொண்டதால் அவர் வெளியேற்றப்படுகிறார் என கமல் அறிவித்தார். எனினும் தெளிவான காரணங்கள் கூறப்படவில்லை. ஆனால் அவர் வெளியேறும் போது கையில் கட்டுப்போட்டிருந்த நிலையில் அது பரபரப்பாக பேசப்பட்டது. காவேரி தண்ணீர் பிரச்னை குறித்த வாக்குவாதத்தில் ஷெரின் உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் உடன் அவர் வாக்குவாதம் செய்ததாகவும், அதில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. 

twitter

இதையடுத்து வெளியேற்றப்பட்ட மதுமிதா மீது காவல் நிலையத்தில் விஜய் டிவி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியேறிய போது ஒப்பந்தம் படி ஏற்கனவே அவருக்கு ரூ. 11.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையான ரூ. 80 ஆயிரத்துடன், 42 நாட்களுக்கான பாக்கி பணம் திருப்பித் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதற்கு ஒப்புக்கொண்ட மதுமிதா(madhumitha), கடந்த 19ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பியுள்ள வாட்ஸ் ஆப் மெசேஜில், நிலுவைத் தொகையை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்திகள் வெளியான நிலையில், இந்த புகாருக்கு மதுமிதா மறுப்பு தெரிவித்திருந்தார். 

twitter

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு தான் எந்தவித தற்கொலை மிரட்டலும் விடவில்லை. என் மீது விஜய் டிவி கொடுத்துள்ள புகார் பொய்யானது என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான இன்வாய்ஸ் பில்லை என் கணவர் கொடுத்துவிட்டார். ஆனால் என் மீது தொலைக்காட்சி நிர்வாகம் எதற்காக பொய் புகார் கொடுக்க வேண்டும் என்பது புரியவில்லை. இந்த விவகாரத்தை விஜய் டிவி நிர்வாகமும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசனும் பேசி தீர்வு காண வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மனதளவில் மிகுந்த அழுத்தத்தில் உள்ளேன் என்று மதுமிதா கூறி இருந்தார். 

twitter

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்போது சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள நசரத்பேட்டை காவல் நிலையத்தில், தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 54வது நாளில் விதிமுறைகளை மீறியதாக போட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக தான் என்னை வெளியேற்றியதாக புகார் அளித்துள்ளார். இது குறித்து கமல் ஹாசன் கூட கண்டிக்கவில்லை. 

நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனமும், தொலைக்காட்சியும் தனக்கு நிறையக் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், இவர்கள் இனிமேலும் தன்னைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பக்கூடாது, விமர்சனம் செய்யக்கூடாது என தபால் மூலம் மதுமிதா புகார் அளித்துள்ளார். இதுவரை விஜய் டிவிக்கும், மதுமிதாவுக்கும் இடையே நடந்து வந்த பிரச்சினையில் தற்போது கமலும் இழுக்கப்பட்டுள்ளார். 

போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் கமலோ அல்லது அவர் சார்பில் வழக்கறிஞரோ நிச்சயம் விளக்கம் அளித்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து அவர் தெரிவித்தே ஆக வேண்டும். எனவே மதிமிதாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடந்தது என விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.