ராசிபலனை நம்புகிறவர்களுக்கான பதிவு இது என்பதால் அதனைப் பற்றி அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இருக்காது என நான் நம்புகிறேன். நாம் பிறந்த ராசிக்குப் பின்னால் பல விஷயங்கள் உள்ளன. அதனால்தானோ என்னவோ கோயில்களில் அர்ச்சனை செய்யும்போதும் கூட ராசி நட்சத்திர சொல்லித்தான் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது.
நமக்கென எழுதப்பட்ட விதியின் அடிப்படையில்தான் நாம் நமக்கான நட்சத்திரம் மற்றும் ராசிகளில் பிறக்கிறோம். நமது பூர்வ புண்ணியங்களின் அடிப்படை நாம் செய்த கர்மாக்களுக்கான வினை எல்லாமே இதில் இணைகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணநலன்கள் இப்படித்தான் இருக்கும் என்பது உண்மையாக இருந்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசிகாரர்களின் அந்தரங்கம் (secret love) இப்படித்தான் இருக்கும் என்கிற கணிப்பு இருக்கிறது.
உங்கள் ராசியின்படி இது உங்கள் திறனாக இருக்கலாம்!!
Youtube
மேஷம்
காதலில் இவர்கள் முதன்மையானவர்கள். நாயகன் போன்றவர்கள். ஆனாலும் இவர்களை திருப்திபடுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. எதிலும் விருப்பம் இல்லாமலும் இருப்பார்கள். இவர்கள் எண்ணம் காதலிக்க வேண்டாம் என்று கூறினாலும் செய்கை காதலை நோக்கியே இருக்கும்.
ரிஷபம்
தாங்கள் விரும்பும் நபரை எளிதாக கவர்ந்து அவர்களை காதலில் விழ வைப்பதில் இவர்கள் கில்லாடிகள். காதலில் தேர்ந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். அதே சமயம் இவர்கள் காதல் உண்மையானது. தூய்மையானது. தாம்பத்ய உறவிலும் மேம்பட்டவர்கள்.
மிதுனம்
இந்த ராசிக்காரர்கள் பொதுவெளியில் பிரபலமாக இருந்தால் அவருக்கு பல ரசிக ரசிகைகள் குவிவார்கள். தன்னை முதலில் நேசிக்கும் குணம் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாலின காதல் வெகு சீக்கிரம் குறைந்து போகும்.
கடகம்
பெரியவர்கள் மீது மரியாதை காட்டும் கடக ராசிக்காரர்களுக்கு காதல் என்பது அவ்வளவு சீக்கிரம் ஒத்து வராது. உணவையும் தாம்பத்யத்தையும் ஒன்றாகவே பார்ப்பார்கள். இவர்களைக் காதலிப்பவர்கள் தங்கள் சுயதன்மானம் மற்றும் இயல்பை இழக்க வேண்டி வரும். பெரும்பாலும் இவர்கள் காதல் தோல்வியில் முடியும்.
Youtube
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் காதலில் சிறந்து விளங்கினாலும் இவர்கள் காதலில் ஒரு உண்மை இருக்காது. நல்ல காதலராக இருக்க மாட்டார்கள்.பல்வேறு உறவுகள் இவர்களுக்கு அவசியப்படும். ஒருவர் மாற்றி இன்னொருவர் என காதலை மரமாக்கி தாவிக் கொண்டே இருப்பார்கள். சரி தவறு தெரிந்தாலும் தவரையே செய்வார்கள். காமம் அதிகம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் காதல் வியாபாரத்தில் கெட்டிக்காரர்கள். கொடுக்கல் வாங்கல்களில் சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அடுத்தவர்களின் காதலை எடுத்துக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். உடல் ரீதியான இவர்கள் காதல் வயதான காலத்தில் வலியால் வருந்த வைக்கும்.
துலாம்
யாருக்கும் கிடைக்காத பல பயங்கர அனுபவங்களை இவர்கள் எதிர்கொள்வார்கள். மற்றவர்களை இவர்கள் ஈர்ப்பது இவர்களின் ராசிக்கான இயல்பே தவிர இவர்கள் இயல்பல்ல, அதனால் பல பேரிடம் ஏமாற்றப்படுவார்கள். காதல் இவர்களுக்கு பிரியமான வார்த்தை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்தால் அது தோல்வியில் முடியலாம்.
விருச்சிகம்
இவர்கள் தான் காதலிப்பதை விட தான் காதலிக்கப்படுவதையே விரும்புவார்கள். பெண்களை பார்ப்பது தவிர்த்து பெண்கள் நம்மை கவனிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் செய்வார்கள். வயதாக வயதாக இவர்களின் காதல் ஏக்கம் அதிகரிக்கும். ஆனாலும் காதல் என்பது இவர்களுக்கு தூண்டில் முள் தான்.
தனுசு
தங்கள் காதலை தாங்களே வெற்றியடைய வைத்துக் கொள்ளும் அளவிற்கு திறமைசாலிகள் தனுசு ராசிக்கார்கள். காதலிப்பதிலேயே தங்கள் ஆயுளை செலவழிப்பார்கள். ஒரு நேரம் அமைதி ஒரு நேரம் ஆக்ரோஷம் என இவர்கள் எண்ணங்கள் மாறும். இவரை போலவே காதலிக்கும் நபர் கிடைக்காவிட்டால் கஷ்டம்தான்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சாப்பிடாமல் தூங்காமல் கூட இருந்து விடுவார்கள் ஆனால் காதலிக்காமல் இருக்க இவர்களால் முடியாது. இவர்கள் காதல் தவறாக இருக்காது. ஆத்மார்த்தமாக இருக்கும். அதே சமயம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த தயங்குவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு காதல் என்பது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு போல. அதனை அவ்வவ்போது அனுபவித்து விட்டு வாழ்க்கையில் வேறு வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள். இவரைக் காதலிப்பவர்களுக்கு சரியான மரியாதை இருக்காது. ஒரே சமயத்தில் பலரைக் காதலித்து காமம் செய்வதில் கில்லாடிகள். மாட்டிக் கொண்டால் உறவை முறிப்பார்களே தவிர தங்கள் தவறை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். இவர்கள் ரகசியம் ஒரு நாள் வெளிப்பட்டு பெரும் அவமானத்தை சந்திப்பார்கள்.
மீனம்
மீனா ராசிக்காரர்களுக்கு தாம்பத்யத்தில் விருப்பம் அதிகமாக இருக்கும். இவர்களை நேசிப்பவர்களைத்தான் இவர்களும் நேசிப்பார்கள். தன்னுடைய ஆசையை நிறைவேற்றி கொள்ள எதுவும் செய்ய துணிந்தவர்கள். இவர்களது அந்தரங்க வாழ்க்கை எப்போதும் ரகசியமாகவே இருக்கும்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.