முதல் முறையாக பிக் பாஸ் வீட்டின் கேப்டனான லாஸ்லியா : காதலை சொல்லுமாறு வற்புறுத்திய கவின்!

முதல் முறையாக பிக் பாஸ் வீட்டின் கேப்டனான லாஸ்லியா : காதலை சொல்லுமாறு வற்புறுத்திய கவின்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரன் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே பிக் பாஸ் வீட்டில் நடப்பவற்றை டிவி மூலமாக பார்த்தும், கேட்டும் வருகிறார்.சேரன் ரகசிய அறையில் இருப்பது ஹவுஸ்மேட்ஸ்க்கு தெரியாது. எனவே அவர் இல்லாத சமயத்தில் சேரனை பற்றி சக போட்டியாளர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அவரால் தெரிந்துகொள்ள முடியும். 

twitter

நேற்றைய நிகழ்ச்சியில் சேரனை சக போட்டியாளர்கள் யாரும் தவறாக எதுவும் பேசவில்லை. சேரன் சார் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பார் என்று போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர். வனிதா, ஷெரின், லாஸ்லியா (losliya) உள்ளிட்டோர் சேரனை நினைத்து மிகவும் வேதனைப்பட்டனர். அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ட்விஸ்ட் : முதன் முறையாக ரகசிய அறைக்கு அனுப்பப்பட்ட சேரன்!

சோம்பேறித்தனமாக இருக்கும் கவினுக்கு மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்றும் வனிதா ஷெரினிடம் கூறி வருத்தப்பட்டார். அதேபோல் காரணமே இல்லாமல் சேரப்பா வெளியே சென்றுள்ளார் என்று லாஸ்லியாவும் கூறினார். இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன் பதவிக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் லாஸ்லியா, தர்ஷன், வனிதா ஆகியோர் பங்கேற்றனர்.

twitter

ஆனால் வனிதாவுக்கு முதலில் இருந்தே இந்த போட்டியில் கலந்து கொள்வதில் இஷ்டம் இல்லை. சேரனின் வெளியேற்றத்தால் தானும் பிக் பாஸில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார் வனிதா. எனவே, தலைவர் பதவிக்கான போட்டியில் தான் விலகிக்கொள்ள முடியுமா என பிக் பாஸிடம் அவர் கேட்டார். அதற்கு வாய்ப்பில்லை என பிக் பாஸ் கூறிவிட்டார். 

இதனால் வேறு வழியில்லாமல் அவர் போட்டியில் கலந்துகொண்டார். ஆனால் போட்டி ஆரம்பித்த உடனேயே வனிதா என்னால் முடியவில்லை என கூறி விலகிக்கொண்டார். தர்ஷனும் கால் வலிப்பதாகக் கூறி உடனடியாக வெளியேறினார். இதனால் போட்டியின்று லாஸ்லியா கேப்டன் ஆனார். ஆனால் இதில் லாஸ்லியாவிற்கு விருப்பம் இல்லை. தர்ஷனிடம் ஏன் விட்டுகொடுத்தாய் என கேள்வி எழுப்பினார். 

twitter

அதற்கு தர்ஷன் இந்த வீட்டின் கேப்டனாக நீ உன்னை நிரூபிக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து லாஸ்லியா (losliya) கேப்டன் ஆனார். இதனால் இந்த வாரம் அவரை யாரும் நாமினேஷன் செய்ய முடியாது. இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரோசஸ் தொடங்கியது. அதில் இந்த வாரம் வனிதா, சாண்டி, ஷெரின், தர்ஷன் ஆகிய நான்கு பேர் போட்டியாளர்கள் மூலம் நாமினேட் செய்யப்பட்டனர். கவின் ஏற்கனவே நேரடியாக நாமினேஷனில் இருக்கிறார். இதனால் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தர்ஷனுடனானஉறவை விமர்சனம் செய்ய உனக்கு உரிமையில்லை : வனிதாவை வெளுத்து வாங்கிய ஷெரின்!

பின்னர் வழக்கம் போல் லாஸ்லியாவிடம் (losliya), கவின் பேசிக்கொண்டிருந்தார். அப்போது நான்கு எழுத்து வார்த்தையை கூறுமாறு கவின், லாஸ்லியாவை வலியுறுத்தினார். லாஸ்லியாவிற்கு விரும்பம் இல்லாத போதும் கவின் தொடர்ந்து வற்புறுத்தினார். கவின் காதலை கூறும்படி லாஸ்லியாவை வற்புறுத்த, லாஸ்லியா வழக்கம்போல் ‘வெளியே போய் பேசுவோம்’ என பதில் கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இதற்கு தான் வந்தீர்களா என பலர் என்னை கேள்வி கேட்கின்றனர்.

twitter

அதனால் இது குறித்து வெளியே சென்றதும் பேசுவோம் என லாஸ்லியா கூறினார். இதனால் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்ட கவினை லாஸ்லியா சமாதானப்படுத்தினார்.  இதையெல்லாம் சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த இயக்குனர் சேரன் கடுப்பானார். நேற்று  கமல் சார் சொன்னபோது, ‘இது பற்றி பேசமாட்டோம், வெளியில் போய் பேசிக்கொள்கிறோம்’ என கூறிய கவின், இப்போது லாஸ்லியாவை போர்ஸ் செய்கிறார் என மக்களை பார்த்து சேரன் கூறினார். 

பிக் பாஸ் வீட்டில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு மதிப்பில்லை : லாஸ்லியாவை தாக்கிய ஷெரின்!

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எல்லோரும் ரசிக்கும் ஒரு டாஸ்க் என்றால் அது  ஃப்ரீஸ் டாஸ்க் தான். இந்நிலையில் ஃப்ரீஸ் டாஸ்க் தற்போது தொடங்கியுள்ளது. இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில் பிக்பாஸ் ஃப்ரீஸ் என்று சொன்னவுடன் அனைத்து போட்டியாளர்களும் அப்படியே நின்று விட்டனர். 

அப்போது முகேனின் தாய் மற்றும் அவரது தங்கையும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார்கள். அவர்களை பார்த்த முகென் மகிழ்ச்சியில் திளைக்கிறார். சந்தோஷத்தில் அவரது அம்மாவை கட்டியணைத்து அழுகிறார். அவர்களின் வருகையை கண்டு பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் நெகிழ்ச்சியடைகின்றனர்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.