பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !

பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை  நீக்கும் குங்குமாதி தைலம் !

குங்குமாதி தைலம் என்பது பெரும்பாலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களிலும் இதனை வாங்கலாம். இதுவே தரமான குங்குமாதி தைலத்தை (kungumathi thailam)நீங்கள் வாங்க வேண்டிய முறையாகும்.


பெயரே ரிச்சாக இருக்கிறதே.. இதன் விலை காஸ்டிலியாக இருக்குமா என்கிற கவலை வேண்டாம். சில நாட்கள் உங்கள் முகம் பொலிவாக மின்ன நீங்கள் ஒருமுறை ஃபேஷியல் செய்து கொள்ள செய்கின்ற சில ஆயிரம் ரூபாய் செலவுகளை விட நிச்சயம் இது கம்மிதான்.

Pinterest

குங்குமப்பூ , ரத்த சந்தனம் மற்றும் சந்தன தைலத்தை கலவையாக குங்குமாதி தைலம் விளங்குகிறது. இது அத்தனையும் இயற்கையான பொருட்களால் உரிய மருத்துவர்கள் மூலம் தயாரிக்கப்பட்டவை என்பதால் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது. 


இந்த குங்குமாதி தைலம் முகத்தின் அழகை மோசமாக்கும் மங்கு மற்றும் கரும்புள்ளிகளை அறவே நீக்குகிறது. சருமத்தின் நிறமும் மேம்படுகிறது. இரவு உறங்கும் முன்னர் சில துளிகள் எடுத்து மங்கு மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

pinterest

இப்படி செய்வதால் குறைந்த காலத்தில் உங்கள் சருமம் பேரழகு மின்னும் பொக்கிஷமாக மாறி விடும். விளம்பர நடிகைகள் போல உங்கள் முகமும் மங்கு மாசு மருக்கள் அற்று ஜொலிக்கும் பேரழகு பெறுவீர்கள்.எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் குளிக்கும் முன்னர் இந்த தைலத்தை தடவி ஒரு சில மணி நேரங்களில் குளிக்க வேண்டும். 


குங்குமாதி தைலம் பயன்படுத்தும் போது ரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. இதற்குப் பதிலாக இயற்கையான குளியல் பொடியை உபயோகிக்கலாம். எலுமிச்சை தோல், பயத்தம்பருப்பு மாவு மற்றும் கிச்சிலி கிழங்கு மூன்றையும் அரைத்து குளியல் மாவாக பயன்படுத்துங்கள். இது உங்கள் அழகை மேலும் அதிகரிக்க உதவி செய்யும்.

pinterest

தொடர்ந்து ஒருமாதம் இந்தக் குங்குமாதி தைலத்தை மேற் சொன்ன முறையில் பயன்படுத்தி வாருங்கள். உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி மங்கு போன்ற நிரந்தர கரும்புள்ளிகளை நீக்கி பார்ப்போர் ஆச்சர்யப்படும் வண்ணம் உங்கள் முகம் பளிங்கின் பளபளப்பு பெறும்.இதன் உடன் ஆயுர்வேத மருத்துவர் உதவியுடன் ரத்த சுத்திகரிப்பு டானிக் எடுத்துக் கொண்டால் உங்கள் பளபளப்பு நிரந்தரமாகும். 


40 வயதிலும் 20 வயது இளமையான முகம் உங்கள் வசப்படும்.

--                                                                               

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                                

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.