பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்தியில் மகள் லாலாவை சந்தித்த சாண்டி.. நெகிழ்ந்த ஹவுஸ் மேட்ஸ்!

பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்தியில் மகள் லாலாவை சந்தித்த சாண்டி.. நெகிழ்ந்த ஹவுஸ் மேட்ஸ்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாட்களை கடந்தது சென்று கொண்டிருக்கிறது. பிக் வீட்டில் இந்த வாரம்  ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. முகெனின் அம்மா நிர்மலா மற்றும் தங்கை ஜனனி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததை தொடர்ந்து தொடர்ந்து  லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அதேபோல் நேற்று வனிதாவின் மகள்கள், தர்ஷனின் குடும்பம், சேரனின் அம்மா, தங்கை, மகள் ஆகியோர் வந்திருந்தனர். 

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் "ஆரிரோ ஆராரோ" பாடலுடன் சாண்டி மகள் லாலா அழகாக அடியெடுத்து வைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். இதனை பார்த்த சாண்டி ஆனந்த கண்ணீருடன் "லாலா" என்றழைத்தவாறு கட்டியணைத்து தூக்குகிறார். பின்னர் வரும் அவரது மனைவியை வரவேற்று அவருக்கு நெற்றியில் முத்தமிட்டு தன காதலை சாண்டி வெளிப்படுத்துகிறார்.

பின்னர் சாண்டியிடம் இருக்கும் லாலாவை அவரது மனைவி அழைக்க அவர் வர மறுக்கிறார். பார்த்தாயா அப்போ நீ இங்கேயே இருந்துவிடு என அவர் கூற, சாண்டி மகிழ்ச்சியாக காணப்படுகிறார். சாண்டி அவரது மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர் தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது சாண்டி தனது மொபைல் போனில் மகளின் வாய்ஸை ரிங் டோனாக வைத்திருப்பதை பிக் பாஸ் போட்டு வாழ்த்து தெரிவித்தார்.

மகளின் புகைப்படம் அடங்கிய ஹார்ட் பரிசாக வழங்கப்பட்டு குறும்படம் காட்டப்பட்டது. இதில் டிவியில், சாண்டியின் மகள் அவரது புகைப்படத்திற்கு முத்தம் கொடுப்பதும், அப்போது கண்ணால கண்ணே என்ற பாடல் ஒலிக்கப்பட்டது . அப்போது தனது மகளை பார்த்த சந்தோஷத்தில் பேசுவதற்கு வார்த்தை வராமல், கண்ணீர் கடலில் மூழ்கினார் சாண்டி. இந்த காட்சிகள் வைரல் ஆனது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் சாண்டி மகள் லாலா வருவது ஒளிபரப்படும். இதனை ஆவலுடன் எதிர்ப்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மூன்றாவது புரோமோவில் ஷெரின் அம்மா இன்று வருவது காட்டப்பட்டுள்ளது. அவரை மட்டுமிட்டு ஷெரின் வரவேற்கிறார். லாஸ்லியாவை சந்திக்கும் அவர் மகிழ்ச்சியாக இரு, அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்று பாசிடிவாக பேசுகிறார். பின்னர் தர்ஷனை பார்த்து எப்படி இருக்கிறாய் ஹண்ட்சம் என்று கேட்க, இடையில் ஷெரின் ஒரு பெண்ணை இவர் தான் ஸ்ரீஜா என்று அறிமுகம் செய்கிறாய்.

இதனை தொடர்ந்து சாண்டியிடம், நீ ஷெரினை டார்ச்சர் செய்கிறாய். நான் அதனை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன் என சிரித்துக்கொண்டே கேட்கிறார். அப்போது முகென் ஸ்ரீஜாவை காய் பிடித்து அழைத்து கொண்டு செல்ல, டேய் முகென் வேண்டாம் டா, அபிராமி திட்டும் டா என்று ஷெரின் அம்மா கூறுகிறார். இதனை கேட்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் முகெனை கலாய்க்கின்றனர். அப்போது நான் சொல்லியிருக்கேன் அல்லவா என் அம்மா வித்தியாசமானவர் என்று என ஷெரின் கூறுவது காட்டப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள கவினின் நண்பர் ஒருவர் கவினிடம் (kavin), எனக்கு கடமை பாக்கி இருக்கு. நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சினு நினைக்குறேன். நீ இவ்வளவு கேவலமா ஆடுன கேமுக்கு, நீ மட்டமா ஒரு விஷயம் பண்ணதுக்கு, உன்ன நம்புனவங்கள நீ கைவிட்டதுக்கு, இங்க இருக்குற எல்லாரையும் கஷ்டப்படுத்தியத்துக்கு இப்போ நான் உன்ன செய்யலாம்ன்னு இருக்கேன். 

டைட்டில் ஜெயிச்சிட்டு நீ பெரிய ஆளா ஆகிட்டான்னா  என்ன ஸ்டேஜ்ல கூப்பிட்டு திருப்பி அடிச்சிக்கோ என்று சொல்லி பளார் என்று கவினின் கன்னத்தில் அறைகிறார். இதைக் கண்டு லாஸ்லியா உள்ளிட்ட மொத்த பிக் பாஸ் போட்டியார்களும் அதிர்ச்சியில் உறைகின்றனர். பின்னர் கவினனை கட்டியணைக்கிறார். 

 

twitter

கவினின் தயார் சிறையில் உள்ள நிலையில் அவரை பார்க்க யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கவினின் நண்பர்பரும், நடிகருமான பிரதீப் ஆண்டனி கவினை பார்க்க வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கவினின் குடும்பத்தில் தற்போது என்ன நடைபெற்று கொண்டிருக்கிறது என உள்ளே இருக்கும் கவினுக்கு தெரிய வாய்ப்பில்லை. மோசடி வழக்கு ஒன்றில் கவின் அம்மா சிறையில் இருப்பது தெரிந்தால் அவர் வெளியே வந்த பின்னர் அதனை எப்படி எடுத்துக்கொள்வார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஒருவரை எல்லோரும் திட்டி வருகிறார்கள் என்றால் அது கவினை தான். அவர் செய்த காதல் லீலைகள் எல்லாம் அவரை பெயரை முற்றிலும் கெடுத்துவிட்டது. முதலில் சாக்ஷியை காதலிப்பதாக கூறிய கவின் பின்னர் லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் பலம் இருப்பதை உணர்ந்து கொண்டு அவரை காதலிக்க தொடங்கினர். லாஸ்லியாவுடன் கவினுடன் (kavin) பழகி வந்தார். இதனால் லாஸ்லியா மீது ரசிகர்களுக்கு வெறுப்பு உண்டானது.

இந்நிலையில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் நுழைந்த லாஸ்லியா குடும்பத்தினர் அறைக்கு அறிவுரை வழங்கினர். லாஸ்லியாவின் நடவடிக்கைகளால் வெளியில் பெரும் அவமானமாக இருப்பதாக அவரது பெற்றோர் வருத்தப்பட்டனர். மறைமுகமாக கவினுடனான காதலை முறித்துக் கொள்ளும்படி அவர்கள் வலியுறுத்தினர். ஒரு சாதாரண குடும்பத்தில் பாச போராட்டத்தை லாஸ்லியாவின் குடும்பத்தினரிடம் காண முடிந்தது. "நீ நீயாக இரு" என்று லாஸ்லியாவிடம் அவர் அம்மா தெரிவித்தார். 

twitter

நேற்றைய நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் முடிந்து லாஸ்லியாவின் குடும்பத்தினர் சென்று விட்டனர். அதன் பின்னர் பெற்றோரின் வேதனையை புரிந்து கொண்ட லாஸ்லியாவும், கவினும் இனி எந்த தவறும் செய்வதில்லை என முடிவெடுத்துள்ளனர். கவின் (kavin) மற்றும் லாஸ்லியா இது குறித்து தனியாக அமர்ந்து தெளிவாக பேசினார்கள். அப்போது பேசிய லாஸ்லியா நான் செய்த தவறுக்கு என் பெற்றோர்கள் மற்றும் என்னுடன் பிறந்தவர்கள் வேதனையை அனுப்பவிப்பதை நான் விரும்பவில்லை. இனிமேல் நான் விளையாட்டை சரியாக கவனத்துடன் விளையாடுவேன். 

எல்லாத்தையும் இங்கயே தூக்கிப் போட்டுட்டு வா.. 10 வருட பாசத்தை ஒத்தி வைத்த லாஸ்லியா அப்பா!

நீயும் அவ்வாறே இரு என கவினிடம் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட கவின் இனிமேல் நம்மால் யாரும் கஷ்டப்பட கூடாது என கூறினார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் என கூற காலையில் தினமும் கண் விழித்தால் பாடல் ஒழிக்க தர்ஷன் அம்மா மற்றும் தங்கை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அம்மாவை கட்டியணைத்து கண்கலங்கினார் தர்ஷன்.

twittter

பின்னர் தர்ஷன் அம்மாவிற்கு அனைவரும் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார்.  அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி கேக் அனுப்பினார். தர்ஷன் அம்மாவிற்கு கேக் வெட்டி போட்டியாளர்கள் பிறந்தநாள் கொண்டாடினர். முகென் கையால் செய்த பரிசு ஒன்றை தர்ஷன் அம்மாவுக்கு பரிசளித்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மகிழ்ச்சியாக சென்றது. 

கர்மா இஸ் எ பூமராங்.. சாக்ஷியை கதற வைத்த கவின் .. கவினால் அவமானப்பட்டு கலங்கிய சாண்டி ..

தர்ஷனின் தங்கை அனைவருடமும் நன்றாக பேசினார். அவரை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இவ்வளவு அழகிய தங்கையா என்று வாயடைத்து போய்விட்டனர். அவரின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. தர்ஷனிடம் ஒரே வார்த்தையில் மனதில் நினைப்பதை செய். யாருக்காகவும் நீ விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று அவரின் தங்கை அறிவுரை வழங்கி விட்டு சென்றார். 

twitter

இதனை தொடந்து "வாயாடி பெத்த புள்ள.." பாடலோடு வனிதாவின் இரண்டு மகள்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் இருவரும் வனிதா மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களிடமும் பேசி விளையாடிக்கொண்டிருந்தனர். சாண்டி, முகென் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டிலும் அவர்கள் பங்கேற்று விளையாடினர். பின்னர் ரவுடி பேபி பாடளுக்கு போட்டியாளர்களுடன் நடனமாடிவிட்டு மகிழ்ச்சியாக சென்றனர். 

ஃப்ரீஸ் டாஸ்க்கில் இன்று வனிதா, தர்ஷன் குடும்பத்தினர் வருகை : போட்டியாளர்கள் நெகிழ்ச்சி!

இதனையடுத்து சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தில் இருந்து ஞாபகம் வருதே பாடலை போட்டு சேரன் குடும்பத்தாரை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேற்றனர். அப்போது சேரன் கண்கலங்கி அழ, அவரின் மகள் தாமினி, சேரனின் அம்மா கமலாவும் அழுதுவிட்டார். மேலும் சேரனை பார்க்க அவரது தங்கை வனிதாவும் வந்திருந்தார். பின் சேரனின் மகள் தன் அப்பாவை தனியே கூட்டிச்சென்று நானும் அக்கா மட்டும் தான் உங்களுக்கு மகள்கள். என் தோழிகள் எல்லாம் உங்க அப்பா உன்ன மறந்திட்டாரா? லாஸ்லியா பத்தியே பேசிகிட்டு இருக்கிறாரு என கேட்பதாக சொல்லி வருத்தப்பட்டார்.

twitter

லாஸ்லியா கூட பேசினீங்கனா நான் டென்சன் ஆகிடுவேன். உங்கள விட்டுக்கொடுத்த லாஸ்லியா கூட பேச்சு வச்சிகாதீங்க என கூறியுள்ளார். மேலும் தாமினி, லாஸ்லியாவிடம் நீங்கள் எங்க அப்பா பக்கம் நிற்காவிட்டாலும், அவர் உங்க கூட எப்போதும் இருப்பார். எங்கள் குடும்பத்தில் எல்லோரும் உங்களை சந்திக்க காத்திருக்கிறார்கள் என கூறி விட்டு சென்றார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.