கண்டதும் காதலில் நம்பிக்கை கிடையாது..ஜான்வி | POPxo

கண்டதும் காதலில் நம்பிக்கை கிடையாது.. ஆனால் நிரந்தரமான காதலே எனது தேர்வாக இருக்கும்-ஜான்வி

கண்டதும் காதலில் நம்பிக்கை கிடையாது.. ஆனால் நிரந்தரமான காதலே எனது தேர்வாக இருக்கும்-ஜான்வி

பல ஆண்டுகால தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை ஸ்ரீதேவி தனது மகளான ஜான்வியை பாலிவுட் திரையில் தடக் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்தார்.

அதன் பின்னர் ஜான்விக்கு என பல ரசிகர் பட்டாளம் உருவாகியது. ஆனால் ஒரு சிலர் ஜான்வியின் உடல் அமைப்பை கேலி செய்தனர். அலியா பட் போல அழகாக ஜான்வி இல்லை என்கிற ஒப்பீடும் வைத்தனர்.

 

twitter
twitter

அலியா பட், சாரா அலிகான் அனன்யா பாண்டே போன்ற மற்ற சினிமா வாரிசுகளை விட உடல் அழகில் திறமையில் ஜான்வி சிறந்தவர் இல்லை என்கிறதான பேச்சு கிளம்பியது.                                                                                        

ஆனால் இன்று அத்தனை பேச்சையும் உடைத்தெறிந்திருக்கிறார் ஜான்வி. தொடர்ந்த ஜிம் பயிற்சிகள் மூலம் தனது உடல் வாகை அழகாக்கி இருக்கிறார்.

 

தினமும் பாந்திராவின் ஜிம்மில் இருந்து அவர் வெளியேறும் போதெல்லாம் அவரது பொலிவான உடற்கட்டை காண பலர் போட்டி போடுகின்றனர்.

அதன் விளைவாக தற்போது கவர்ச்சிகரமான வளைவுகளைத் தனது வசம் ஆக்கியிருக்கிறார் ஜான்வி. அதனை நிரூபிக்கும் வகையில் brides பத்திரிகையின் கவர் ஸ்டோரியில் இவர் இடம் பெற்றிருக்கிறார்.                                               

brides பத்திரிகையின் மில்லினியும் பிரைட்  எனும் தலைப்பில் தன்னுடைய அசாத்தியமான தன்னம்பிக்கை பார்வையால் அனைவரையும் கிறங்கடிக்கிறார். இது நிச்சயம் இளைஞர்கள் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

 

instagram
instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                                

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.