உங்கள் காதல் ஜென்ம ஜென்மங்களாகத் தொடரும் ஆத்ம பந்தம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?

உங்கள் காதல் ஜென்ம ஜென்மங்களாகத் தொடரும் ஆத்ம பந்தம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?

இந்தியர்களுக்கு பல்வேறு வித நம்பிக்கைகள் பழங்காலங்களில் இருந்தே இருக்கிறது. இந்த டிஜிட்டல் யுகம் வரைக்கும் மறையாத ஒரு வார்த்தை ஜென்மம் என்பது. பிறவிகள் எனும் தத்துவத்தை இந்தியர்கள் அதிகமாகவே நம்புகிறார்கள்.

அதிலும் காதல் என்று வந்து விட்டால் எப்போதோ போன ஜென்மத்தில் (previous birth) உன்னை பார்த்த ஞாபகம் இருக்கிறது என்ற காதலுக்கு மரியாதை வசனம் போல யாராவது ஆண் இன்னொரு பெண்ணை நோக்கி சொல்லிக் கொண்டே இருப்பான்.

இதில் சில விவகாரமான ஆண்கள் பார்க்கும் எல்லாப் பெண்களிடமும் இந்த வசனத்தை வீசி பார்ப்பான். அவன் நமக்கு முக்கியம் அல்ல. அவனைப் போன்றவர்களை புறங்கையால் ஒதுக்கி புறக்கணித்து விட்டு கட்டுரைக்குள் போகலாம் வாருங்கள்.

Youtube

நீங்கள் காதலில் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் காதல் உண்மையிலேயே முன்ஜென்மத்தில் இருந்து தொடர்கிறதா என்பதை அறிந்து கொள்ள சில குறிப்புகள் உண்டு. அது எல்லாம் சரியாக இருந்தால் யெஸ் அவர்தான் உங்கள் முன்ஜென்ம காதலர். இந்த ஜென்மத்திலாவது இந்தக் காதலை முழுமையாக்குங்கள்.

கண்ணும் கண்ணும் நோக்கியா

இதனை ராமாயண காலத்தில் இருந்தே சொல்லி வருகிறார்கள். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று. ஒருவரைப் பார்த்த உடனே உங்கள் மனதில் ஒரு ஈர்ப்பு உருவாகிறது எனில் (ஆழ்மனது) அது ஒருவேளை முன்ஜென்மத்தில் நீங்கள் தவறவிட்டு வந்த காதலின் தொடர்கதையாக இருக்கலாம். இந்த உணர்வு தொடர்ந்து ஒரு மாதங்களுக்கும் மேல் நீடித்தால் (இயல்பாக) அது பூர்வ ஜென்ம காதலே.

Youtube

காதலனின் நடவடிக்கைகள் அத்துப்படி

உங்களுக்குள் காதல் ஏற்பட்டு சில காலமே ஆகியிருக்கலாம். பரஸ்பரம் புரிதல் என்பது ஒருவரை பற்றி மற்றவரிடம் தங்கள் இயல்புகளை பேசிக் கொள்வதுதான். ஆனால் அப்படி எதுவும் பேச நேரம் கிடைக்காமலே அதிக அறிமுகங்கள் தேவை இல்லாமலே உங்கள் காதலர் இந்த இடத்தில் இதைத்தான் செய்வார் என்கிற யூகம் உங்களுக்கு ஏற்படும். அதற்கேற்ப அது நடந்தால் நிச்சயம் இவர் உங்கள் முன்ஜென்ம காதலர்தான்.

அண்மை நெருக்கங்கள் அவசியமற்றவை

நீங்கள் நேசிக்கும் நபர் உங்கள் அருகே இருந்தால்தான் அவர் மீது காதல் என்றில்லாமல் அவர் இல்லை என்றாலும் கூட அவரது நெருக்கத்தை நீங்கள் மனரீதியாக உணர்வீர்கள். அவருடன் மௌனமாக உரையாடியபடியே உங்கள் அன்றாடங்கள் நிகழும். இப்படி உங்கள் காதலர் அருகே இல்லாவிட்டாலும் கூட அவரது அண்மையை நெருக்கத்தை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் அது நிச்சயம் பூர்வ ஜென்ம பந்தமேதான்.

 

Youtube

நேர்மையும் உண்மையும்

இது எல்லாக் காதலுக்கும் அடிப்படையான குணாதிசியம்தான். ஆனால் உங்கள் காதலில் எதற்குமே ஒளிவு மறைவில்லாமல் எல்லாம் வெளிப்படையாக இருக்கிறதா என்று பாருங்கள். உங்கள் காதலர் வெகு விவரமாக உங்களை பற்றிய விஷயங்களை மட்டும் கேட்டு விட்டு தன்னைப் பற்றி சொல்லாமல் இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் ஒரு ரகசியத் தன்மை நிறைந்த பதில்கள் அவர்களிடம் இருந்து வரும். அவர்கள் நமக்கானவர்கள் அல்ல. எவர் உங்களை போலவே திறந்த புத்தகமாக இருக்கிறாரோ அவர்தான் உங்கள் முன்ஜென்ம காதலர்.


இணைந்திருத்தல் இதமானது

உங்கள் துணையுடன் நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அது நடுரோடோ அல்லது கடும் வெயிலோ குளிர் மழையோ என்ன இடம் என்ன நிலை அது பற்றி யோசிக்காது அந்த இடத்தின் நினைவையே மறந்து அவருடன் பேசிக் கொண்டே இருப்பீர்கள்.

மாலை முடிந்து இரவானாலும் கூட உங்கள் காதலரது அருகாமையை விட்டு விலக மாட்டீர்கள். ஒரு நொடி கூட அவரை பிரிய நேர்ந்தால் கலங்குவீர்கள். எல்லாக் காதலின் ஆரம்பமும் இப்படித்தான் இருக்கும். பெண் தனக்கு சம்மதம் தெரிவித்து தன்வசம் ஆன உடன் அடுத்த பெண்ணை கவனிக்க போய்விடும் அந்த ஆண்களை தலையில் தண்ணீர் தெளித்து கழட்டி விடுங்கள்.

ஆனால் உண்மையாகவே உங்களுடன் நேரம் செலவழிக்க விரும்பும் காதலர் உங்களுடன் இருக்கும்போது ஒளிவு மறைவில்லாமல் செல்போனை எடுத்துக் கொண்டு மறைவிடம் போகாத காதலர் வரும் மிஸ்ட் கால்களை மெஸேஜ் டோன் என சமாளிக்காத காதலர் உங்கள் காதலர் என்றால்.. நிச்சயம் அது உங்கள் பூர்வ ஜென்ம காதலரே தான்.

இந்த ஜென்மத்திலாவது உங்கள் காதல் நிறைவேறத் தேவையான முயற்சிகளை நீங்கள் எடுக்கலாம்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.