உங்கள் பெஸ்டியின் திருமணத்தில் முயற்சிக்க 17 அழகான சிகை அலங்காரங்கள்!!

உங்கள் பெஸ்டியின் திருமணத்தில் முயற்சிக்க 17 அழகான சிகை அலங்காரங்கள்!!

திருமண சீசன் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில் ,எந்த ஒரு திருமண (wedding) விழாவாக இருந்தாலும் நம் அனைவரும்  கண்டிப்பாக அதில் மிக அழகாக தோன்ற விரும்புவோம் ! அதுவும் உங்கள் பெஸ்டியின் திருமணமாக இருந்தால் நீங்கள் இன்னும் அழகாகவும் ஒரு பிரமிக்கவைக்கும் தோற்றத்தில் தோன்ற விரும்பலாம். 

அதற்காக நீங்கள் அணிய வேண்டிய ஆடை, ஒப்பனை  மற்றும் அதற்கு ஏற்ற சிகை அலங்காரங்கள் இவை அனைத்தையும் நீங்கள் சிந்தித்து திட்டமிட்டு கொண்டிருக்கலாம்.  இந்நிலையில் உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு சில சிறந்த அழகிய சிகை அலங்காரங்களை  (hairstyle) பட்டியலிட்டுள்ளோம். இவைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் தோழியின்  திருமணத்தில் ஒரு அழகிய தோற்றத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்! !  

1. மலர்களுடன் விரிவான மீன் பின்னல்

Pinterest

ஒரு சாதாரண பின்னலில் வழக்கமாக மலர்களை கொண்டு கூந்தலை அலங்கரிப்பதில் நீங்கள்  விருப்ப படவில்லை என்றால் இதுபோல் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

2. மிதமான சுருள்களில் சிறு பூக்கள்

Pinterest

உங்கள் கூந்தலை பின்னலிடாமல் அதற்கு அழகு சேர்க்க அங்கங்கே சில பூக்களை இதுபோல் சேர்க்கவும்.

3. பரந்த பிரஞ்சு பின்னல்

Pinterest

ஒரு நவநாகரீக தோற்றத்தை அடைய   வழக்கமான பாணியிலிருந்து மீண்டும் வேறுபட்ட தோற்றம் இது  . இதை புடவை மற்றும் லெஹெங்காவிற்கு ஏற்ற அலங்காரம். 

4. மூன்று ரோஜா பன்களுடன் லேசான சுருள்

Pinterest

நீங்கள் கூந்தலின் கீழே ஆழமான சுருள்களை விரும்பவில்லை என்றால், இதுபோல் அளகரிக்கலாம் . இது நேர்த்தியான மற்றும் ஸ்டைலான ஒரு சிகை (கூந்தல்) அலங்காரம்.

5. நடுவில் பூக்களைக் கொண்ட எளிய பின்னல்

Pinterest

மேல்கூறிய எதையும் நீங்கள் விரும்பவில்லை என்றால், இதற்குச் செல்லுங்கள். இது மிகவும் அடிப்படையான ஒரு அலங்காரம். பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒன்றாகும்.

6. ரோஸ் பன்

Pinterest

உங்கள் ஆடையின் நிறத்திற்கு ஏற்ப இது போன்ற பெரிய ரோஜாக்களை தேர்ந்தெடுத்து , ஒரு பன் ஸ்டைல் கொண்டையில் அலங்கரிக்கலாம். மேலும் முதுகில் நெக்லஸை அணிந்து இதுபோன்ற புதியதோர் தோற்றத்தை உருவாக்குங்கள்.

7. மலர்களுடன் தளர்வான பின்னல்

Intagram

சுருளுடன் விரிவான ஜடை மற்றும் பூக்கள் கொண்ட மற்றொரு  ட்ரெண்டியான தோற்றம் இது. இய்ரயான பூக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை சாயமிடுங்கள் அல்லது செயற்கையானவற்றைப் பயன்படுத்தலாம். 

8. ஒரு பக்க பூக்கள்

Instagram

பூக்களை நேராகவோ  அல்லது நடுவிலோ வைத்து  அலுத்து போய்விட்டதா ? இது போல் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்குங்கள். இது போன்ற பூக்களை ஒரு பக்கம் சாய்வாக அலங்கரித்து அசத்தலாம்! 

9. சுருள் முடியில் பூக்களின் கேட்சர்ஸ்

Instagram

உங்கள் பூக்களை இது போன்ற கேட்சர் கிளிப்களாகப் பயன்படுத்தி ஸ்டைலான தோற்றத்தை உருவாக்கவும். டீப் பேக் நெக் இருக்கும் ஆடைகளுக்கு இது பொருத்தமான ஒரு தோற்றம் ஆகும்.

10. முறுக்கப்பட்ட ஜடை

Pinterest

இந்த அரை சடை சிகை அலங்காரத்தை  மணிகள், பூக்கள் அல்லது நகைகளால் அழகாக அலங்கரிக்கப்படலாம். பின்னலை பின்னிய பிறகு கூந்தலை மிதமாக வெளியே அகற்றி செட்டிங் ஸ்பிரையால் செட் செய்யுங்கள்.

11. மீன் வால் பின்னல்

Instagram

இந்த நுணுக்கமான மீன் பின்னலை  சரியான மலர்களின் கலவை மற்றும் முடி பாகங்கள் ஆகியவற்றுடன் பிணைக்கப்படும்போது பிரமிக்கவைக்கும் தோற்றத்தை அடையாளம். 

12. இரண்டு பகிர்வுகளுடன் விரிவான பிரஞ்சு பின்னல்

Pinterest

இந்த ஈர்க்கவைக்கும்  சிகை அலங்காரம் லெஹெங்கா சோலி மற்றும் புடவை இரண்டிலும் அழகாக இருக்கும்! 

13. தெளிக்கப்பட்ட பூக்கள் லுக்

Pinterest

நீங்கள் ஒரு நீண்ட கவுன் அணிய திட்டமிட்டால் இந்த சிகை அலங்காரம் சரியானது. இது உங்களை ஒரு அழகான இளவரசி போல தோற்றமளிக்கும்!

14. ஆழமான சுருண்ட பின்னல்

Pinterest

உங்களிடம் நீண்ட முடி இருந்தால், அல்லது நீண்ட கூந்தலில் ஒரு பாணியை உருவாக்க விரும்பினால், இதைத் தேர்வுசெய்க. இது மிகவும் கவர்ச்சியாக தோற்றமளிக்க ஆங்காங்கே மணிகளால் அலங்கரிக்கவும்.

15. எளிமையான விரிவான பின்னல்

Pinterest

மேல்கூறிய எந்த ஸ்டைலும்  உங்களுக்கு பொருந்தவில்லை எனில், இதுபோல் பாரம்பரியமான  அழகான ஒன்றைத் தேர்வுசெய்க. இதுபோன்ற சிகை சேலைக்கு ஏற்றது.

16. பூக்களுடன் பன்

Pinterest

பன் ஸ்டைலை  நாம் எப்படி மறக்க முடியும்? நீங்கள் ஆழமான பின்புற கழுத்து கொண்ட ரவிக்கை அல்லது கனமான வடிவமைக்கப்பட்ட ரவிக்கை அணிந்திருந்தால், உங்கள் ஆடையை காண்பிக்க  இந்த உயர் பன் சிகை பொருத்தமானது.  

17. நேரான கூந்தல் தோற்றம்

Pinterest

இதுவரை பார்த்ததில் சுருள் கொண்ட கூந்தலில் எதுவும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இதுபோன்ற நேரான கூந்தலின் தோற்றத்திற்கு செல்லுங்கள். ஒரு அழகிய பூவை நடுவில் வைத்து இந்த சிகை அலங்காரத்தை முடிக்கலாம்.

பட ஆதாரம் - Instagram, Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.