ஒரே இரவில் பலமுறை கலவி கொள்தல் யாருக்கு சாத்தியம்?ஆண்களுக்கு ஏற்படும் அந்த' நேர சங்கடங்கள்

ஒரே இரவில் பலமுறை கலவி கொள்தல் யாருக்கு சாத்தியம்?ஆண்களுக்கு ஏற்படும் அந்த' நேர சங்கடங்கள்

சில சமயங்களில் சில விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தலாம்.புதிதாக திருமணமா இளம் பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் அந்தரங்க விஷயங்கள் அப்படியாகப்பட்டவைதான். ஒரு பெண் தன்னுடைய கணவன் ஒரே இரவில் 5 முறை ஆறு முறை கலவி கொண்டார் என்று கூறுவார். இன்னொரு பெண்ணோ உன் பாடு தேவலை என் கணவரோ இரண்டாம் முறைக்கு முயற்சிப்பது கூட இல்லை என்பார்.

ஆகவே ஒரே இரவில் பலமுறை கலவி கொள்தல் என்பது அவரவர் உடல் வலிமை மட்டுமன்று. அவர்களுடைய உயிரியல் அமைப்பும் அதற்கான காரணமாக இருக்கலாம். பெண்களுக்கு இயற்கையாகவே ஒருமுறை உச்ச கட்டம் அடைந்த பிறகு அடுத்த சுழற்சிக்கு அவர்கள் உடல் தயாராகி விடுகிறது.

அவர்களுக்கும் சில அயர்ச்சிகள் இருக்கத்தான் செய்யும், ஆனால் இதனை பெரும்பாலான பெண்கள் வெளியே காட்டி கொள்ளாமல் மறுமுறை கணவன் அழைத்தாலும் ஐந்து முறை அழைத்தாலும் அவர்கள் ஒத்துழைப்பார்கள். காரணம் படுக்கையில் ஒத்துழைக்காத பிரச்னைகள் குடும்ப சிக்கல்களாக மாறி விடும் என்கிற அச்சம் பெண்களுக்கு உண்டு.

Youtube

இதை அறியாத சிலர் பெண்கள் உடல் பாலியல் தேவைகள் முடிந்த உடனே மீண்டும் அதற்கு தயார் ஆகி விடும் என்று நினைக்கின்றனர். உண்மையில் அப்படி அல்ல. ஆர்கஸத்திற்கு பின்னர் அவர்களுக்கும் சில நிமிடம் ஓய்வு தேவைதான்.

பெண்ணிற்கும் ஆணிற்கும் உச்சநிலைக்கு பின்பான ஓய்வெடுக்கும் இடைவெளி என்பது கால அளவுகளில் மாறுபடுகிறது. இதைத்தான் சூசகமாக கவிஞர் வைரமுத்து எழுதி இருப்பார்.. ஆணின் தவிப்பு அடங்கி விடும் பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும் என்று.

ஆர்கஸம் (orgasm) அடைந்த சில நிமிடங்களில் பெண்கள் உடல் இன்னொரு சுற்றுக்கு தயார் ஆகும். ஆனால் ஆண்களுக்கோ இதற்கான கால இடைவெளி அதிகமானதாகவே இருக்கும். உச்சக்கட்டத்திற்கு பின்னர் மீண்டும் கிளர்ச்சி நிலை அடைய ஆண்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.

விந்து வெளியேறும் நொடி முதல் சில நிமிடங்களோ அல்லது ஒரு சிலருக்கு சில நாட்களோ கூட இந்த இடைவெளிக்காலம் தேவையாக இருக்கலாம். பாலியல் களைப்பு எனப்படும் இந்த நிலைக்கான காரணங்கள் ஒவ்வொருவரின் உடல் மற்றும் மன உணர்வுகள் சார்ந்தது. மதுப்பழக்கம் , நுனி தோல் நீக்கம், தனிப்பட்ட மனத்திருப்தி, மற்ற உடல் நோய்கள் எல்லாம் இதில் காரணமாக காட்டப்படுகிறது.

Youtube

ஒருமுறை உறவு கொண்ட பின்னர் மறுமுறை உடனடியாக உறவு கொள்ள முடியாத ஆண்கள் பலர் மனம் வேதனைப்படுகின்றனர். தன்னிடம் ஆண்மை குறைவு என்று தவறாக நினைக்கின்றனர். உண்மையில் இது உயிரியல் ரீதியான வழக்கமே.

விந்து வெளியேறியதும் ஆணின் உடலை அசதி கைக்கொள்கிறது. பரிவு நரம்பு மண்டலம் ஆணின் உடலை தளர்த்தி சாந்தம் செய்கிறது. ஆண்குறி விறைப்பின் தன்மையையும் சேர்த்தே அந்த நரம்பு மண்டலம் தளர்த்தி விடுகிறதே இதற்கு காரணம்.

பாலியல் களைப்பு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடலாம். அவர்கள் உடல் வலிமை, எடுத்து கொள்ளும் உணவு ஆகியவை சார்ந்தது இந்த விஷயம். இந்த கலைப்பிற்கான நேரமும் ஆளுக்காள் மாறுபடுகிறது. பதின்ம வயது ஆண்களிடம் சில நொடிகளிலேயே உடலை மீட்டெடுக்கும் திறன் இருக்கிறது.

 

 

Youtube

முப்பது வயதிற்கு மேற்பட்டோர் என்றால் இதில் அவர்கள் சிரமங்களை சந்திக்கத்தான் வேண்டி வரலாம். 50 வயதுக்கு மேலான ஆண்களுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறைக்கு மேல் எதுவும் ஏற்படாது. உச்சக்கட்டம் ஒருமுறை மட்டுமே நிகழும்.

வயதை பொறுத்தே பாலியல் கிளர்ச்சிக்கு மீண்டும் உடல் திரும்பும் நேரங்கள் மாறுபடுகிறது. சில நிமிடங்களில் சிலருக்கும் சில மணி நேரங்களில் பலருக்கும் ஒரு சிலருக்கோ அது மீண்டும் ஏற்பட சில நாட்கள் கூட ஆகலாம். நாற்பது வயதில் இதற்கான தாக்கங்கள் ஆரம்பம் ஆகிறது.

இதனை சரி செய்ய உடல் உறவு கொள்ளும் முன்னர் மது போதை பொருள்களை பயன்படுத்துவது நிறுத்த வேண்டி வரும். அதற்கேற்ற ஆரோக்கிய உணவுப்பழக்கம் வேண்டும். இடுப்பு வலுவிற்கான உடற்பயிற்சிகள் உண்டு அதனை செய்து வரலாம்.மருத்துவரின் ஆலோசனையோடு இதனை செய்து வந்தால் பலன் உண்டு.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.