உங்கள் குழந்தைக்கு சுவாரசியமான மதிய உணவு தர – சுவையான குறிப்புகள்!

உங்கள் குழந்தைக்கு சுவாரசியமான மதிய உணவு தர – சுவையான குறிப்புகள்!

அனைத்து அம்மாக்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்து விட்டாலே, அடுத்த கோடை விடுமுறை வரும் வரை ஒவ்வொரு நாளும் ஒரு சவால் தான். எப்படியாவது தங்கள் குழந்தையை மதிய நேரத்தில் பள்ளியில் கொண்டு போகும் உணவை சாப்பிட வைத்து விட வேண்டும். இது நிச்சயம் ஒரு சவால் தான்!

குழந்தைகளின் ஆரோக்கியமும் முக்கியம், அவர்கள் விரும்பும் உணவை கட்டித் தருவதும் முக்கியம். அதை விட முக்கியம், அவர்கள் கொண்டு செல்லும் உணவை (lunch) திரும்பி சாப்பிடாமல் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வராமல் இருப்பது.

மேலும், உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் உணவும் நல்ல சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவாகவும் இருக்க வேண்டும்.

 

pixabay

இந்த அத்தனை விதிகளும் உள்ளடங்கிய ஒரு மதிய உணவை தயார் செய்து கொடுக்க, உங்களுக்காக சில சுவையான குறிப்புகளும், யோசனைகளும்:

  • பச்சை காய்கள் மற்றும் பழங்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • வெள்ளரிக்காய், காரட், கொய்யா, பப்பாளி, மாம்பழம் போன்று ஏதாவது ஒரு காய் அல்லது பழம் மதிய உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
  • அவித்த முட்டை, அல்லது முட்டை தோசை அல்லது முட்டை பொரியல் என்று உங்களால் முடிந்த ஒரு முட்டை பலகாரம் இருப்பது நல்லது. தினமும் செய்ய முடியவில்லை என்றாலும், வாரம் மூன்று நாட்களாவது இதை செய்ய வேண்டும்.
  • முளை கட்டிய பயிர் அல்லது ஊற வைத்து அவித்த பயிர் கொடுக்கலாம். இந்த பயிரை தாளித்து, தேங்காய் துரவல் சேர்த்து, ருசியாக செய்து தந்தாள், நிச்சயம் உங்கள் குழந்தை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவான். குறிப்பாக, பட்டாணி, கொள்ளு பயிர், கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை மற்றும் பச்சை பயிர் போன்றவற்றில் செய்து தரலாம். 
pixabay

  • உங்கள் குழந்தைக்கு தினமும் மதிய உணவாக (lunch) சாதா வகைகள் தான் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அவனுக்கு பிடிக்கும் சப்பாத்தி, பூரி, தோசை போன்ற உணவு வகைகளையும் கொடுக்கலாம்
  • நொறுக்கு தீனி. இது குழந்தைகளின் பிரத்யேக உணவு என்று கூறலாம். உங்கள் குழந்தைக்கு நீங்கள் நொறுக்கு தீனி கொடுக்க விரும்பினால், முடிந்த வரை வீட்டில் செய்த முறுக்கு, தட்டை வடை, சீடை, கடலை உருண்டை போன்ற பாரம்பரிய பலகாரங்களை கொடுத்து சாப்பிட ஊக்கவியுங்கள். 
  • மாறாக கடைகளில், காற்றுக்கு இலவசமாக கொடுக்கும் 5 சிப்ஸ், இராசாயனம் கலந்து மிட்டாய், உயிருக்கே அச்சுறுத்தலை உண்டாக்கும் ஜெல்லி போன்றவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. எனினும், அதற்கான விழிப்புணர்வை உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்
  • தயிர். இது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தயிர் சாதம் போன்று கொடுக்க முடியவில்லை என்றாலும், அல்லது உங்கள் குழந்தைக்கு தயிர் சாதம் பிடிக்காது என்றாலும், தினமும் ஒரு குப்பியில், மோர் செய்து தரலாம். இதனை அவன் காலை சிற்றுண்டி நேரத்தில் அருந்த ஊக்கவிக்கலாம். இந்த மோரில், இரண்டு சின்னவெங்காயம், சிறிது இஞ்சி, மற்றும் கருவேப்பிள்ளை, கொத்தமல்லித் தலைகளை சேர்த்து அரைத்து கலந்து கொடுக்கலாம். இது நல்ல ஆரோகியத்தை தருவதோடு, சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்
pixabay

  • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவு (lunch) . தினமும் ஒரே மாதிரியான உணவை தராமல், ஒவ்வொரு நாளும் ஒரு வித்யாசம் செய்து உங்கள் குழந்தைக்கு மதிய உணவை கட்டிக் கொடுங்கள். இன்று என்ன உணவு மதியத்திற்கு இருக்கும் என்ற ஆர்வத்தையும் அவனிடத்தில் உண்டாக்குங்கள். குறிப்பாக நீங்கள் கொடுக்கும் உணவு ருசியாக இருக்க வேண்டும். அவன் விரும்பும்படி சுவை குறையாமல், ரசித்து உண்ணும் வகையில் இருக்க வேண்டும். இந்த ஆர்வம், அவன் மிச்சம் வைக்காமல் உண்ணத் தூண்டும்
  • பானங்கள். உங்கள் குழந்தைக்கு தினமும் ஒரு பானம், சிற்றுண்டி நேரத்திலோ அல்லது மதிய உணவிற்கு பின் அருந்தவோ கொடுங்கள். இதனால், அவனுக்கு முழுமையாக உண்ட ஒரு உணர்வு வருவதோடு, அந்த நாளின் அடுத்த பாதியை நல்ல சக்தியோடும், உற்சாகத்தோடும் கடத்த உதவும். எலுமிச்சைபழ பானம், புதினா பானம், மோர், ஆரஞ்சு பழச்சாறு, இஞ்சி-வெல்லம் பானம் போன்று புதுமையாக ஒவ்வொரு நாளும், ஆரோக்கியமான வீட்டில் தயார் செய்த இரசாயனம் கலக்காத பானங்களை செய்து தாருங்கள்.
pixabay

முடிந்த அளவு நீங்கள் தரும் சமைத்த உணவு மதிய வேளை வரை சூடாக இருக்குமாறு ஒரு உணவு பெட்டியில் வைத்துக் கொடுப்பது, அவன் இப்போது சமைத்த உணவை உண்ணும் உணர்வை கொடுப்பதோடு, ஈடுபாட்டுடன் சாப்பிடவும் தூண்டும்   
 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.