வீட்டிலேயே தலைமுடி நன்கு வளர எப்படி தைலம் செய்வது? பயனுள்ள குறிப்புகள்

வீட்டிலேயே தலைமுடி நன்கு வளர எப்படி தைலம் செய்வது? பயனுள்ள குறிப்புகள்

இன்று அதிகரிக்கும் அழுத்தம் நிறைந்த உலகத்திலும், வாழ்க்கை முறையிலும், பல உடல் உபாதைகள் பத்திரிக்கைக் கொடுத்து அழைக்காமலே வந்து உடலில் குடியேறி விடுகின்றது. இது ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டும் பாதிப்பதில்லை, மாறாக அவரது அழகு, தோற்றம் மற்றும் தலை முடியின் வளர்ச்சியையும் அதிகம் பாதிக்கின்றது. என்னதான் நாம் தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை, சத்துக்கள் இல்லாத உணவு என்று காரணங்களை பட்டியலிட்டு கூறினாலும், இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டியதும் நம் கடமையே.

நல்ல ஆரோக்கியமான தலைமுடி ஒருவரின் அழகை மட்டுமல்லாது அவரது தன்னம்பிக்கையும் அதிகப்படுத்துகின்றது. ஆனால் கடைகளில் கிடைக்கும் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்த தைலங்கள்(oil) எதிர்பார்க்கும் பலனைத் தருவதில்லை. மேலும் இதில் பல இரசாயனங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இது பல பக்கவிளைவுகளை காலப்போக்கில் உண்டாக்கும்.

எனினும், உங்களுக்கு இது குறித்த கவலை வேண்டாம். இப்போது நீங்களாகவே வீட்டில் உங்களுக்கான தையலத்தை செய்து விடலாம்.

pixabay

இனிகே உங்களுக்காக எளிமையான, ஆனால் பலனுள்ள குறிப்புகள்:

எளிய முறையில் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்த தைலம்:

தேவையான் பொருட்கள்
சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணை ஒரு கப்
சிறிது கருவேப்பிள்ளை இலைகள்
சிறிது வெட்டி வேர் மற்றும் செம்பரித்தி பூக்கள் (புதிய பூக்கள் அல்லது உலர்ந்த பூக்கள்)

செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணையை ஊற்றி சூடு செய்ய வேண்டும்
இதனுடன் சிறிது பச்சை செம்பரத்தி பூக்கள் அல்லது உலர்ந்த பூக்கள் மற்றும் கருவேப்பிள்ளை இலைகளை சேர்த்து காய வைக்க வேண்டும்
எண்ணை நன்கு கொதி நிலைக்கு வந்தவுடன் இறக்கி விடவும்
அப்படியே நன்கு ஆறும் வரை வைத்து பின் குளிர்ந்த பின் ஒரு குப்பியில் ஊற்றி பயன்படுத்தலாம்
இதை நீங்கள் தினமும் பயன்படுத்தி வரும் போது தலைமுடி நன்கு வளரத் தொடங்கும், முடி உதிரவும் குறையும்

போஷாக்குடன் அடர்ந்த தலைமுடி பெற – தைலம்
தேவையான பொருட்கள்

·         செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணை ஒரு கப்

·         5 தேக்கரண்டி வெந்தயம்

·         5 தேக்கரண்டி ஆவாரம் பூ (பச்சை பூக்கள் அல்லது உலர்ந்தது)

·         5 தேக்கரண்டி மருதாணி இலைகள் (பச்சை இலைகள் அல்லது உலர்ந்தது)

·         5 தேக்கரண்டி அளவு நறுக்கிய அருகம் புள்

·         1௦ கற்பூரவள்ளி இலைகள்

செய்முறை
தேங்காய் எண்ணையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்ய வேண்டும்
இதனுடன் மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும்
மிதமான சூட்டில் வைத்து எண்ணையை சூடு செய்ய வேண்டும்
கொதிக்க விடக் கூடாது, ஆனால் நன்கு சூடு செய்ய வேண்டும்
பின் அடுப்பில் இருந்து இறக்கி அப்படியே ஆற விட வேண்டும்
நன்கு குளிர்ந்த பின் ஒரு குப்பியில் வாடி கட்டி ஊற்றி வைத்து தினமும் பயன்படுத்தலாம்

Shutterstock

இந்த தைலம் தலைமுடி உதிர்வு, நரை முடி உண்டாவது, போன்றவற்றை போக்கி, நல்ல அடர்ந்த கூந்தலை பெறவும், போஷாக்கு பெறவும் உதவுகின்றது.

இந்த தையலத்தை நீங்கள் தினமும் இரவில் நன்கு தலையில் வேர் முதல் நுணி வரை தேய்த்து விட்டு உறங்க செல்லலாம். பின் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் தலைமுடியை சீயக்காய் போட்டு அலசலாம். அல்லது, நீங்கள் தலைக்கு குளிக்க செல்லவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாவது, சிறிது எண்ணையை/ தையலத்தை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி, மிதமாக சூடு செய்து, அந்த சூட்டுடன் தலை முடியின் வேரில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின் தலை முடி முழுவதும் தேய்க்க வேண்டும். பின் ஒரு டர்கி துண்டு எடுத்து அதை சுடு தண்ணீரில் நனைத்து நீரை பிழிந்து விட்டு, தலையை சுற்றி இறுக்கி கட்டி விடவும். பின் 2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் சீயக்காய் தேய்த்து தலை முடியை அலச வேண்டும்.

இப்படி செய்து வந்தால் நீங்கள் எதிர் பார்க்கும் பலனை விரைவில் பெறலாம். இது உங்கள் தலைமுடி நல்ல போஷாக்குடன்வளர உதவும். மேலும் அடர்த்தியான தலைமுடியையும் நீங்கள் பெறலாம். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.