தொலைதூரக் காதலர்கள் தங்கள் உறவை பிரச்னைகளின்றி தக்க வைத்து கொள்ள சில அறிவுரைகள்!

தொலைதூரக் காதலர்கள் தங்கள் உறவை பிரச்னைகளின்றி தக்க வைத்து கொள்ள சில அறிவுரைகள்!

நாளுக்கு நாள் டேட்டிங் காதல் அதிகரித்து கொண்டிருக்கும் இதே சூழலில்தான் ஆத்மார்த்தமான உண்மையான காதலும் நிறைந்திருக்கிறது. குறிப்பாக ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாமலேயே தங்கள் காதலை (relationships) உணர்வு பூர்வமாக வெளிப்படுத்து கொள்ளும் காதலர்களும் இருக்கின்றனர். தொலை தூரத்தில் இருந்து கொண்டும் தங்கள் காதலன்காதலியை நினைத்து உருகும் உண்மை காதலும் இன்றைய நவீன காலத்திலும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் காதலை பிணைப்புடன் கொண்டு செல்ல சில டிப்ஸ்.... 

வீடியோ கால்

தொலைதூரம் என்றாலே பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள்மிகவும் குறைவாக இருக்கும். எனவே தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறையாவது உங்கள் துணைக்கு வீடியோ கால் செய்து பேசிக் கொள்ளுங்கள். வீடியோ கால் பேசுவதை எந்த காரணத்திற்காகவும் ஒத்தி வைக்காதீர்கள். வாரம் மூன்று முறை என்பது எதிர்பார்ப்பை அதிகரிக்கும்.  

மகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகள்!

pixabay

வாய்ஸ் மெசேஜ்

உங்கள் துணையின் வேலையில் சிக்கல் அல்லது  ஏதேனும் மனச் சோர்வாக இருப்பதுபோல் தோன்றினால் அவருக்கு அன்பான சில வார்த்தைகளை வாய்ஸ் மெசேஜ் மூலம் அனுப்பி வையுங்கள். அவர் எந்த நேரத்திலும்  அதைக் கேட்டு மன ஆறுதல் அடையலாம். உங்களிடம் பேச முடியாத சூழலில் உங்கள் குரல் அவர்களுக்கு மன திடத்தை ஏற்படுத்தும். 

குறுஞ்செய்திகள்

தொலைதூரக் காதல் என்பது கிட்டதட்ட எப்போதும் கயிற்றில் நடப்பதை போன்றதுதான்.  ஒரு நாள் பேசுவதை தவிர்த்தாலும் சண்டை வர வாய்ப்புள்ளது. எனவே கவனமாக கையாள்வது மிகவும் அவசியம். அதிக வேலையாக இருந்தாலும் குறைந்தது ஐ லவ் யூ, குட் மார்னிங் போன்ற குறுஞ்செய்திகளையாவது பகிருங்கள்.

pixabay

சண்டை வேண்டாமே

காதலர்கள் குறுஞ்செய்தியில் சண்டையிடுவது வழக்கமாக அனைவரும் செய்யக் கூடியது. தொலைதூரக் காதலில் (ralationships) குறுஞ்செய்தியில் ஒருவரையொருவர் தவறாக புரிந்து கொள்ள நேரிடும். பார்க்கக் கூடிய தொலைவில் இருந்தால் கூட நேரில் சென்று சமாதானம் செய்யலாம். இதில் வாய்ப்புகள் குறைவு என்பதால் சண்டையை தவிர்ப்பது நல்லது. எந்த சண்டையாக இருந்தாலும் ஃபோனில் அழைத்துப் பேசி சண்டையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !

தகவல் பகிர்வு

தற்போது தொழில் நுட்பங்களின் வளர்ச்சி மிகப் பெரியது. எனவே உங்கள் துணை எப்போதும் உடன் இருப்பதை போல் உணரும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள். நீங்கள் ரசித்த வீடியோக்கள், புகைபடங்கள், சிரித்த வீடியோக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என எதுவாக இருந்தாலும் அதை வீடியோ எடுத்து உங்கள் காதலர்/காதலிக்கு அனுப்புங்கள். இது குழந்தைத் தனமாக இருந்தாலும் காதலில் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

pixabay

நேரம் தவறாமை

உங்கள் துணை குறிப்பிட்ட நேரத்திற்கு தினமும் ஃபோன் செய்பவராக இருந்தால் அந்த நேரத்தை எதற்காகவும் தவிர்க்காதீர்கள். ஒருவேலை தவிர்க்கமுடியாத வேலை இருக்கும் பட்சத்தில் அதை உடனே உங்கள் துணைக்குத் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் தொலைதூர உறவில் நேரங்கள் தான் முக்கியமாக கருதப்படுகிறது.

வீட்டிலேயே தலைமுடி நன்கு வளர எப்படி தைலம் செய்வது? பயனுள்ள குறிப்புகள்

தினமும் பேசுங்கள்

உங்கள் தொலைதூரத் துணை இருக்கும் இடத்தின் நேரமும் உங்கள் நேரமும் முன்னுக்குப் பின்னாக இருந்தால் அவர்களுடன் பேசுவது சற்று கடினம்தான். அதற்கு சிறந்த யோசனை உங்கள் மொபைல் ஃபோனில் அலாரம் செட் செய்து கொள்ளுங்கள். துணை வீட்டில் இருக்கும் நேரத்தில் தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் அவர்களுக்காக நீங்கள் செய்யும் முயற்சி காதலை அதிகரிக்க செய்யும்.

pixabay

பரிசுகள்

தொலை தூர காதலில் பார்த்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், பரிசுகள் அனுப்பி உங்களை நினைவுகூறலாம். உங்கள் துணை ஏதேனும் நல்லது செய்தால் அவரை பாராட்டி அவருக்கு பரிசுகளை அனுப்பி வைக்கலாம். சிறிய பரிசாக இருந்தால் கூட அது உங்கள் துணைக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருந்ததால் நல்லது. 

கிண்டல் செய்யுங்கள்

காதலர்கள் தங்களுக்குள் நகைச்சுவைகளை பரிமாறிக்கொள்வது அன்யோன்ய வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே உங்கள் துணையை நீங்கள் எப்போதும் கிண்டல் செய்யும் நபராக இருந்தால் அதைத் தொடருங்கள் என அந்த ஆய்வு கூறுகிறது. நீங்கள் தூரத்தில் இருந்தாலும் உங்களுக்குள் நீங்கள் செய்து கொண்ட நகைச்சுவைகள், கிண்டல்கள் நினைவுகளால் உங்களை ஒன்றிணைக்கும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.