அழகான பாதங்களை பெற வீட்டிலேயே இயற்கை பொருட்களை கொண்டு பெடிக்யூர் செய்யலாம்!

அழகான பாதங்களை பெற வீட்டிலேயே இயற்கை பொருட்களை கொண்டு  பெடிக்யூர் செய்யலாம்!

நமது மொத்தஉடலையும் தாங்கும் பாதங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். பாதங்களில் உள்ள நுண் துளைகள் வழியாக காலில் உள்ள அழுக்குகள் நம் ரத்தத்தோடு கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் பாதங்களை சுத்தம் செய்வது அவசியம். 

நாம் பாதங்களை அழகாக வைக்க வேண்டும் என்று நினைத்தாலே அழகு நிலையம் செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் அழகு நிலையம் சென்று தான் பெடிக்யூர் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்த படியே உங்கள்  பாதங்களை இயற்கை பொருட்களைக் கொண்டு பெடிக்யூர் (pedicure) செய்வது எப்படி என இங்கே காண்போம்.  

pixabay

பெடிக்யூர் (pedicure) செய்யும் முறை 1 :

முதலில் பாதம் நனையும் அளவுக்கு ஒரு  பவுலை எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர், கல் உப்பு, லெமன், ரோஸ் ஆயில் , ரோஸ் பெடல்ஸ் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் அதில் பத்து நிமிடங்கள் பாதங்களை ஊற வைக்க வேண்டும்.நெயில் கட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் நெயில் க்ளீனர் கொண்டு நகங்களின் ஓரங்களை சுத்தம் செய்ய வேண்டும். 

மன அழுத்தத்தில் இருந்து பெண்கள் விடுபட உதவும் ஸ்பா தெரபிகள் மற்றும் சில சிம்பிள் டிப்ஸ்கள்

ப்ரீஸ் செய்த தேங்காய் எண்ணையை  நகங்களில் தடவி புஷ்ஷர் கொண்டு தேவையற்ற தோல்களை நீக்கவும். இதனால் கால்விரல் நகங்கள் சீராகக் காணப்படும். உடலை தேய்த்து குளிக்கப் பயன்படுத்தப்படும் பீர்க்கங்காய் நாரில் ஷாம்புவை சேர்த்து, கால்களில் அழுத்தி தேய்க்கு வேண்டும். இப்படி செய்வதால் பாதத்தில் இருக்கும் அழுக்கள் அனைத்தும் (pedicure) நீங்கிவிடும். 

pixabay

இதன் பின்னர் ப்யூமிக் ஸ்டோன் கொண்டு காலை நன்றாக தேய்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை இவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் முட்டி முதல் பாதம் வரை நன்றாக மசாஜ் செய்து விட்டு கழுவி உலர விடுங்கள். 

பெடிக்யூர் (pedicure) செய்யும் முறை 2 :

ஒரு சிறிய பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரில் எடுத்து கொள்ள வேண்டும். இதில் எப்சம் உப்பு சேர்ந்து கரைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த நீரில் உங்கள் பாதங்களை வைத்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் கரைந்துள்ள உப்பு பாதங்களில் உள்ள இறந்து செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக்கும். சில நிமிடங்கள் கழித்து பாதங்களை ஸ்க்ரப் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து சுத்தமான துண்டை கொண்டு பாதங்களை துடைத்து விடுங்கள்.

pixabay

பெடிக்யூர் (pedicure) செய்யும் முறை 3 :

ஒரு அகலமான பக்கெட்டை எடுத்து அதில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி கொள்ளுங்கள். பாதங்கள் மூழ்கும் அளவு இருந்தால் போதும். அதில் கொஞ்சம் கற்றாழை ஜெல், லெமன், டீ ட்ரி ஆயில், ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலக்கவும். இப்பொழுது இந்த கலவையில் பாதங்களை வைத்து 20-25 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள். 

பிறகு ஒரு மென்மையான துண்டை எடுத்து பாதங்களை துடைத்து கொள்ளுங்கள். இறுதியாக மாய்ஸ்சரைசர் க்ரீம் அப்ளே செய்யுங்கள். கற்றாழை மற்றும் லெமன் நீர் பாதங்களில் உள்ள வெடிப்பை போக்கி பட்டு போன்ற மென்மையான பாதங்களை தருகிறது. 

சரும அழகிற்கு வாஸ்லினை பயன்படுத்தும் விதம் மற்றும் வீட்டிலேயே வாஸ்லின் தயாரிக்கும் முறை!

குறிப்பு: கால்கள் மற்றும் பாதங்கள் தாங்கக் கூடிய அளவுக்கு வெதுவெதுப்பான தண்ணீரையே (pedicure)  பயன்படுத்துதல் வேண்டும். ஒவ்வொரு முறையும் கால்களைச் சுத்தம் செய்ததும் தண்ணீரை மாற்ற வேண்டும்.

pixabay

பெடிக்யூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • உணர்ச்சிகளை சமநிலையாக்குவதற்கும், சீரான இரத்த ஒட்டத்திற்கும் உதவுகிறது.
  • உடலுக்கு நல்ல ரிலாக்ஸ் கொடுத்து நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது.
  • காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்கும்.

பாத வெடிப்புகள் பாடாய்படுத்துகிறதா? குளிர்காலம் தொடங்குமுன் குணப்படுத்தி விடலாம் வாருங்கள்

  • இறந்த செல்கள் நீங்கி தடிமனான ஸ்கின்கள் தன்மையை மாற்றி மிருதுவாக்கும். 
  • கால்கள் பளிச்சென எடுப்பாகவும், மென்மையாகவும் தெரியும்.
  • கால் வலி நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.